புதுக்கோட்டை - தமிழக மாவட்டங்கள்
வெள்ளைக்களிமண்:
விவசாயத்திற்கு லாயக்கற்ற, இரும்புச் சத்து அதிகம் கொண்ட இம்மண் 70,000 டன் அளவுக்கு பரவியுள்ளது. அறந்தாங்கி-புதுக்கோட்டை மார்க்கத்தில் கிடைக்கும் இம்மண் சிமெண்டு கலவைக்கு ஏற்றதாகும்.
ஆல்கலைன்:
இது கண்ணாடி வளையல்கள் செய்வதற்குச் சிறந்த மூலப்பொருள் ஆகும். இதைப் பல நாட்கள் உலையிலிட்டு, பிலிங்க் என்னும் பொருளைச் சேர்த்து கருமை நிறமாக்கி வளையல்கள் செய்ய வேண்டும். ஆனால் இந்த முறைக்கு செலவு அதிகமாவதால் இலாபகரமற்ற தொழிலாகக் கருதி கைவிடப்பட்டுள்ளது. ஆனால் தொழில் முனைவோர் இதை கண்ணாடி சம்பந்தமான வேறு தொழில்களுக்குப் பயன்படுத்தலாம்.
இல்மினைட்:
மிமிசல்-அதிராம்பட்டிணம் மார்க்கத்தில் இது கிடைக்கிறது. ஆனால் குறைந்த அளவே காணப்படுகிறது.
மைகா
புதுக்கோட்டை நகரப் பகுதியில் சில இடங்களில் மைகா கிடைப்பதாக 1903 ஆம் ஆண்டில் தெரியவந்தது. தக்க ஆய்வு மேற்கொண்டால், மேலும் இதைப் பற்றிய விவரம் தெரியவரும்.
காந்தக்கல்:
குளத்தூர் வட்டத்திலுள்ள மல்லம்பட்டியில் சுமார் 50,000 டன் காந்தக்கல் காணப்படுகிறது. இதில் 34 சதவீதம் இரும்பு உள்ளது. ஆனால் இன்னும் இது பொது உபயோகத்திற்கு வரவில்லை.
மீன்வளம்:
அறந்தாங்கி வட்டத்திலுள்ள ஏரிகளில் வெண்கெண்டை, அறிஞ்சான், காக்கா மீன், கருஞ்சேல், கருமுழிக் கெண்டை, சேல்கெண்டை, சல்லிக்கெண்டை, கெழுத்தி, கருபுத்தேளி, கொரவை, ஜிலேபிக் கெண்டை முதலியன மிகுதியாக கிடைக்கின்றன. கருஞ்சேல், சேல்கெண்டை, ஜிலேபிக் கெண்டை மீன் வகைகள் மீன்வளத் துறையினரால் புதுக்கோட்டை வட்டத்தில் 16 இடங்களிலும், அறந்தாங்கி வட்டத்தில் 35 இடங்களிலும் வளர்க்கப்படுகின்றன. பிறவகை மீன்கள் காவேரி சங்கமமாகும் இடத்தில் மிக அதிகமாகக் கிடைக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்தில் 28 மைல் நீள கடற்கரை ஓரங்களில் அமைந்த 18 கிராமங்கள் மீன்பிடி தொழிலில் சிறந்து விளங்குகின்றன. அவையாவன: காட்டுமாவடி, பிரதாபிராமன் பட்டினம், கிருஷ்ணாஜி பட்டினம், திருமங்கலம் பட்டினம், வடக்கு அம்மா பட்டினம், சீதாராமப்பட்டினம், அம்மா பட்டினம், புதுக்குடி, ஆயிப்பட்டினம், கோட்டைப் பட்டினம், ஜகதாப்பட்டினம்,கோபாலப்பட்டினம், அய்யம்பட்டினம், புதுப்பட்டினம், அரசனேரி, முத்துக்குடா முதலியன இப்பகுதியில் சுமார் 10,000க்கு மேற்பட்டோர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மீன், இறால் இவைகளைப் பதப்படுத்தும் நிலையம் மணமேல்குடியில் 1.54 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. மீனும் இறாலும் பனிக்கட்டிகளால் மூடப்பட்டு அறந்தாங்கி, பட்டுக்கோட்டை வழியாகப் பல ஊர்களுக்கும் இரயில் மூலம் அனுப்பப்படுகின்றன. கோட்டைப் பட்டினம், ஜகதாப்பட்டினம் கடற்கரைகளில் இறால்கள் மிகுதியாகக் கிடைக்கின்றன. புதிய மீன்பிடிப் பகுதிகளையும், அதிகமாக மீன் கிடைக்கக்கூடிய இடங்களையும், அதிகமாக பிடிபடும் மீன் இனங்களையும் அறிய வருவதற்காக 1975 ஆம் ஆண்டு மல்லிப்பட்டிணம் அருகில் மீன்பிடி ஆராய்ச்சி நிலையம் ஒன்றை மீன்வளத்துறையினர் கட்டியுள்ளனர். 