முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பதினோராம் திருமுறை » 12.8. ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்
பதினோராம் திருமுறை - 12.8. ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்

12.8. ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்
1359 |
அலையார்ந்த கடலுலகத் தருந்திசைதோ றங்கங்கே நிலையார்ந்த பலபதிகம் நெறிமனிதர்க் கினிதியற்றி ஈங்கருளி யெம்போல்வார்க் கிடர்கெடுத்தல் காரணமாய் ஓங்குபுகழ்ச் சண்பையெனும் ஒண்பதியுள் உதித்தனையே. செஞ்சடைவெண் மதியணிந்த சிவன்எந்தை திருவருளால் வஞ்சியன நுண்ணிடையாள் மலையரையன் மடப்பாவை நற்கண்ணி அளவிறந்த ஞானத்தை அமிர்தாக்கிப் பொற்கிண்ணத் தருள்புரிந்த போனகமுன் நுகர்ந்தனையே. தோடணிகா தினன்என்றும் தொல்லமரர்க் கெஞ்ஞான்றும் தேடரிய பராபரனைச் செழுமறையின் அகன்பொருளை அந்திச்செம் மேனியனை அடையாளம் பலசொல்லி உந்தைக்குக் காணஅரன் உவனாமென் றுரைத்தனயே. (இவை மூன்றும் நான்கடித் தாழிசை) வளமலி தமிழிசை வடகலை மறைவல முளரிநன் மலரணி தருதிரு முடியினை. கடல்படு விடமடை கறைமணி மிடறுடை அடல்கரி உரியனை அறிவுடை அளவினை. (இவை இரண்டும் அராகம்) கரும்பினு மிக் கினியபுகழ்க் கண்ணுதல்விண்ணவன்அடிமேல் பரம்பவிரும் புவியவர்க்குப் பத்திமையை விளைத்தனையே. பன்மறையோர் செய்தொழிலும் பரமசிவா கமவிதியும் நன்மறையின் விதிமுழுதும் ஒழிவின்றி நவின்றனையே. (இவை இரண்டும் இரண்டடித் தாழிசை) அணிதவத் தவர்களுக் கதிகவித் தகனும்நீ தணிமனத் தருளுடைத் தவநெறிக் கமிர்தம்நீ அமணரைக் கழுநுதிக் கணைவுறுத் தவனும்நீ தமிழ்நலத் தொகையினில் தகுசுவைப் பவனும்நீ (இவை நான்கும் நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்) மறையவர்க் கொருவன் நீ மருவலர்க் குருமு நீ நிறைகுணத் தொருவன் நீ நிகரில்உத் தமனும் நீ (இவை நான்கும் முச்சீர் ஓரடி அம்போதரங்கம்) அரியை நீ. எளியை நீ. அறவன் நீ. துறவன் நீ. பெரியை ந. உரியை நீ. பிள்ளை நீ. வள்ளல் நீ. (இவை எட்டும் இருசீர் ஓரடி அம்போதரங்கம்) எனவாங்கு (இது தனிச்சொல்) அருந்தமிழ் விரகநிற் பரசுதும் திருந்திய நிரைச்செழு மாளிகை நிலைதொறும் நிலைதொறும் உரைச்சதுர் மறையின் ஓங்கிய ஒலிசேர் சீர்கெழு துழனித் திருமுகம் பொலிவுடைத் தார்கெழு தண்டலை தண்பணை தழீஇக் (5) கற்றொகு புரிசைக் காழியர் நாத நற்றொகு கீர்த்தி ஞானசம் பந்த நின்பெருங் கருணையை நீதியின் அன்புடை அடியவர்க் கருளுவோய் எனவே. | 1 |
(இது சுரிதகம்)
1360 | வெண்பா எனவே இடர்அகலும் இன்பமே எய்தும் நனவே அரன்அருளை நாடும் - புனல்மேய செங்கமலத் தண்தார்த் திருஞான சம்பந்தன் கொங்கமலத் தண்காழிக் கோ. | 2 |
