முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஒன்பதாம் திருமுறை - திருவிசைப்பா, திருப்பல்லாண்டு » கண்டராதித்தர் அருளிய திருவிசைப்பா
ஒன்பதாம் திருமுறை - திருவிசைப்பா - கண்டராதித்தர் அருளிய திருவிசைப்பா
கண்டராதித்தர் அருளிய திருவிசைப்பா
கோயில் - மின்னார் உருவம்
195 |
மின்னார் உருவம் மேல்விளங்க வெண்கொடி மாளி கைசூழப் பொன்னார் குன்றம் ஒன்று வந்து நின்றது போலும் என்னாத் தென்னா என்று வண்டு பாடும் தென்தில்லை அம்ப லத்துள் என்னார் அமுதை எங்கள் கோவை என்றுகொல் எய்துவதே? |
1 |
196 |
ஓவா முத்தீ அஞ்சு வேள்வி ஆறங்க நான்மறையோர் ஆவே படுப்பார் அந்த ணாளர் ஆகுதி வேட்டுயர் வார் மூவா யிரவர் தங்க ளோடு முன் அரங்(கு) ஏறிநின்ற கோவே உன்றன் கூத்துக் காணக் கூடுவ தென்று கொலோ. |
2 |
197 |
முத்தீ யாளர் நான் மறையர் மூவா யிர வர்நின்னோ(டு) ஒத்தே வாழும் தன்மை யாளர் ஓதிய நான்மறையைத் தெத்தே யென்று வண்டு பாடும் தென்தில்லை அம்பலத்துள் அத்தா உன்றன் ஆடல் காண அணைவதும் என்றுகொலோ? |
3 |
198 |
மானைப் புரையும் மடமென் நோக்கி மாமலை யாளோடும் ஆனைஞ் சாடும் சென்னி மேலோர் அம்புலி சூடும்அரன் தேனைப் பாலைத் தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துக் கோனை ஞானக் கொழுந்து தன்னைக் கூடுவது என்றுகொலோ? |
4 |
199 |
களிவான் உலகில் கங்கை நங்கை காதலனே ! அருளென்(று) ஒளிமால் முன்னே வரங்கி டக்க உன்னடியார்க்(கு) அருளும் தெளிவார் அமுதே ! தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துள் ஒளிவான் சுடரே ! உன்னை நாயேன் உறுவதும் என்றுகொலோ? |
5 |
200 |
பாரோர் முழுதும் வந்தி றைஞ்சப் பதஞ்சலிக்(கு) ஆட்டுகந்தான் வாரார் முலையாள் மங்கை பங்கன் மாமறையோர் வணங்கச் சீரான் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்(து) ஆடுகின்ற காரார் மிடற்றெங் கண்டனாரைக் காண்பதும் என்றுகொலோ? |
6 |
201 |
இலையார் கதிர்வேல் இலங்கைவேந்தன் இருபது தோளும்இற மலைதான் எடுத்த மற்ற வற்கு வாளடு நாள்கொடுத்தான் சிலையால் புரமூன்(று) எய்த வில்வி செம்பொனின் அம்பலத்துக் கலையார் மறிபொன் கையி னானைக் காண்பதும் என்றுகொலோ? |
7 |
202 |
வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும் ஈழமும் கொண்டதிறல் செங்கோற் சோழன் கோழி வேந்தன் செம்பியன் பொன்னணிந்த அங்கோல் வளையார் பாடி யாடும் அணிதில்லை அம்பலத்துள் எங்கோன் ஈசன் எம்மி றையை என்றுகொல் எய்துவதே. |
8 |
203 |
நெடுயா னோடு நான் முகனும் வானவரும் நெருங்கி முடியான் முடிகள் மோதி உக்க முழுமணி யின்திரளை அடியார் அலகி னால்தி ரட்டும் அணிதில்லை அம்பலத்துக் கடியார் கொன்றை மாலை யானைக் காண்பதும் என்றுகொலோ? |
9 |
204 |
சீரான் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத் தாழிதன்னைக் காரார் சோலைக் கோழி வேந்தன் தஞ்சையர் கோன்கலந்த ஆரா இன்சொற் கண்டரா தித்தன் அருந்தமிழ் மாலை வல்லார் பேரா வுலகிற் பெருமை யோடும் பேரின்பம் எய்துவரே. |
10 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
கண்டராதித்தர் அருளிய திருவிசைப்பா - ஒன்பதாம் திருமுறை - திருவிசைப்பா - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - என்றுகொலோ, வேந்தன், காண்பதும், செம்பொனின், அம்பலத்துள், அம்பலத்துக்