465 ச.கி.மீ. பரப்பளவுக்கு இரண்டு இயந்திரப் படகுகளைக் கொண்டு புதுக்கோட்டை, அறந்தாங்கிக் கடற்கரைப் பகுதிகளில் இந்நிலையம் பலவித ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. அம்மாப்பட்டினத்தில் நாட்டுப்படகுக் கட்டும் நிலையம் ஒன்று செயல்படுகிறது.மீன்பிடிக்கும் தொழிலில் பர்வதராஜ குலத்தைச் சேர்ந்த இந்துக்களும், ராவுத்தர், மரைக்காயர் பிரிவுகளைச் சேர்ந்த முஸ்லிம்களும், கள்ளர் இனத்தைச் சேர்ந்த கிறித்துவர்களும் ஈடுபட்டுள்ளனர். இத்தொழில் செய்வோரில் கல்வியறிவு பெற்றோர் மிக மிகக் குறைவு.
சத்தியமூர்த்தி |
எழுத்தாளர் அகிலன், விடுதலைப் போராட்ட வீரர் சத்தியமூர்த்தி, குழந்தை எழுத்தாளர் அழ. வள்ளியப்பா, கல்வியாளர் முத்துலட்சுமி அம்மாள், திரைப்பட இயக்குனர் ப.நீலகண்டன், திரைப்பட நடிகரும், இயக்குனருமான பி.கே. ராஜா சாண்டோ, நடிகர்கள் பி.யு. சின்னப்பா, ஏ.வி.எம். ராஜன் போன்றோர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்து புகழ்பெற்றோர் ஆவர்.
பொது விவரங்கள்:
சுகாதாரம்: அரசு மருத்துவமனைகள்-12; ஆரம்ப சுகாதார மையங்கள்-55; துணை சுகாதார மையங்கள்-241.
வங்கிகள்: 90 வங்கிகள் உள்ளன. காவல் நிலையங்கள்: மொத்தம் 35 காவல் நிலையங்கள். காவலர்கள்: ஆண்-1059 பேர்; பெண்-20 பேர். அனைத்து மகளிர் காவல் நிலையம் - 2 (புதுக்கோட்டை, அறந்தாங்கி)
தபால் நிலையங்கள்: மொத்தம் 329.
பதிவுப் பெற்ற வாகனங்கள்: 23,450.
சாலை நீளம்: 3,802.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புதுக்கோட்டை - Pudukkottai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - புதுக்கோட்டை, பட்டினம், அறந்தாங்கி, மீன், தமிழக, மாவட்டங்கள், நிலையம், tamilnadu, கிடைக்கின்றன, தொழிலில், கெண்டை, வட்டத்தில், காவல், தமிழ்நாட்டுத், மீன்பிடி, நிலையங்கள், தகவல்கள், கோட்டைப், ஈடுபட்டுள்ளனர், அம்மா, ஜகதாப்பட்டினம், திரைப்பட, வங்கிகள், மொத்தம், பேர், | , மையங்கள், சுகாதார, பெற்றோர், சத்தியமூர்த்தி, எழுத்தாளர், அதிகமாக, ஜிலேபிக், கண்ணாடி, வளையல்கள், இதைப், மார்க்கத்தில், இம்மண், pudukkottai, districts, information, காணப்படுகிறது, மைகா, கருஞ்சேல், சேல்கெண்டை, முதலியன, பொது, சுமார், காந்தக்கல், வட்டத்திலுள்ள, இடங்களிலும்