1361 | கட்டளைக் கலித்துறை கோலப் புலமணிச் சுந்தர மாளிகைக் குந்தளவார் ஏலப் பொழிலணி சண்பையர் கோனை இருங்கடல்சூழ் ஞாலத் தணிபுகழ் ஞானசம் பந்தனை நற்றமிழே போலப் பலபுன் கவிகொண்டு சேவடி போற்றுவனே. | 3 |
1362 | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் போற்று வார்இடர் பாற்றிய புனிதன் ஏற்ற வார்புகழ் ஞானசம் பந்தன் சேற்று வார்புனங் காவல் புரிந்தென் மாற்றம் நீர்எமக் கின்றுரை செய்தால் 4 | |
1363 | எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் நலமலி தரும்புவனி நிறைசெய்புகழ் இன்பம்நனி பொலமதில் இரும்புகலி அதிபதி விதம்பெருகு பலமலி தருந்தமிழின் வடகலை விடங்கன்மிகு சலமலி தருங்கமல சரண்நினைவன் என்றனது 5 | |
1364 | பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் வகைதகு முத்தமி ழாகரன் மறைபயில் திப்பிய வாசகன் திகைதிகை மட்டலர் வார்பொழில் திகழ்புக லிக்கர சாகிய மிகமத வெற்றிகொள் வாரண மிடைவரு டைக்குலம் யாளிகள் நகையெழி லிற்குற மாதுன தருமை நினைக்கிலள் நீயிவள் 6 | |
1365 | வாணில வும்புன லும்பயில் செஞ்சடை வண்கரு ணாகரனை சேணில வும்புகழ் மாளிகை நீடிய தென்புக லிக்கரசைத் நாணில வும்பழி யோகரு தாதய லானொரு காளையுடன் கேணில வுங்கிளி பாவையொ டாயமும் யாயெனை யும்மொழியக் 7 | |
1366 | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அறிவாகி இன்பஞ்செய் தமிழ்வாதில் வென்றந்த செறிமாட வண்சண்பை நகராளி யென்தந்தை நெறியால மண்டுன்றி முனைநாள்சி னங்கொண்டு வெறியார் மதந்தங்கு கதவா ரணங்கொன்ற 8 | |
1367 | பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பண்டமுது செய்ததுமை நங்கையருள் மேவுசிவ ஞானம் கொண்டதரன் உம்பர்பரன் எங்கள்பெரு மானருள் படைத்துக் கண்டதரு கந்தர்குலம் ஒன்றிமுழு துங்கழுவில் ஏறக் விண்டதுவும் வஞ்சகரை மஞ்சணவு கின்றமணி மாட 9 | |
1368 | அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பிரானை மெய்த்திரு ஞானசம் பந்தனை மறையவர் பெருமானைக் குராம லர்ப்பொழிற் கொச்சையர் நாதனைக் குரைகழ லிணைவாழ்த்தித் தராத லத்தினில் அவனருள் நினைவொடு தளர்வுறு தமியேனுக் கிராவி னைக்கொடு வந்ததிவ் வந்திமற் றினிவிடி வறியேனே. | 10 |
1369 | பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஏனமு கத்தவ புத்தரை இந்திர சித்து மணம்புணர் வுற்றான் தானம் இரக்கிற சீதை மடுப்பது சாதி குடத்தொடு கண்டீர் ஆன புகழ்ப்பயில் விப்ர சிகாமணி அத்தகு மைப்புரை யுங்கார் சோனக னுக்குமெ னக்கு மெனத்தரை அம்மனை சூலது கொண்டாள் 11 | |
