முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பத்தாம் திருமுறை - திருமந்திரம் » எட்டாம் தந்திரம்
பத்தாம் திருமுறை - திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

எட்டாம் தந்திரம்
1. உடலிற் பஞ்சபேதம்
2122 |
காயப்பை ஒன்று சரக்குப் பலவுள மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டு காயப்பைக்கு உள்நின்ற கள்வன் புறப்பட்டால் மாயப்பை மண்ணா மயங்கிய வாறே. |
1 |
2123 |
அத்தன் அமைத்த உடல்இரு கூறினில் சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால் சத்த பரிச ரூப ரசகந்தம் புத்திமான் ஆங்காரம் புரியட்ட காயமே. |
2 |
2124 |
எட்டினில் ஐந்தாகும் இந்திரி யங்களும் கட்டிய மூன்று கரணமும் ஆயிடும் ஒட்டிய பாசம் உணர்வுஅது வாகவே கட்டி அவிழ்ந்திடும் கண்ணுதல் காணுமே. |
3 |
2125 |
இரதம் உதிரம் இறைச்சிதோல் மேதை மருவிய அத்தி வழும்பொடு மச்சை பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி உருவ மலால்உடல் ஒன்றென லாமே. |
4 |
2126 |
ஆரே அறிவார் அடியின் பெருமையை யாரே அறிவார் அங்கவர் நின்றது யாரே அறிவார் அறுபத்தெட்டு ஆக்கையை யாரே அறிவார் அடிக்காவல் ஆனதே. |
5 |
2127 |
எண்சாண் அளவால் எடுத்த உடம்புக்குள் கண்கால் உடலில் சுரக்கின்ற கைகளில் புண்கால் அறுபத்தெட்டு ஆக்கை புணர்கின்ற நண்பால் உடம்பு தன் னால் உடம் பாமே. |
6 |
2128 |
உடம்புக்கும் நாலுக்கும் உயிராகிய சீவன் ஒடுங்கும் பரனோடு ஒழியாகப் பிரமம் கடந்தொறும் நின்ற கணக்கது காட்டி அடங்கியே அற்றது ஆரறி வாறே. |
7 |
2129 |
ஆறுஅந்த மாகி நடுவுடன் கூடினால் தேறிய மூவாறும் சிக்கென்று இருந்திடும் கூறுங் கலைகள் பதினெட்டும் கூடியே ஊறும் உடம்பை உயிருடம்பு எண்ணுமே. |
8 |
2130 |
மெய்யினில் தூல மிகுந்த முகத்தையும் பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும் கையினில் துல்லியம் காட்டும் உடலையும் ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே. |
9 |
2131 |
காயும் கடும்பரி கால்வைத்து வாங்கல் போல் சேய இடம்அண்மை செல்லவும் வல்லது காயத் துகிர் போர்வை ஒன்றுவிட்டு ஆங்குஒன்றிட்டு ஏயும் அவரென்ன ஏய்ந்திடும் காயமே. |
10 |
2132 |
நாகம் உடல்உரி போலும்நல் அண்டச மாக நனாவில் கானாமறந் தல்லது போகலும் ஆகும் அரன்அரு ளாலே சென்று ஏகும் இடம்சென்று இருபயன் உண்ணுமே. |
11 |
2133 |
உண்டு நரக சுவர்கத்தில் உள்ளன கண்டு விடும்சூக்கம் காரண மாச்செலப் பண்டு தொடரப் பரகாய யோகிபோல் பிண்டம் எடுக்கும் பிறப்பு இறப்பு எய்தியே. |
12 |
2134 |
தான்அவ னாகிய தற்பரம் தாங்கினோன் ஆனவை மாற்றிப் பரமத்து அடைந்திடும் ஏனை உயிர்வினைக்கு எய்தும் இடம்சென்றும் வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே. |
13 |
2135 |
ஞானிக்குக் காயம் சிவமாகும் நாட்டிடில் ஞானிக்குக் காயம் உடம்பே அதுவாகும் மேனிக்கும் யோகிக்கும் விந்துவும் நாதமும் மோனிக்குக் காயம்முப் பாழ்கெட்ட முத்தியே. |
14 |
2136 |
விஞ்ஞானத் தோர்க்குஆ ணவமே மிகுதனு எஞ்ஞானத் தோர்க்குத் தனுமாயை தான்என்ப அஞ்ஞானத் தோர்க்குக் கன்மம் தனுவாகும் மெஞ்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவுமே. |
15 |
2137 |
