முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஒன்பதாம் திருமுறை - திருவிசைப்பா, திருப்பல்லாண்டு » பூந்துருத்திநம்பி காடநம்பி அருளிய திருவிசைப்பா
ஒன்பதாம் திருமுறை - திருவிசைப்பா - பூந்துருத்திநம்பி காடநம்பி அருளிய திருவிசைப்பா
பூந்துருத்திநம்பி காடநம்பி அருளிய திருவிசைப்பா
1. திருவாருர்
183 |
கைக்குவான் முத்தின் சரிவளை பெய்து முக்கண்நா யகராய்ப் பவனிபோந்(து) இங்ஙன் தக்கசீர்க் கங்கை அளவுமன்(று) என்னோ மிக்கசீர் ஆருர் ஆதியாய் வீதி |
1 |
184 |
பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப் தித்தியா இருக்கும் தேவர்காள் ! இவர்தம் சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த வித்துமாய் ஆருர் ஆதியாய் வீதி |
2 |
2. கோயில் - முத்து வயிரமணி
185 |
முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்மேல் தொத்து மிளிர்வனபோல் தூண்டு விளக்கேய்ப்ப் எத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில்தில்லை அத்தனுக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே. |
1 |
186 |
கடியார் கணம்புல்லர் கண்ணப்பர் என்றுன் அடியார் அமருலகம் ஆளநீ ஆளாதே முடியாமுத் தீவேள்வி முவாயி ரவரொடும் குடிவாழ்க்கை கொண்டுநீ குலாவிக் கூத் தாடினையே. |
2 |
187 |
அல்லியம் பூம்பழனத்(து) ஆமூர்நா வுக்கரசைச் செல்ல நெறிவகுத்த சேவகனே ! தென்தில்லைக் கொல்லை விடையேறி கூத்தா(டு) அரங்காகச் செல்வம் நிறைந்தசிற் றம்பலமே சேர்ந்தனையே. |
3 |
188 |
எம்பந்த வல்வினை நோய் தீர்த்திட்(டு) எமையாளும் சம்பந்தன் காழியர்கோன் தன்னையும் ஆட் கொண்டருளி அம்பந்து கண்ணாளும் தானும் அணிதில்லைச் செம்பொன்செய் அம்பலமே சேர்ந்திருக்கை ஆயிற்றே. |
4 |
189 |
களையா உடலோடு சேரமான் ஆருரன் விளையா மதமாறா வெள்ளானை மேல்கொள்ள முளையா மதிசூடி மூவா யிரவரொடும் அளையா விளையாடும் அம்பலம்நின் ஆடரங்கே. |
5 |
190 |
அகலோக மெல்லாம் அடியவர்கள் தற்சூழப் புகலோகம் உண்டென்று புகுமிடம்நீ தேடாதே புவலோக நெறிபடைத்த புண்ணியங்கள் நண்ணியசீர்க் சிவலோகம் ஆவதுவும் தில்லைச் சிற் றம்பலமே. |
6 |
191 |
களகமணி மாடம் சூளிகைசூழ் மாளிகைமேல் அளகமதி நுதலார் ஆயிழையார் போற்றிசைப்ப ஒளிகொண்ட மாமணிகள் ஓங்கிருளை ஆங்ககற்றும் தெளிகொண்ட தில்லைச் சிற் றம்பலமே சேர்ந்தனையே. |
7 |
192 |
பாடகமும் நூபுரமும் பல்சிலம்பும் பேர்ந்தொலிப்பச் சூடகக்கை நல்லார் தொழுதேத்தத் தொல்லுலகில் நாடகத்தின் கூத்தை நயிற்றுமலர் நாடோறும் ஆடகத்தால் மேய்ந்தமைந்த அம்பலம்நின் ஆடரங்கே. |
8 |
193 |
உருவத்(து) எரியுருவாய் ஊழிதோ றெத்தனையும் பரவிக் கிடந்தயனும் மாலும் பணிந்தேத்த இரவிக்கு நேராகி ஏய்ந்திலங்கு மாளிகைசூழ்ந்(து) அரவிக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே. |
9 |
194 |
சேடர் உறைதில்லைச் சிற்றம் பலத்தான்தன் ஆடல் அதியசத்தை ஆங்கறித்து பூந்துருத்திக் காடன் தமிழ் மாலை பத்தும் கருத்தறிந்து பாடும் இவைவல்லார் பற்றுநிலை பற்றுவரே. |
10 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
பூந்துருத்திநம்பி காடநம்பி அருளிய திருவிசைப்பா - ஒன்பதாம் திருமுறை - திருவிசைப்பா - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - றம்பலமே, ஆயிற்றே, அம்பலமே