1370 | அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஆர்மலி புகலி நாதன் அருளென இரவில் வந்தென் வார்முலை பயலை தீர மணந்தவர் தணந்து போன தேரதர் அழியல் உம்மைச் செய்பிழை எம்ம தில்லை கார்திரை புரள மோதிக் கரைபொருங் கடலி னீரே. | 12 |
1371 | கலிவிருத்தம் கடல்மேவு புவியேறு கவிநீரர் பெருமான்றன் தடமாடு மிகுகாழி தகுபேதை அருளாமல் திடமாகில் அணிநீறு செழுமேனி முழுதாடி மடலேறி எழில்வீதி வருகாதல் ஒழியேனே. | 13 |
1372 | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஒழியா தின்புறு பொழில்சூழ் சண்பைமன் எழிலா ருங்கவு ணியர்தீபன்திகழ் பொழியா நின்றன துளிதார் கொன்றைகள் பழிமேல் கொண்டது நுமர்தேர் அன்பொடும் 14 | |
1373 | அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் மங்கை யிடத்தர னைக்கவி நீரெதிர் ஓட மதித்தருள்செய் தங்கு புகழ்ச்சதுர் மாமறை நாவளர் சைவசி காமணிதன் துங்க மதிற்பிர மாபுரம் மேவிய சூழ்பொழில் நின்றொளிர்மென் கொங்கை யுடைக்கொடி ஏரிடை யாள்குடி கொண்டனள் எம்மனமே. | 15 |
1374 | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் மனங்கொண்டு நிறைகொண்டு கலையுங் கொண்டு தனங்கொண்ட பெருஞ்செல்வம் திகழும் கீர்த்திச் நனங்கொண்டு மெய்கொண்டு பயலை கொண்டே இனங்கொண்டு நகைகொண்டு மடவீர் வாளா 16 | |
1375 | சம்பிரதம் எழுகுல வெற்பிவை மிடறில் அடக்குவன் முழுதும் ஒளித்திர வியையி நிலத்திடை கழுமல நற்பதி அதிப தமிழ்க்கடல் தொழுது வழுத்திய பிறரொரு வர்க்குறு 17 | |
1376 | எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் சயமி குத்தரு கரைமு ருக்கிய தமிழ்ப யிற்றிய நாவன் வியலி யற்றிரு மருக லிற்கொடு விடம ழித்தருள் போதன் கயலு டைப்புனல் வயல்வ ளத்தகு கழும லப்பதி நாதன் இயலு டைக்கழல் தொழநி னைப்பவ ரிருவி னைத்துயர் போமே. | 18 |
1377 | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் மேதகுந் திகழ்பூக நாகசண் பகசூத நாதன்அந் தணர்கோனென் ஆனைவண் புகழாளி நீதியன்றன பேசும் யாயுமிந் துவும்வாசம் மோதுதெண் திரைசேவல் சேரும்அன் றிலும்வேயும் 19 | |
1378 | வன்பகை யாமக் குண்டரை வென்றோய் தன்பகை யாகச் சிந்தையுள் நையும் நின்புகழ் பாடிக் கண்பனி சோரா டன்பக லாமெய்ச் சிந்தையர் இன்பா 20 | |
1379 | மறம் கோவின்திரு முகமீதொடு வருதூதுவன் ஈர மாவீரியர் இவர்தங்கையென் மகுடன்திறம் அமண பாவேறிய மதுரத்தமிழ் விரகன்புக லியர்மன் தூவேரியை மடுமின்துடி யடிமின்படை யெழுமின் 21 | |
1380 | எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் இனியின் றொழிமினிவ் வெறியும் மறிபடு நனிசிந் தையி னிவள் மிகவன் புறுவதொர் புனிதன் புகலியர் அதிபன் புனைதமிழ் பனிமென் குழலியை அணிமின் துயரொடு 22 | |