மலமென்று உடம்பை மதியாத ஊமர் தலமென்று வேறு தரித்தமை கண்டீர் நலமென்று இதனையே நாடி இருக்கில் பலமுள்ள காயத்தில் பற்றும்இவ் அண்டத்தே. |
16 |
2138 |
நல்ல வசனத்து வாக்கு மனாதிகள் மெல்ல விளையாடும் விமலன் அகத்திலே அல்ல செவிசத்த மாதி மனத்தையும் மெல்ல தரித்தார் முகத்தார் பசித்தே. |
17 |
2. உடல்விடல்
2139 |
பண்ணாக்கும் காமம் பயிலும் வசனமும் விண்ணாம் பிராணன் விளங்கிய சத்தமும் புண்ணாம் உடலில் பொருந்தும் மனத்தையும் அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே. |
1 |
2140 |
அழிகின்ற ஓர் உடம்பு ஆகும் செவிகள் கழிகின்ற காலவ் விரதங்கள் தானம் மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி ஒழிகின்ற ஊனுக்கு உறுதுணை இல்லையே. |
2 |
2141 |
இலையாம் இடையில் எழுகின்ற காமம் முலைவாய நெஞ்சத்து மூழ்கும் உளத்துத் தலையாய மின்னுடல் தாங்கித் திரியும் சிலையாய சித்தம் சிவமுன் இடைக்கே. |
3 |
3. அவத்தை பேதம் - கீழால் அவத்தை
2142 |
ஐஐந்து மத்திமை யானது சாக்கிரம் கைகண்ட பன்னான்கில் கண்டம் கனாஎன்பர் பொய்கண் டிலாத புருடன்இத யம் சுழுனை மெய்கண் டவன் உந்தி ஆகும் துரியமே. |
1 |
2143 |
முப்பதோடு ஆறின் முதல்நனா ஐந்தாகச் செப்புஅதில் நான்காய்த் திகழ்ந்திரண்டு ஒன்றாகி அப்பதி யாகும் நியதி முதலாகச் செப்பும் சிவம்ஈறாய்த் தேர்ந்துகொள் ளீரே. |
2 |
2144 |
இந்தியம் ஈரைந்து ஈரைந்து மாத்திரை மந்திர மாய்நின்ற மாருதம் ஈரைந்தும் அந்தக் கரணம் ஒருநான்கும் ஆன்மாவும் பந்தஅச் சாக்கரப் பாலது ஆகுமே. |
3 |
2145 |
பாரது பொன்மை பசுமை உடையது நீரது வெண்மை செம்மை நெருப்பது காரது மாருதம் கறுப்பை உடையது வானகம் தூமம் மறைந்துநின் றாரே. |
4 |
2146 |
பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும் ஏதம் படஞ்செய்து இருந்து புறநிலை ஓதும் மலம்குணம் ஆகும்ஆ தாரமொடு ஆதி அவத்தைக் கருவிதொண் ணூற்றாறே. |
5 |
2147 |
இடவகை சொல்லில் இருபத்தஞ்சு ஆனை படுபர சேனையும் பாய்பரி ஐந்தும் உடையவன் மத்திமை உள்ளுறும் நால்வர் அடைய நெடுங்கடை ஐந்தொடு நான்கே. |
6 |
2148 |
உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி உடம்பிடை நின்ற உயிரை அறியார் உடம்பொடு உயிரிடை நட்புஅறி யாதார் மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே. |
7 |
2149 |
இருக்கின்ற வாறுஒன்று அறிகிலர் ஏழைகள் மருக்கும் அசபையை மாற்றி முகந்து கருக்கொண்டு காமாரி சார முகந்தேர்ந்து உருக்கொண்டு தொக்க உடல்ஒழி யாதே. |
8 |
2150 |
ஒளித்திட்ட டிருக்கும் ஒருபதி னாலை அளித்தவன் என்னுள்ளே ஆரியன் வந்து அளிக்கும் கலைகளி னால்அறு பத்து ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே. |
9 |
2151 |
மண்ணினில் ஒன்று மலர்நீரும் மருங்காகும் பொன்னினில் அங்கி புகழ்வளி ஆகாயம் மன்னும் மனோபுத்தி ஆங்காரம் ஓர்ஒன்றாய் உன்னின் முடிந்தது ஒருபூத சயமே. |
10 |
2152 |
முன்னிக்கு ஒருமகன் மூர்த்திக்கு இருவர் வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர் கன்னிக்கு பிள்ளைகள் ஐவர் முனாள்இல்லை கன்னியைக் கன்னியே காதலித் தானே. |
11 |
2153 |
கண்டன ஐந்தும் கலந்தனதான் ஐந்தும்சென்று உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின் பண்டைய தாகிப் பரந்து வியாக்கிரத்து அண்டமும் தானாய் அமர்ந்துநின்றானே. |
