முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பதினோராம் திருமுறை » 5.8. போற்றித் திருக்கலி வெண்பா
பதினோராம் திருமுறை - 5.8. போற்றித் திருக்கலி வெண்பா

5.8. போற்றித் திருக்கலி வெண்பா
500 | திருத்தங்கு மார்பில் திருமால் வரைபோல் எருத்தத் திலங்கியவெண் கோட்டுப் - பருத்த குறுத்தாள் நெடுமூக்கிற் குன்றிக்கண் நீல நிறத்தாற் பொலிந்து நிலமேழ் - உறத்தாழ்ந்து பன்றித் திருவுருவாய்க் காணாத பாதங்கள் நின்றவா நின்ற நிலைபோற்றி - அன்றியும் புண்டரிகத் துள்ளிருந்த புத்தேள் கழுகுருவாய் அண்டரண்டம் ஊடுருவ ஆங்கோடிப் - பண்டொருநாள் காணான் இழியக் கனக முடிகவித்துக் கோணாது நின்ற குறிபோற்றி - நாணாளும் |
5 |
பேணிக்கா லங்கள் பிரியாமை பூசித்த மாணிக்கா அன்று மதிற்கடவூர்க் - காண வரத்திற் பெரிய வலிதொலைத்த காலன் உரத்தில் உதைத்தஉதை போற்றி - கரத்தாமே வெற்பன் மடப்பாவை கொங்கைமேற் குங்குமத்தின் கற்பழியும் வண்ணங் கசிவிப்பான் - பொற்புடைய வாமன் மகனாய் மலர்க்கணையொன் றோட்டியஅக் காமன் அழகழித்த கண்போற்றி - தூமப் படமெடுத்த வாளரவம் பார்த்தடரப் பற்றி விடமெடுத்த வேகத்தால் மிக்குச் - சடலம் |
10 | |
முடங்க வலிக்கும் முயலகன்தன் மொய்ம்பை அடங்க மிதித்தஅடி போற்றி - நடுங்கத் திருமால் முதலாய தேவா சுரர்கள் கருமால் கடல்நாகம் பற்றிக் - குருமாற நீலமுண்ட நீள்முகில்போல் நெஞ்சழல வந்தெழுந்த ஆலமுண்ட கண்டம் அதுபோற்றி - சாலமண்டிப் போருகந்த வானவர்கள் புக்கொடுங்க மிக்கடர்க்கும் தாருகன்தன் மார்பில் தனிச்சூலம் - வீரம் கொடுத்தெறியும் மாகாளி கோபந் தவிர எடுத்த நடத்தியல்பு போற்றி - தடுத்து |
15 | |
வரையெடுத்த வாளரக்கன் வாயா றுதிரம் நிரையெடுத்து நெக்குடலம் இற்றுப் - புரையெடுத்த பத்தனைய பொன்முடியும் தோளிருப தும்நெரிய மெத்தனவே வைத்த விரல்போற்றி - அத்தகைத்த வானவர்கள் தாங்கூடி மந்திரித்த மந்திரத்தை மேனவில ஓடி விதிர்விதிர்த்துத் - தானவருக் கொட்டிக் குறளை உரைத்த அயன்சிரத்தை வெட்டிச் சிரித்த விறல்போற்றி - மட்டித்து வாலுகத்தால் நல்லிலிங்க மாவகுத்து மற்றதன்மேல் பாலுகுப்பக் கண்டு பதைத்தோடி - மேலுதைத்தங் |
20 | |
கோட்டியவன் தாதை இருதாள் எறிந்துயிரை வீட்டிய சண்டிக்கு வேறாக - நாட்டின்கண் பொற்கோயில் உள்ளிருத்திப் பூமாலை போனகமும் நற்கோலம் ஈந்த நலம்போற்றி - நிற்க வலந்தருமால் நான்முகனும் வானவரும் கூடி அலந்தருமால் கொள்ள அடர்க்கும் - சலந்தரனைச் சக்கரத்தால் ஈர்ந்தரிதன் தாமரைக்கண் சாத்துதலும் மிக்கஅ தீந்த விறல்போற்றி - அக்கணமே நக்கிருந்த நாமகளை மூக்கரிந்து நால்வேதம் தொக்கிருந்த வண்ணம் துதிசெய்ய - மிக்கிருந்த |