1381 | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் சரத மணமலி பரிசம் வருவன வரதன் அணிதிகழ் விரகன் மிகுபுகழ் விரத முடையைநின் இடையின் அவள்மனம் இரதம் அழிதர வருதல் முனம்இனி 23 | |
1382 | அயன்நெடிய மாலும்அவ ரறிவரிய தாணுவரன் வயலணிதென் வீழிமிழ லையின்நிலவு காசின்மலி செயநிலவு மாடமதில் புடைதழுவு வாசமலி பயன்நிலவு ஞானதமிழ் விரகன்மறை ஞானமுணர் 24 | |
1383 | அரியாருங் கிரிநெறிஎங் ஙனம்நீர் வந்தீர் தெரியாபுன் சிறுநெறிகள் எந்தம் வாழ்விச் சுரியார்மென் குழலியொடும் விடியச் சென்று வரியாரும் பொழிலுமெழில் மதிலும் தோற்றும் 25 | |
1384 | ஈற்றடி மிக்குவந்த நான்கடிக் கலித்தாழிசை ஆமாண்பொன் கூட்டகத்த அஞ்சொலிளம் பைங்கிளியே பாமாலை யாழ்முரியப் பாணழியப் பண்டருள்செய் மாமான சுந்தரன்வண் சம்பந்த மாமுனியெம் கோமான்தன் புகழொருகால் இன்புறநீ கூறாயே கொச்சையர்கோன் தன்புகழ்யான் இன்புறநீ கூறாயே. | 26 |
1385 | எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் கூற தாகமெய் யடிமை தான்எனை உடைய கொச்சையர் அதிபதி வீற தார்தமிழ் விரகன் மேதகு புகழி னான்இவன் மிகுவனச் சேற தார்தரு திரள்க ளைக்கன செழுமு லைக்குரி யவர்சினத் தேறு தானிது தழுவி னாரென இடிகொள் மாமுர சதிருமே. | 27 |
1386 | அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் சதுரன் புகலியர் அதிபன்கூர் முதல்வன் புகலியர் அதிபன்தாள் எதிர்வந்தனர்விறல் கெடவெம்போர் அதிர்கின் றனஇது பருவஞ்சே 28 | |
1387 | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் மின்னு மாகத் தெழிலி யுஞ்சேர் மிகுபொன் மாடப் புகலி நாதன் துன்னு ஞானத் தெம்பி ரான்மெய்த் தொகைசெய் பாடற் பதிகம் அன்னாள் பொன்னு மாநல் தரள முந்தன் பொருக யற்கண் தனம்நி றைந்தாள் இன்னும் ஏகிப் பொருள்ப டைப்பான் எங்ஙனேநான் எண்ணு மாறே. | 29 |
1388 | பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் மாறி லாத பொடிநீ றேறு கோல வடிவும் ஊறி யேறு பதிகத் தோசை நேச நுகர்வும் வீற தேறும் வயல்சூழ் காழி ஞான பெருமான் தேறல் போலும் மொழியும் சேல்கள் போலும் விழியும் 30 | |
1389 | அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் கைதவத்தால் என்னிடைக்கு நீவந்த மெய்தவத்தார் உயிரனைய மிகுசைவ செய்தவத்தால் விதிவாய்ந்த செழுமுலையார் எய்தவத்தால் விளிவெனக்கென் யாதுக்கு 31 | |
1390 | மதங்கியார்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் இசையை முகந்தெழு மிடறுமி திங்கிவன் திசைதிசை துன்றிய பொழில்சுல வுந்திகழ் நசைமிகு வண்புகழ் பயிலு மதங்கிதன் வசைதகு மென்குல மவைமுழு துங்கொள 32 | |
1391 | வருகின் றனன்என் றனதுள் ளமும்நின் தருகும் புனல்வெஞ் சுரம்யான் அமரும் கருகும் புயல்சேர் மதில்வண் புகலிக் பெருகுந் திருவார் அருள்பே ணலர்போற் 33 | |