12 |
2154 |
நின்றவன் நிற்கப் பதினாலில் பத்துநீத்து ஒன்றிய அங்தக் கரணங்கள் நான்குடன் மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை கன்றிய கண்டத்தில் கண்டான் கனவதே. |
13 |
2155 |
தானம் இழந்து தனிபுக்கு இதயத்து மானம் அழிந்து மதிகெட்டு மாலாகி ஆன விரிவுஅறி யாஅவ் வியத்தத்தில் மேனி அழிந்து கழுத்தியது ஆமே. |
14 |
2156 |
கழுமுனையைச் சேர்ந்துள மூன்றுடன் காட்சி கெழுமிய சித்தம் பிராணன்தன் காட்சி ஒழுகக் கமலத்தின் உள்ளே யிருந்து விழுமப் பொருளுடன் மேவிநின் றானே. |
15 |
2157 |
தானத்து எழுந்து தருக்கு துரியத்தின் வானத்து எழுந்துபோய் வையம் பிறகிட்டுக் கானத்து எழுந்த கருத்தின் தலையிலே ஊனத்து அவித்தைவிட்டு ஊமன்நின் றானே. |
16 |
2158 |
Yஊமை எழுத்தொடு பேசும் எழுத்துறில் ஆமை அகத்தினில் அஞ்சம் அடங்கிடும் ஓமயம் உற்றுஅது உள்ளொளி பெற்றது நாமயம் அற்றது நாம்அறி யோமே. |
17 |
2159 |
துரியம் இருப்பதும் சாக்கிரத்து உள்ளே நரிகள் பதினாலு நஞ்சுண்டு செத்தன பரிய புரவியும் பாறிப் பறந்தது துரியம் இறந்திடம் சொல்லஒண் ணாதே. |
18 |
2160 |
மாறா மலம்ஐந்தால் மன்னும் அவத்தையில் வேறாய மாயா தநுகர ணாதிக்குஇங்கு ஈறாகா தேஎவ்வுயிரும் பிறந்துஇறந்து ஆறாத வல்வினை யால்அடி யுண்ணுமே. |
19 |
2161 |
உண்ணும்தன் ஊடாடது ஊட்டிடு மாயையும் அண்ணல் அருள்பெற்ற முத்தியது ஆவது நண்ணல் இலாஉயிர் ஞானத்தி னால்பிறந்து எண்னுறு ஞானத்தின் நேர்முத்தி எய்துமே. |
20 |
2162 |
அதிமூட நித்திரை ஆணவம் நந்த அதனால் உணர்வோன் அருங்கன்மம் முன்னி நிதமான கேவலம் இத்திறம் சென்று பரமாகா ஐஅவத் தைப்படு வானே. |
21 |
2163 |
ஆசான்முன் னேதுயில் மாண வகரைத் தேசாய தண்டால் எழுப்பும் செயல்போல் நேசாய ஈசனும் நீடுஆண வத்தரை ஏசாத மாயாள்தன் னாலே எழுப்புமே. |
22 |
2164 |
மஞ்சொடு மந்தா கினிகுட மாம்என விஞ்சுஅறி வில்லோன் விளம்பும் மிகுமதி எஞ்சலில் ஒன்றெனு மாறுஎன இவ்வுடல் அஞ்சணும் மன்னன்அன் றேபோம் அளவே. |
23 |
2165 |
படியுடை மன்னவன் பாய்பரி ஏறி வடிவுடை மாநகர் தான்வரும் போது அடியுடை ஐவரும் அங்குஉறை வோரும் துடியில்லம் பற்றித் துயின்றனர் தாமே. |
24 |
2166 |
நேரா மலத்தை நீடுஐந்து அவத்தையின் நேரான வாறுஉன்னி நீடு நனவினில் நேரா மலம்ஐந்தும் நேரே தரிசித்து நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே. |
25 |
4. மத்திய சாக்கிர அவத்தை
2167 |
சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோதாயி சாக்கிர சொப்பனம் தன்னிடை மாமாயை சாக்கிரம் தன்னில் அழுத்திதற் காமியம் சாக்கிரம் தன்னில் துரியத்து மாயையே. |
1 |
2168 |
மாயை எழுப்பும் கலாதியை மற்றதின் நேய இராகாதி ஏய்ந்த துரியத்துத் தோயும் கழுமுனை கனாநனா வும்துன்னி ஆயினன் அந்தச் சகலத்துஉ ளானே. |
2 |
2169 |
மேவிய அந்த கண் விழிகண் குருடனாம் ஆவயின் முன்அடிக் காணு மதுகண்டு மேவும் தடிகொண்டு சொல்லும் விழிபெற மூவயின் ஆன்மா முயலும் கருமமே. |
3 |
2170 |
மத்திமம் ஒத்த சிலந்தி வலயத்துள் ஒத்துஅங் கிருந்து உயிருண்ணு மாறுபோல் அத்தனும் ஐம்பொறி ஆடகத்துள் நின்று சத்த முதல்ஐந்தும் தான்உண்ணு மாறே. |
4 |
2171 |
