முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » 46.திருப்படை எழுச்சி - பிரபஞ்சப் போர்
எட்டாம் திருமுறை - திருவாசகம் - 46.திருப்படை எழுச்சி - பிரபஞ்சப் போர்

46.திருப்படை எழுச்சி - பிரபஞ்சப் போர்
(தில்லையில் அருளியது)
கலிவிருத்தம்
(தில்லையில் அருளியது)
கலிவிருத்தம்
ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின் மானமா ஏறும்ஐயர் பதிவெண் குடைகவிமின் ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள் வானவூர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே. | 615 |
தொண்டர்காள் தூசிசெல்லீர் பக்தர்காள் சூழப்போகீர் ஒண்திறல் யோகிகளே பேரணி உந்தீர்கள் திண்திறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள் அண்டர்நா டாள்வோம் நாம் அல்லற்படை வாராமே. | 616 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
46.திருப்படை எழுச்சி - பிரபஞ்சப் போர் - எட்டாம் திருமுறை - திருவாசகம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வாராமே