முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஒன்பதாம் திருமுறை - திருவிசைப்பா, திருப்பல்லாண்டு » புருடோத்தம நம்பி அருளிய திருவிசைப்பா
ஒன்பதாம் திருமுறை - திருவிசைப்பா - புருடோத்தம நம்பி அருளிய திருவிசைப்பா
புருடோத்தம நம்பி அருளிய திருவிசைப்பா
1. கோயில் - வாரணி
257 |
வாரணி நறுமலர் வண்டு கிண்டு வாரணி வனமுலை மெலியும் வண்ணம் சீரணி மணிதிகழ் மாடம் ஓங்கு ஆரெனை அருள்புரிந்(து) அஞ்சல் என்பார் |
1 |
258 |
ஆவியின் பரம்என்றன் ஆதரவும் பாவிவன் மனமிது பையவே போய்ப் நீவியும் நெகிழ்ச்சியும் நிறையழிவும் ஆவியின் வருத்தம் இதாரறிவார் |
2 |
259 |
அம்பலத் தருள்நடம் ஆடவேயும் உம்பர்கள்வன்பழி யாளர்முன்னே வன்பல படையுடைய பூதஞ்சூழ என்பெரும் பயலமை தீரும்வண்ணம் |
3 |
260 |
எழுந்தருளாய் எங்கள் வீதியூடே கொழுந்தது வாகிய கூத்தனேநின் செழுந்தட மலர்புரை கண்கள் முன்றும் அழுந்தும்என் ஆருயிர்க்(கு) என்செய் கேனோ? |
4 |
261 |
அரும்புனல் அலமரும் சடையி னானை பெரும்புரம் எரிசெய்த சிலையின் வார்த்தை கருந்தட மலர்புரை கண்ட வண்டார் திருந்திய மலரடி நசையி னாலே |
5 |
262 |
தில்லையம் பலத்தெங்கள் தேவ தேவைத் எல்லைய தாகிய எழில்கொள் சோதி பல்லையார் பகந்தலை யோ(டு) இடறிப் அல்லினில் அருநடம் ஆடில் எங்கள் |
6 |
263 |
ஆருயிர் காவலிங்(கு) அருமை யாலே கூர்நுனை வேற்படைக்கூற்றம் சாயக் ஆரனி அமரர்கள் குறைவி லாதார் சீருயி ரேஎங்கள் தில்லை வாணா ! |
7 |
264 |
சேயிழை யார்க்கினி வாழ்வரிது தாயினும் மிகநல்லை என்றடைந்தேன் பாயிரம் புலியதள் இன்னுடையும் ஏயிவல் இழந்தது சங்கம் ஆவா |
8 |
265 |
எங்களை ஆளுடை ஈசனையோ பங்கயம் புரைமுகம் நோக்கி நோக்கிப் செங்கயல் புரைகண்ணி மார்கள் முன்னே அங்குன பணிபல செய்து நாளும் |
9 |
266 |
அருள்பெறின் அகலிடத்(து) இருக்கலா மென்று இருவரும் அறிவுடையாரின் மிக்கார் மருள்படு மழலைமென் மொழிவுமையாள் அருள்பெற அலமரும் நெஞ்சம் ஆவா |
10 |
267 |
ஆசையை அளவறுத் தார்இங் காரே? வாசநன் மலரணி குழல்மடவார் மாசிலா மறைபல ஓது நாவன் வாசக மலர்கள் கொண் டேத்த வல்லார் |
11 |
2. கோயில் - வானவர்கள்
268 |
வானவர்கள் வேண்ட வளர்நஞ்சை உண்டார்தாம் ஊனமிலா என்கை ஒளிவளைகள் கொள்வாரோ? தேனல்வரி வண்டறையும் தில்லைசிற்றம்பலவர் நானமரோ என்னாதே நாடகமே ஆடுவரே. |
1 |
269 |
ஆடிவரும் கார்அரவும் ஐம்மதியம் பைங்கொன்றை சூடிவருமா கண்டேன் தோள்வளைகள் தோற்றாலும் தேடியிமை யோர்பரவும் தில்லைசிற்றம் பலவர் ஆடிவரும் போதருகே நிற்கவுமே ஒட்டாரே. |
2 |
270 |
ஒட்டா வகைஅவுணர் முப்பரங்கள் ஓர்அம்பால் பட்டாங்(கு) அழல்விழுங்க எய்துகந்த பண்பினார் சிட்டார் மறையோவாத் தில்லைசிற்றம் பலவர் கொட்டா நடமாடக் கோல்வளைகள் கொள்வாரே. |
3 |
271 |
ஆரே இவைபடுவார் ஐயங் கொளவந்து போரேடி என்று புருவம் இடுகின்றார் தேரார் விழவோவாத் தில்லைசிற் றம்பலவர் தீராநோய் செய்வாரை ஓக்கின்றார் காணீரே. |
4 |
272 |
காணீரே என்னுடைய கைவளைகள் கொண்டார்தாம் சேணார் மணிமாடத் தில்லைசிற் றம்பலவர் பூணார் வனமுலைமெல் பூஅம்பால் காமவேன் ஆணாடு கின்றவா கண்டும் அருளாரே. |
5 |
273 |
ஏயிவரே வானவர்க்கும் வானவரே என்பாரால் தாயிவரே எல்லார்க்கும் தந்தையுமாம் என்பாரால் தேய்மதியம் சூடிய தில்லைச் சிற்றம் பலவர் வாயினைக் கேட்டறிவார் வையகத்தார் ஆவாரே. |
6 |
274 |
ஆவா ! இவர்தம் திருவடிகொண்டு அந்தகன்தன் மூவா உடலழியக் கொன்றுகந்த முக்கண்ணர் தேவா மறைபயிலும் தில்லைச்சிற்றம் பலவர் கோவா இனவளைகள் கொள்வாரோ என்னையே. |
7 |
275 |
என்னை வலிவாரார் என்ற இலங்கையர் கோன் மன்னும் முடிகள் நெரித்த மணவாளர் செந்நெல் விளைகழனித் தில்லைச் சிற்றம்பலவர் முன்னந்தான் கண்டறிவார் ஒவ்வார் இம் முத்தரே. |
8 |
276 |
முத்தர் முதுபகலே வந்தென்றன் இல்புகுந்து பத்தர் பலியிடுக என்றெங்கும் பார்க்கின்றார் சித்தர் கணம்பயிலும் தில்லைச்சிற்றம் பலவர் கைத்தலங்கள் வீசிநின் றாடுங்கால் நோக்காரே. |
9 |
277 |
நோக்காத தன்மையால் நோக்கிலோம் யாமென்று மாற்காழி ஈந்து மலரோனை நிந்தித்துச் சேக்காத லித்தேறும் தில்லைச்சிற்றம்பலவர் ஊர்க்கேவந்(து) என்வளைகள் கொள்வாரோ ஒண்ணுதலீர்! |
10 |
278 |
ஒண்ணுதலி காரணமா உம்பர் தொழுதேத்தும் கண்ணுதலான் தன்னைப் புருடோத்தமன் சொன்ன பண்ணுதலைப் பத்தும் பயின்றாடிப் பாடினார் எண்ணுதலைப் பட்டங்கு இனிதா இருப்பாரே. |
11 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
புருடோத்தம நம்பி அருளிய திருவிசைப்பா - ஒன்பதாம் திருமுறை - திருவிசைப்பா - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பலத்தெங்கள், கொள்வாரோ, அமரர்கள், அலமரும், ஆவியின், அம்பலத், எங்கள்