25 | |
அங்கைத் தலத்தே அணிமானை ஆங்கணிந்த செங்கைத் திறத்த திறல்போற்றி - திங்களைத் தேய்த்ததுவே செம்பொற் செழுஞ்சடைமேல் சேர்வித்து வாய்த்திமையோர் தம்மைஎல்லாம் வான்சிறையில் - பாய்த்திப் பிரமன் குறையிரப்பப் பின்னும் அவர்க்கு வரமன் றளித்தவலி போற்றி - புரமெரித்த அன்றுய்ந்த மூவர்க் கமர்ந்து வரமளித்து நின்றுய்ந்த வண்ணம் நிகழ்வித்து - நன்று நடைகாவல் மிக்க அருள்கொடுத்துக் கோயில் கடைகாவல் கொண்டவா போற்றி - விடைகாவல் |
30 | |
தானவர்கட் காற்றாது தன்னடைந்த நன்மைவிறல் வானவர்கள் வேண்ட மயிலூரும் - கோனவனைக் சேனா பதியாகச் செம்பொன் முடிகவித்து வானாள வைத்த வரம்போற்றி - மேனாள் அதிர்த்தெழுந்த அந்தகனை அண்டரண்டம் உய்யக் கொதித்தெழுந்த சூலத்தாற் கோத்துத் -துதித்தங் கவனிருக்கும் வண்ணம் அருள்கொடுத்தங் கேழேழ் பவமறுத்த பாவனைகள் போற்றி - கவைமுகத்த பொற்பா கரைப்பிளந்து கூறிரண்டாப் போகட்டும் எற்பா சறைப்போக மேல்விலகி- நிற்பால |
35 | |
மும்மதத்து வெண்கோட்டுக் கார்நிறத்துப் பைந்தறுகண் வெம்மதத்த வேகத்தால் மிக்கோடி - விம்மி அடர்த்திரைத்துப் பாயும் அடுகளிற்றைப் போக எடுத்துரித்துப் போர்த்த இறைபோற்றி - தொடுத்தமைத்த நாண்மாலை கொண்டணிந்த நால்வர்க் கன் றால்நிழற்கீழ் வாண்மாலை ஆகும் வகையருளித் - தோள்மாலை விட்டிலங்கத் தக்கிணமே நோக்கி வியந்தகுணம் எட்டிலங்க வைத்த இறைபோற்றி - ஒட்டி விசையன் விசையளப்பான் வேடுருவம் ஆகி அசைய உடல்திரியா நின்று - வசையினால் |
40 | |
பேசு பதப்பாற் பிழைபொறுத்து மற்றவற்குப் பாசுபதம் ஈந்த பதம்போற்றி - நேசத்தால் வாயில்நீர் கொண்டு மகுடத் துமிழ்ந்திறைச்சி ஆயசீர் போனகமா அங்கமைத்து - தூயசீர்க் கண்ணிடந்த கண்ணப்பர் தம்மைமிகக் காதலித்து விண்ணுலகம் ஈந்த விறல்போற்றி - மண்ணின்மேல் காளத்தி போற்றி கயிலைமலை போற்றிஎன நீளத்தி னால்நினைந்து நிற்பார்கள் - தாளத்தோ டெத்திசையும் பன்முரசம் ஆர்த்திமையோர் போற்றிசைப்ப அத்தனடி சேர்வார்கள் ஆங்கு. |
45 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
5.8. போற்றித் திருக்கலி வெண்பா - பதினோராம் திருமுறை - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - போற்றி, வண்ணம், வானவர்கள், விறல்போற்றி