1392 | கொடிநீடு விடையுடைய பெருமானை அடிபரவு அடியேன திடர்முழுதும் அறவீசு தமிழ்விரகன் முடிநீடு பெருவலைகொ டலையூடு புகுவன்நுமர் படியாரும் நிகரரிய வரியாரும் மதர்நயனி 34 | |
1393 | பெறுபயன் மிகப்புவியுள் அருளுவன பிற்றைமுறை உறுதுயர் அழிப்பனமுன் உமைதிரு வருட்பெருக நறுமுறு குறைச்சமணை நிரைகழு நிறுத்தியன துறுபொழில் மதிற்புறவ முதுபதிமன் ஒப்பரிய 35 | |
1394 | பன்னீருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் தொகுவார் பொழில்சுற் றியவான் மதிதோ யுமதிற் கனமார் மிருகா ழிமன்முத் தமிழா கரன்மே தகுபொற் புனைதார் மகரா கரநித் திலநீர் நிலையார் புவியுத் தமராய் தகுவாழ் வுநிலைத் தெழில்சே ரறமா னபயிற் றுவர்மா 36 | |
1395 | பாணாற்றுப்படை
நேரிசை ஆசிரியப்பா கருமங் கேண்மதி கருமங் கேண்மதி துருமதிப் பாண கருமங் கேண்மதி நிரம்பிய பாடல் நின்கண் ணோடும் அரும்பசி நலிய அலக்கணுற் றிளைத்துக் காந்திய உதரக் கனல்தழைத் தெழுதலின் (5) தேய்ந்துடல் வற்றிச் சின்னரம் பெழுந்தே இறுகுபு சுள்ளி இயற்றிய குரம்பை உறுசெறித் தனைய உருவுகொண் டுள்வளைஇ இன்னிசை நல்லி யாழ்சுமந் தன்னம் மன்னிய வளநகர் மனைக்கடை தோறும் (10) சென்றுழிச் சென்றுழிச் சில்பலி பெறாது நின்றுழி நிலாவு வன்றுயர் போயொழிந் தின்புற் றிருநிதி எய்தும் அதுநுன துள்ளத் துள்ள தாயின் மதுமலர் வண்டறை சோலை வளவயல் அகவ (15) ஒண்திறற் கோண்மீன் உலாவு குண்டகம் உயர்தரு வரையில் இயல்தரு பதணத்துக் கடுநுதிக் கழுக்கடை மிடைதரு வேலிக் கனகப் பருமுரட் கணையக் கபாட விலையக் கோபுர விளங்கெழில் வாயில் (20) நெகிழ்ச்சியில் வகுத்துத் திகழ்ச்சியில் ஓங்கும் மஞ்சணை இஞ்சி வண்கொடி மிடைந்த செஞ்சுடர்க் கனகத் திகழ்சிலம் பனைய மாளிகை ஓளிச் சூளிகை வளாகத் தணிவுடைப் பலபட மணிதுடைத் தழுத்திய (25) நல்லொளி பரந்து நயந்திகழ் இந்திர வில்லொளி பலபல விசும்பிடைக் காட்ட மன்னிய செல்வத்துத் துன்னிய பெருமைச் செம்மலர் மாது சேர்ந்திறை பிரியாக் கழுமல நாதன் கவுணியர் குலபதி (30) தண்டமிழ் விரகன் சைவ சிகாமணி பண்டிதர் இன்பன் பரசமய கோளரி என்புனை தமிழ்கொண் டிரங்கிஎன் னுள்ளத் தன்பினை அருளிய ஆண்டகை தன்புகழ் குறைவறுத் துள்கி நிறைகடை குறுகி (35) நாப்பொலி நல்லிசை பாட மாப்பெருஞ் செல்வம் மன்னுதி நீயே. | 37 |
1396 | வஞ்சித் துறை நீதியின் நிறைபுகழ் மேதகு புகலிமன் மாதமிழ் விரகனை ஓதுவ துறுதியே. | 38 |
1397 | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் உறுதி முலைதாழ எனையி கழுநீதி அறுதி பெறுமாதர் பெயல்த ருதறானும் பெறுதி இவைநீயென் அடிப ணிதல்மேவு நறைக மழுவாச வளர்பொ ழில்சுலாவும் 39 | |
