முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஒன்பதாம் திருமுறை - திருவிசைப்பா, திருப்பல்லாண்டு » சேதிராயர் அருளிய திருவிசைப்பா
ஒன்பதாம் திருமுறை - திருவிசைப்பா - சேதிராயர் அருளிய திருவிசைப்பா
சேதிராயர் அருளிய திருவிசைப்பா
கோயில் - சேலுலாம்
279 |
சேலு லாம்வயல் தில்லையு ளீர்உமைச் சால நாள்அயன் சார்வதி னால்இவள் வேலை யார்விடம் உண்டுகந் தீர்என்று மால தாகும்என் வாணுதுலே. |
1 |
280 |
வாணு தற்கொடி மாலது வாய்மிக நாணம் அற்றனள் நான்அறி யேன்இனிச் சேணு தற்பொலி தில்லையு ளீர்உமை காணில் எய்ப்பிலள் காரிகையே. |
2 |
281 |
காரி கைக்(கு)அரு ளீர்கரு மால்கரி ஈரு ரித்தெழு போர்வையி னீர்மிகு கீரி யல்தில்லை யாய்சிவ னே என்று வேரி நற்குழலாள் இவள்விம்முமே. |
3 |
282 |
விம்மி விம்மியே வெய்துயிர்த்(து) ஆளெனா உம்மை யேநினைந்(து) ஏத்துமொன்(று) ஆகிலள் செம்ம லோர்பயில் தில்லையு ளீர்எங்கள் அம்மல் ஓதி அயர்வுறுமே. |
4 |
283 |
அயர்வுற்(று) அஞ்சலி கூப்பி அந்தோஎனை உயவுன் கொன்றையுந் தார்அருளாய்எனும் செயலுற் றூர்மதில் தில்லையு ளீர்இவண் மயலுற் றாள்என்றன் மாதிவளே. |
5 |
284 |
மாதொர் கூறன்வண் டார்கொன்றை மார்பன்என்(று) ஓதில் உய்வன்ஒண் பைங்கிளி யேஎனும் சேதித் தீர்சிரம் நான்முக னைத்தில்லை வாதித் தீர்என்மடக் கொடியையே. |
6 |
285 |
கொடியைக் கோமளச் சாதியைக் கொம்பிளம் பிடியை என்செய்திட் டீர்பகைத் தார்புரம் இடியச் செஞ்சீலை கால்வளைத் தீர்என்று முடியும் நீர்செய்த மூச்சறவே. |
7 |
286 |
அறவ னேஅன்று பன்றிப் பின்ஏகிய மறவ னேஎனை வாதைசெய் யேல்எனும் சிறைவண் டார்பொழில் தில்லையு ளீர்எனும் பிறைகு லாம்நுதற் பெய்வளையே. |
8 |
287 |
அன்ற ருக்கனைப் பல்லிறுத்(து) ஆனையைக் கொன்று காலனைக் கோளிழைத் தீர்எனும் தென்ற லார்பொழில் தில்லையு ளீர்இவள் ஒன்றும் ஆகிலள் உம்பொருட்டே. |
9 |
288 |
ஏயு மா(று)எழில் சேதிபர் கோன்தில்லை நாய னாரை நயந்துரை செய்தன தூய வாறுரைப் பார்துறக் கத்திடை ஆய இன்பம்எய் தியிருப்பரே. |
10 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேதிராயர் அருளிய திருவிசைப்பா - ஒன்பதாம் திருமுறை - திருவிசைப்பா - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - தில்லையு