புதுக்கோட்டை - தமிழக மாவட்டங்கள்
பேரையூர்:
புதுக்கோட்டைக்கு 15 கி.மீ. தொலைவில் திருமயம் வட்டத்தில் அமைந்துள்ளது. பேரையூரில் நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் வரிசை வரிசையாக நாகக் கற்சிலைகள் புதையுண்டுள்ளன. இக்கோயில் அருகில் உள்ள குளம் குறிப்பிட்ட அளவு நிறைந்ததும், வீசும் காற்றால் ஒருவித இசை ஒலி எழும்புகிறது. இவ்வித இனிய இசை நாதம் ஒரிரு நாட்கள் தொடர்ந்து கேட்பதுண்டு. ஆதிசேஷன் சிவனை இத்தகைய நாதவெள்ளத்தால் வழிபடுவதாகக் கூறப்படுகிறது. 13ஆம் நூற்றாண்டுச் சோழர், பாண்டியர் கல்வெட்டுக்கள் நிறைய காணப்படுகின்றன. இக்கோயில் பிரகதாம்பாள் உருவம் விஜய நகர அரசர் கால கலைச் சிறப்பைப் பெற்றுத் திகழ்கிறது. பனை ஓலை விசிறிகளுக்கு இவ்வூர் புகழ்பெற்றதாகும்.
பள்ளிவாசல்:
இவ்வூர் புதுக்கோட்டையிலிருந்து 35 கி.மீ. தொலைவில் திருமயம் வட்டத்தில் அமைந்துள்ளது. காட்டுபாவா பள்ளிவாசல் என்பது இயற்பெயர். கிழவர் சேதுபதியால் இரண்டு ஏரிகளும் பெரிய நிலப்பரப்பும் இக்கோயில் கட்டுவதற்காக வழங்கப்பட்டது. இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.
நெடுங்குடி:
புதுக்கோட்டையிலிருந்து 35 கி.மீ. தொலைவில், திருமயம் வட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவாலயமும், இங்கு நடத்தப்படும் தேர் திருவிழாவிற்கு ஏராளமான மக்கள் கூடுவதும் இவ்வூருக்கு பெருமை சேர்ப்பனவாகும்.
நார்த்தாமலை குகைக்கோயில் |
புதுக்கோட்டையிலிருந்து 19 கி.மீ. தொலைவில் குளத்தூர் வட்டத்திலுள்ளது. ஒன்பது சிறிய குன்றுகள் அமைப்பாக காணப்படும் இடம் நார்த்தாமலை. ஒரு குடைவரைக் கோயிலையும் சேர்த்து இங்கு சில பழங்காலத்திய கற்கோயில்கள் உள்ளன. மைய மண்டபத்தில் கைதேர்ந்த சிற்பத்திறனுடன் வடிவமைக்கப்பட்ட ஆறு விஷ்ணு சிலைகள் உள்ளன. விஜயாலயா சோழீச்சுவரம் கோயிலுக்கு முன்னால் தெற்கில் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குகைக்கோயில் ஒன்று சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. விஜயாலயன் பிற்காலச் சோழர்களில் முதலாமவன். சிற்பங்கள் அடங்கிய இந்த சிவன் கோயில் சோழர்களின் ஆரம்பகால படைப்புகளில் ஒன்றாகும். விஜய சோழீச்சுவரம் கோயிலிலும் சுற்றுப்புறங்களிலும் இறை உருவங்கள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இவை 17ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட கால ஓவியங்களாகும். கடம்பர் மலையில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட திருக்கடம்பூர் உடைய நாயனார் கோயில் உள்ளது. இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.
குடுமியான் மலை:
குடுமியான் மலை |
இங்குள்ள சிவன் கோவில் பல கல்வெட்டுகளையும் அழகான சிற்பங்களையும் தாங்கி நிற்கிறது. எட்டு நாண்களை உடைய பரிவதினி எனும் இசைக்கருவியைக் கொண்டு மகேந்திரவர்மன் பல்லவன் இசை பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்ததைக் குறித்து ஒரு கல்வெட்டு கூறுகிறது. சிதிலமடைந்த நிலையில் ஆயிரங்கால் மண்டபம் கோயிலுக்கு முன்னே உள்ளது. உள் மண்டபம் விஜயநகர காலத்து ஓவியங்களால் நிறைந்துள்ளது. உள் மகா மண்டபம் சோழர் கால கலைச் சிறப்பையும், கோபுரம் பல்லவர் கால கலைச்சிறப்பையும் பெற்று விளங்குகின்றன. மலை மேல் இருக்கும் மேலக்கோயிலின் பல இடங்களில் சோழர் கால கல்வெட்டுகள் உள்ளன. இது ஒரு சுற்றுலாத் தலமாகும். இது புதுக்கோட்டையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் தொலைவில் குளத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. தமிழக அரசின் மிகப்பெரும் விவசாயப் பண்ணையான அண்ணா பண்ணை இங்கு அமைந்துள்ளது.
பைரவர் சிலை |
புதுக்கோட்டையிலிருந்து 38 கி.மீ. தொலைவில் குளத்தூர் வட்டத்தில் உள்ளது. இங்குள்ள கோயிலின் முன் மண்டபம் சோழர் காலத்தைச் சேர்ந்தது. கருங்கற்களால் அமைந்துள்ளது. உள் மண்டபம் விஜயநகர அரசர் காலத்தது. சிவப்புக் கற்களால் அமைந்துள்ளது. இங்கு சோழர், பாண்டியர் காலத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கோயிலில் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறந்த சிற்ப வேலைபாடுகளுடன் உயரமான பைரவர் சிலை உள்ளது.
திருக்கோகர்ணம்:
இவ்வூர் புதுக்கோட்டையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு மகேந்திரவர்ம பல்லவன் கட்டிய குடைவரைக் கோயில் உள்ளது. இங்குள்ள அருங்காட்சியகத்தில் புவியியல், விலங்கியல், மானுடவியல், கல்வெட்டியல், வரலாறு மற்றும் கலை தொடர்பான பிரிவுகள் உள்ளன. இதற்கருகில் உள்ள குமாரமலையில் சுப்பிரமணிய சுவாமி மலைக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புதுக்கோட்டை - Pudukkottai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தொலைவில், அமைந்துள்ளது, உள்ளது, புதுக்கோட்டையிலிருந்து, மண்டபம், வட்டத்தில், சோழர், இங்கு, தமிழக, கோயில், புதுக்கோட்டை, சுற்றுலாத், இங்குள்ள, தலமாகும், மாவட்டங்கள், tamilnadu, குளத்தூர், நார்த்தாமலை, இவ்வூர், திருமயம், இக்கோயில், தகவல்கள், தமிழ்நாட்டுத், குடுமியான், உடைய, 9ஆம், நூற்றாண்டைச், சிவன், pudukkottai, பைரவர், சிலை, | , கல்வெட்டுகள், காலத்து, கோயிலுக்கு, விஜயநகர, பல்லவன், districts, அரசர், கலைச், விஜய, காணப்படுகின்றன, பாண்டியர், பள்ளிவாசல், இக்கோயிலில், உள்ள, குடைவரைக், குகைக்கோயில், information, சுவாமி, சோழீச்சுவரம்