1398 | ஆசிரியத் துறை நீமதித் துன்னி நினையேல் மடநெஞ்சமே காமதிக் கார்பொழிற் காழி நாமதிக் கும்புகழ் ஞானசம் பந்தனொடு பூமதிக் குங்கழல் போற்றே. | 40 |
1399 | கட்டளைக் கலிப்பா போற்றி செய்தரன் பொற்கழல் பூண்டதே மாற்றி யிட்டது வல்விட வாதையே ஆற்றெ திர்ப்புனல் உற்றதந் தோணியே நாற்றி சைக்கவி ஞானசம் பந்தனே 41 | |
1400 | கைக்கிளை மருட்பா அம்புந்து கண்ணிமைக்கும் ஆன நுதல்வியர்க்கும் வம்புந்து கோதை மலர்வாடும் - சம்பந்தன் காமரு கழுமலம் அனையாள் ஆமிவள் அணங்கலள் அடிநிலத் தனவே. | 42 |
1401 | பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் தனமுந் துகிலுஞ் சாலிக் குவையுங் கோலக் கனமாடச் கனவண் கொடைநீ டருகா சனிதன் கமலக் கழல்பாடிக் புனைதண் டமிழின் இசையார் புகலிக் கரசைப் புகழ்பாடிப் சினவெங் கதமாக் களிறொன் றிந்தச் சேரிக் கொடுவந்தார் 43 | |
1402 | இன்னிசை வெண்பா யாரேஎம் போல அருளுடையார் இன்கமலத் தாரேயுஞ் சென்னித் தமிழ்விரகன் - சீரேயும் கொச்சை வயன்தன் குரைகழற்கே மெச்சி அடிமைசெயப் பெற்றேன் அறிந்து. | 44 |
1403 | பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அறிதரு நுண்பொருள் சேர்பதி கம்மரன் கழல்மேல் செறிதரு பைம்பொழில் மாளிகை கலவுந் திகழ்சீர்த் எறிதிரை வந்தெழு மீனிரை நுகர்கின் றிலைபோய் உறுதுயர் சிந்தையி னூடுத வினரெந் தமர்போல் 45 | |
1404 | கலி விருத்தம் குருகணி மணிமுன்கைக் கொடியுநல் விறலவனும் அருகணை குவரப்பால் அரிதினி வழிமீண்மின் தருகெழு முகில்வண்கைத் தகுதமிழ் விரகன்தன் கருகெழு பொழில்மாடக் கழுமல வளநாடே. | 46 |
1405 | நாடே றும்புகழ் ஞானசம் பந்தன்வண் சேடே றுங்கொச்சை நேர்வளஞ் செய்துனை மாடே றுந்தையல் வாட மலர்ந்தனை கேடே றுங்கொடி யாய்கொல்லை முல்லையே. | 47 |
1406 | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் முல்லை நகையுமைதன் மன்னு திருவருளை நல்ல பொழில்சுலவு தொல்லை யணிபுகலி வில்லை இலர்கணையும் இல்லை பகழியுறு சொல்லை யிலர்விரக ரல்லர் தழைகொணர்வர் 48 | |
1407 | வஞ்சித் துறை வழிதரு பிறவியின்உறு தொழில்அமர் துயர்கெடுமிகு பொழிலணி தருபுகலிமன் எழிலிணை அடிஇசைமினே. | 49 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
12.8. ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம் - பதினோராம் திருமுறை - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - விருத்தம், ஆசிரிய, கழிநெடிலடி, எண்சீர்க், ஞானசம், அறுசீர்க், விரகன், மாளிகை, புகலியர், திருஞான, எழுசீர்க், சேரிக், கருமங், கேண்மதி, அதிபன், சம்பந்தன், சண்பையர், பன்னிருசீர்க், சிகாமணி, அம்போதரங்கம்