புதுக்கோட்டை - தமிழக மாவட்டங்கள்
வேறு
சிலர் சேர, சோழ, பாண்டியர்களால் எழுப்பப்பட்டதால் இப்பெயர்
பெற்றதென்பர். மற்றும் சிலரோ பிரம்மா, விஷ்ணு, சிவன்
இவர்களுக்காக இக்கோயில் கட்டப்பட்டதால் இப்பெயர் வழங்கலாயிற்று
என்பர். இவ்வூரிலுள்ள முச்சுக்கொண்டேஸ்வரர் கோயில் முற்காலச்
சோழர் கால ஆலயமாகும். பல்லவ கலை அமைப்பில் லிங்கம் கலை
வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது மற்றும் இவ்வூரிலுள்ள ஜவஹர்
கோவில் சிவாலயமாகும். ஐவர் கோயிலுக்கு சில மீட்டர் தூரத்தில்
நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் பல சோழர் காலச் சிற்பங்கள்
கண்டெடுக்கப் பெற்றன. அவை புதுக்கோட்டை, சென்னை
அருங்காட்சியங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது ஒரு
சுற்றுலாத் தலமாகும்.
விராலிமலை கோயில் |
விறலி (நாட்டியமாடும் பெண்) மலையே விராலி மலை என்று திரிந்ததாகவும் கூறுவர். விராலூர் மலை என்பது விராலிமலை என அழைக்கப்படுகிறது. புதுக்கோட்டையிலிருந்து 42 கி.மீ. தொலைவில் இது அமைந்துள்ளது. இம்மலையில் சுப்பிரமணியர் கோயில் உள்ளது. நூற்றுக்கணக்கான மயில்கள் இம்மலையில் காணப்படுகின்றன. இத்தலம் அருணகிரிநாதரால் பாடப்பெற்றது. இது ஒரு சுற்றுலாத்
தலமாகும்.
திருவரங்குளம் |
புதுக்கோட்டையிலிருந்து 25 கி.மீ. தொலைவில் புதுக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு ஹரிதீர்தீஸ்வரர் கோயில் உள்ளது. சிற்பங்களுடன் விளங்கும் இக்கோயிலின் நடராசர் சிலை தற்சமயம் டில்லி தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சோழ, பாண்டிய, நாயக்கர் காலத்தைச் சேர்ந்த 65 கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. பெரிய கோட்டை ஒன்று இருந்து அழிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஊராட்சி ஒன்றியம் இதுவேயாகும்.
திருமயம்:
திருமெய்யம் என்பதே இதன் பூர்வீகப் பெயராகும். அழகிய மெய்யர் இவ்வூர் பெருமாளின் பெயர். புதுக்கோட்டையிலிருந்து கிழக்கில் 12 மைல் தொலைவில் மதுரைக்கு போகும் சாலையில் இவ்வூர் உள்ளது.
திருமயம் |
ஆதிரங்கம் எனப்படும் 'வைணவ ஆலயம்' இவற்றில் ஒன்று. இது திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்ற தலமாகும். சிவாலயத்தில் இசை சம்பந்தமான பல அபூர்வ செய்திகளைக் கூறும் கல்வெட்டுகளும் உள்ளன. சிவாலயத்தில் உள்ள லிங்கோத்பவர் மிக உயரமானதாகும். இவ்விரு கோவில்களும் இன்று நலிந்த நிலையில் பராமரிப்பற்று உள்ளன. இவ்வூர் பிரமுகர்கள் 'திருமெய்யர் அறக்கட்டளை' என்ற அமைப்பை ஏற்படுத்தி பராமரிப்பு வேலைகளை ஆற்றத் துவங்கியுள்ளனர். தீரர் சத்தியமூர்த்தி இவ்வூரில் பிறந்தவர்.
தேனீ மலை:
புதுக்கோட்டையிலிருந்து 31 கி.மீ. தொலைவில் திருமயம் வட்டத்தில் உள்ளது. இவ்வூர் சுப்ரமணியர் ஆலயம் பழம்பெருமை பெற்ற தலம். மலையின் கிழக்குச் சரிவில் ஆண்டார்மடம் எனும் குகைக் கோயில் இருக்கிறது. ஜைனக் கலாச்சாரம் இப்பகுதியில் பரவி இருந்தமைக்குக் கல்வெட்டு ஆதாரம் காணப்படுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புதுக்கோட்டை - Pudukkottai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - புதுக்கோட்டை, கோயில், உள்ளது, இவ்வூர், புதுக்கோட்டையிலிருந்து, மாவட்டங்கள், tamilnadu, தொலைவில், தமிழக, தலமாகும், விராலிமலை, திருமயம், தமிழ்நாட்டுத், ஒன்று, தகவல்கள், | , திருவரங்குளம், சிவாலயத்தில், கோட்டை, வட்டத்தில், ஆலயம், சுற்றுலாத், சோழ, information, districts, pudukkottai, இப்பெயர், இவ்வூரிலுள்ள, அமைந்துள்ளது, வைக்கப்பட்டுள்ளது, சோழர், இம்மலையில்