முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » 4.போற்றித் திருஅகவல்
எட்டாம் திருமுறை - திருவாசகம் - 4.போற்றித் திருஅகவல்
4.போற்றித் திருஅகவல்
(தில்லையில் அருளியது)
நிலைமண்டில ஆசிரியப்பா
(தில்லையில் அருளியது)
நிலைமண்டில ஆசிரியப்பா
வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி முத்தா போற்றி முதல்வா போற்றி அத்தா போற்றி அரனே போற்றி உரைஉணர்வு இறந்த ஒருவ போற்றி விரிகடல் உலகின் விளைவே போற்றி அருமையில் எளிய அழகே போற்றி கருமுகி லாகிய கண்ணே போற்றி மன்னிய திருவருள் மலையே போற்றி என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல் சென்னியில் வைத்த சேவக போற்றி | 130 |
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி அழிவிலா ஆனந்த வாரி போற்றி அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி முழுவதும் இறந்த முதல்வா போற்றி மான்நேர் நோக்கி மணாளா போற்றி வான்அகத்து அமரர் தாயே போற்றி பார்இடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி | 140 |
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி அளிபவர் உள்ளதது அமுதே போற்றி கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி இடைமருது உறையும் எந்தாய் போற்றி சடைஇடைக் கங்கை தரித்தாய் போற்றி ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சீர் ஆர் திருவையாறா போற்றி அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண் ஆர் அமுதக் கடலே போற்றி | 150 |
ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி பாகம் பெண் உரு ஆனாய் போற்றி பராய்த் துறை மேவிய பரனே போற்றி சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி மற்று ஓர் பற்று இங்கு அறியோன் போற்றி குற்றாலத்து எம் கூத்தா போற்றி கோகழி மேவிய கோவே போற்றி ஈங்கோய் மலை எந்தாய் போற்றி பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி கடம்பூர் மேவிய விடங்கா போற்றி | 160 |
அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு அத்திக்கு அருளிய அரசே போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஏனக் குருளைக்கு அருளினை போற்றி மானக் கயிலை மலையாய் போற்றி அருளிட வேண்டும் அம்மான் போற்றி இருள் கெட அருளும் இறைவா போற்றி தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி | 170 |
களம் கொளக் கருத அருளாய் போற்றி அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி அத்தா போற்றி ஐயா போற்றி நித்தா போற்றி நிமலா போற்றி பத்தா போற்றி பவனே போற்றி பெரியாய் போற்றி பிரானே போற்றி அரியாய் போற்றி அமலா போற்றி மறையோர் கோல நெறியே போற்றி முறையோ தரியேன் முதல்வா போற்றி | 180 |
உறவே போற்றி உயிரே போற்றி சிறவே போற்றி சிவமே போற்றி மஞ்சா போற்றி மணாளா போற்றி பஞ்சு ஏர் அடியான் பங்கா போற்றி அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி இலங்கு சுடர் எம் ஈசா போற்றி சுவைத்தலை மேவிய கண்ணே போற்றி குவைப்பதி மலிந்த கோவே போற்றி மலை நாடு உடைய மன்னே போற்றி கலை ஆர் அரிகேசரியாய் போற்றி | 190 |
திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி அருவமும் உருவமும் ஆனாய் போற்றி மருவிய கருணை மலையே போற்றி துரியமும் இறந்த சுடரே போற்றி தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி தேளா முத்தச் சுடரே போற்றி ஆள் ஆனவர்களுக்கு அன்பா போற்றி ஆரா அமுதே அருளா போற்றி பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி | 200 |
தாளி அறுகின் தாராய் போற்றி நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி மந்திர மாமலை மேயாய் போற்றி எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி புலிமுலை புல் வாய்க்கு அருளினை போற்றி அலைகடல் மீ மிசை நடந்தாய் போற்றி கரும் குருவிக்கு அன்று அருளினை போற்றி இரும் புலன் புலர இசைந்தனை போற்றி | 210 |
படி உறப் பயின்ற பாவக போற்றி அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல் பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி ஒழவற நிறைந்த ஒருவ போற்றி செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி கழு நீர் மாலைக் கடவுள் போற்றி தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன் குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி | 220 |
புரம்பல் எரித்த புராண போற்றி பரம் பரம் சோதிப் பரனே போற்றி போற்றி போற்றி புயங்கப் பெருமான் போற்றி போற்றி புராண காரண போற்றி போற்றி சய சய போற்றி | 225 |
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
4.போற்றித் திருஅகவல் - எட்டாம் திருமுறை - திருவாசகம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - போற்றி, அருளினை, எந்தாய், முதல்வா, நாயேன், அருளாய், அருளும், அரியாய், அடியேன்