புதுக்கோட்டை - தமிழக மாவட்டங்கள்
முக்கிய ஊர்கள்:
அம்புக்கோயில்:
ஆலங்குடி வட்டத்தைச் சேர்ந்த இவ்வூர் புதுக்கோட்டையிலிருந்து 43 கி.மீ. தொலைவில் உள்ளது. சங்க இலக்கியமான அகநானுறில் இவ்வூர் அலும்பில் எனக் குறிப்பிடப்படுகிறது. கல்வெட்டுச் சான்றுகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. அலும்பில் என்பதே இன்று அம்புக்கோயில் என்று அழைக்கப்படுகிறது. புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் சக்கரவர்த்தி இங்கு குடியிருந்ததாக 1210 ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று கூறுகிறது.
ஆவுடையார் கோயில் |
புதுக்கோட்டையிலிருந்து 49 கி.மீ. தொலைவிலுள்ள இவ்வூர் அறந்தாங்கி வட்டத்திலுள்ளது. இங்குள்ள கோயில் பெயரே ஊர் பெயராய் அமைந்துள்ளது. இது அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலிய சைவ சமயக் குரவர்களால் பாடப்பெற்ற தலமாகும். இத்தலப் பெருமையை திருப்பெருந்துறை புராணமும், திருவாசகமும் விரித்துரைக்கின்றன. உருவமற்ற வழிபாட்டு முறை இக்கோயிலில் பின்பற்றப்பட்டு, இறைவுருவற்ற மூலத்தானத்தில் பூசைகள் நடைபெறுகின்றன. இவ்வழிபாட்டு முறைக்கு ஆதரவாக கோயிலில் சிறப்பு வாய்ந்த சிற்பங்களும் ஓவியங்களும் காணப்படுகின்றன. இவ்வூர்ச் சிவன் கோயில் காலங்காலமாக சைவ வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது. கண்கவர் ஓவியங்களும், சிற்பங்களும், கோயிலின் வடிவமைப்பும் இக்கோயிலுக்குப் பெருமை சேர்க்கின்றன. இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.
ஆவூர் தேவாலயம் |
புதுக்கோட்டையிலிருந்து 42 கி.மீ. தொலைவிலுள்ள இக்கிராமம் குளத்தூர் வட்டத்திலுள்ளது. இங்கு வாழ்வோரில் பெரும்பாலோர் கிறித்துவர்கள். 1697ல் தந்தை ஜான் வெனன்டியஸ் பவுக்கெட் என்பவரால் கட்டப்பட்ட தேவாலயம் ஒன்று இங்குள்ளது. இது ஒரு சுற்றுலாத் தலமாகும். ஈஸ்டர் பெருநாளையொட்டி கிறித்துவர்கள் நடத்தும் சிலுவைப்பாடுகளின் நாடகம் 'ஆவூர் பாஸ்கா' புகழ்பெற்றதாகும்.
கீழநிலை:
புதுக்கோட்டையிலிருந்து 33 கி.மீ. தொலைவிலுள்ள இவ்வூர் திருமயம் வட்டத்திலுள்ளது. சோழர், பாண்டியர் ஆட்சிக் காலத்தில் போர்ப்படைகள் தங்கும்
கீழநிலை கோட்டை |
கொடும்பாளூர்:
மூவர் கோயில் |
பெரிய புராணம் இவ்வூரை கோனாட்டுடன் இணைந்த கோனாட்டுக் கொடி நகரம் எனச் சொல்கிறது. இங்குள்ள மூவர் கோயில் பெயர் பெற்றதாகும். இக்கோயிலில் சிற்பங்கள் கலை நயத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. ஆலயத்துள் லிங்க உருவமே இல்லை. சோழர், பல்லவர் கால கலைச் சிறப்பு கோயில் முழுவதும் காணப்படுகிறது. இக்கோயில் நந்தி சுமார் 7 அடி உயரம், 10 அடி நீளம், 11 அடி சுற்றளவுடையது. பல்லவ நரசிம்மன் கால கலை அமைப்பை இந்நந்தி கொண்டுள்ளது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் மூவராலும் கட்டப்பட்டதால் மூவர் கோயில் என்பர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புதுக்கோட்டை - Pudukkottai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கோயில், இவ்வூர், தொலைவிலுள்ள, வட்டத்திலுள்ளது, புதுக்கோட்டை, புதுக்கோட்டையிலிருந்து, tamilnadu, தமிழக, மாவட்டங்கள், தமிழ்நாட்டுத், சிற்பங்களும், காலத்தில், கொடும்பாளூர், சோழர், கீழநிலை, தகவல்கள், உள்ளது, மூவர், ஆவூர், தலமாகும், பாண்டியர், ஆட்சிக், கிறித்துவர்கள், அமைக்கப்பட்டுள்ளன, கலைச், தலைநகரான, | , கூறப்படுகிறது, குளத்தூர், அரசர், அம்மன், கோட்டை, இக்கோயிலில், அலும்பில், இங்கு, ஒன்று, அம்புக்கோயில், information, pudukkottai, districts, ஆவுடையார், இங்குள்ள, காணப்படுகின்றன, சுற்றுலாத், ஓவியங்களும், சிறப்பு, அப்பர், சுந்தரர், தேவாலயம்