முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பதினோராம் திருமுறை » 12.10. திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை
பதினோராம் திருமுறை - 12.10. திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை

12.10. திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை
1409 |
புலனோ டாடித் திரிமனத்தவர் புனித நேசத் தொடுத மக்கையர் சுலவு சூலைப் பிணிகெ டுத்தொளிர் துணிவி னான்முப் புரமெரித்தவர் உலகின் மாயப் பிறவி யைத்தரும் ஒழிய வாய்மைக் கவிதை யிற்பல அலகில் ஞானக் கடலி டைப்படும் அடிய ரேமுக் கருளி னைச்செயும் 1 | |
1410 | திருநாவுக் கரசடி யவர்நாடற் கதிநிதி வருவானத் தரிவையர் நடமாடிச் சிலசில உருஞானத் திரள்மன முருகாநெக் கழுதுகண் குருவாகக் கொடுசிவ னடிசூடத் திரிபவர் 2 | |
1411 | குழிந்து சுழிபெறுநா பியின்கண் மயிர்நிரையார் அழிந்த பொசியதிலே கிடந்தி ரவுபகல்நீ கழிந்த கழிகிடுநாள் இணங்கி தயநெகவே பொழிந்த ருளுதிருநா வினெங்க ளரசினையே 3 | |
1412 | இலைமா டென்றிடர் பரியார் இந்திர நிலையா திச்செல்வ மெனவே கருதுவர் கலையார் சென்றரன் நெறியா குங்கரை சிலைமா டந்திகழ் புகழா மூருறை 4 | |
1413 | என்பட்டிக் கட்டிய இந்தப்பைக் குரம்பையை முன்பிட்டுச் சுட்டிவ ருந்திக்கெத் திக்கென வன்பட்டிப் பிட்டர்கள் துன்புற்றுப் புத்தியை அன்பர்க்குப் பற்றிலர் சென்றர்ச்சிக் கிற்றிலர் 5 | |
1414 | பித்தரசு பதையாத கொத்தைநிலை உளதேவு கைத்தரசு பதையாத சித்தமொடு சிவபூசை முத்திபெறு திருவாள னெற்றுணையின் மிதவாமல் பத்தரசு வசைதீர வைத்தகன தமிழ்மாலை 6 | |
1415 | பதிகமே ழெழுநூறு பகருமா கவியோகி அதிகைமா நகர்மேவி அருளினால் அமண்மூடர் நிதியரா குவர்சீர்மை உடையரா குவர்வாய்மை மதியரா குவர்ஈசன் அடியரா குவர்வானம் 7 | |
1416 | தாமரைநகும் அகவிதழ் தகுவன தூமதியினை ஒருபது கொடுசெய்த ஓமரசினை மறைகளின் முடிவுகள் ஆமரசுயர் அகநெகு மவருள 8 | |
1417 | அடிநாயைச் சிவிகைத் தவிசேறித் திரிவித் கொடியேனுக் கருளைத் திருநாவுக் கரசைக் பிடியாராப் பெறுதற் கரிதாகச் சொலும்அப் செடிகாயத் துறிகைச் சமண்மூடர்க் கிழவுற் 9 | |
1418 | சிவசம் பத்திடைத் தவஞ்செய்து கவசம் புக்குவைத் தரன்கழல் அவசம் புத்தியிற் கசிந்துகொ பவசங் கைப்பதைப் பரஞ்சுடர் 10 | |
1419 | நன்று மாதர நாவினுக் கரைசடி ஒன்று மாவது கண்டிலம் உபாயமற் என்றும் ஆதியும் அந்தமும் இல்லதோர் பொன்று வார்புகுஞ் சூழலிற் புகேம்புகிற் 11 | |
திருச்சிற்றம்பலம்
பதினோராம் திருமுறை முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
12.10. திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை - பதினோராம் திருமுறை - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் -