வைச்சன வச்சு வகையிரு பத்தஞ்சும் உச்சம் உடன்அணை வான்ஒரு வன்உளன் பிச்சன் பெரியன் பிறப்பிலி என்றென்று நச்சி அவனருள் நான்உய்ந்த வாறே. |
5 |
2172 |
நாலா றுடன்புருடன் நல்தத் துவமுடன் வேறான ஐ ஐந்து மெய்ப்புரு டன்பரன் கூறா வியோமம் பரம்எனக் கொண்டனன் வேறான நாலேழு வேதாந்த தத்துவமே. |
6 |
2173 |
ஏலங்கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலை கோலங்கொண்டு ஆங்கே குணத்துடன் புக்கு மூலங்கொண்டு ஆங்கே முறுக்கிமுக் கோணிலும் காலங்கொண் டான்அடி காணலும் ஆமே. |
7 |
2174 |
நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும் ஓடிய காலில் ஒடுங்கி யிருந்திடும் கூடிய காமம் குளிக்கும் இரதமும் நாடிய நல்ல மனமும் உடலிலே. |
8 |
2175 |
ஆவன ஆக அழிவ அழிவன போவன போவ புகுவ புகுவன காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன் ஏவன செய்யும் இலங்கிழை யோனே. |
9 |
2176 |
பத்தொடு பத்துமோர் மூன்றும் பகுதியும் உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும் மெய்த்த வியோமமும் மேலைத் துரியமும் தத்துவ நாலேழ் எனஉன்னத் தக்கதே. |
10 |
2177 |
விளங்கிடு முந்நூற்று முப்பதோடு ஒருபான் தளங்கொள் இரட்டிய தாறு நடந்தால் வணங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்து விளங்கிடும் அவ்வழி தத்துவம் நின்றே. |
11 |
2178 |
நாலொரு கோடியே நாற்பத்தொண் ணாயிரம் மேலுமோர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும் பாலவை தொண்ணூறோடு ஆறுள் படும்அவை கோலிய ஐ ஐந்துள் ஆகும் குறிக்கிலே. |
12 |
2179 |
ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொதுஎன்பர் ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம் ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்கு ஆகின்ற நாலாறுஐ ஐந்துமாயா வாதிக்கே. |
13 |
2180 |
தத்துவ மானது தன்வழி நின்றிடில் வித்தக னாகி விளங்கி யிருக்கலாம் பொய்த்துவ மாம்அவை போயிடும் அவ்வழி தத்துவம் ஆவது அகார எழுத்தே. |
14 |
2181 |
அறிவொன் றிலாதன ஐஏழும் ஒன்றும் அறிகின்ற என்னை அறியாது இருந்தேன் அறிகின்றாய் நீஎன்று அருள்செய்தார் நந்தி அறிகின்ற நானென்று அறிந்து கொண்டேனே. |
15 |
2182 |
சாக்கிர சாக்கிர மாதி தனில்ஐந்தும் ஆக்கும் மலாவத்தை ஐந்து நனவாதி போக்கி இவற்றொடும் பொய்யான ஆறாறு நீக்கி நெறிநின்றுஒன்று ஆகியே நிற்குமே. |
16 |
2183 |
ஆணவ மாதி மலம்ஐந்து அவரோனுக்கு ஆணவ மாதிநான் காம்மாற்கு அரனுக்கு ஆணவ மாதிமூன்று ஈசர்க்கு இரண்டென்ப ஆணவம் ஒன்றே சதாசிவற்கு ஆவதே. |
17 |
5. அத்துவாக்கள்
2184 |
தத்துவம் ஆறாறு தன்மனு ஏழ்கோடி மெய்த்தரு வன்னம்ஐம் பான்ஒன்று மேதினி ஒத்துஇரு நூற்றுஇரு பான்நான்குஎண் பான்ஒன்று வைத்த பதம்கலை ஓர்ஐந்தும் வந்தவே. |
1 |
2185 |
நாடிய மண்டலம் மூன்றும் நலந்தெரிந்து ஓடும் அவரோடு உள்இரு பத்துஐஞ்சும் கூடுவர் கூடிக் குறிவழி யேசென்று தேடிய பின்னர்த் திகைத்திருந் தார்களே. |
2 |
2186 |
சாக்கிர சாக்கிர மாதித் தலையாக்கி ஆக்கிய தூலம் அளவாக்கி அதீதத்துத் தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்துஅது தேக்கும் சிவமாதல் ஐந்தும் சிவாயவே. |
3 |
6. சுத்த நனவாதி பருவம்
2187 |
நானவாதி தூலமே சூக்கப் பகுதி அனதான ஐஐந்தும் விந்துவின் சத்தி தனதாம் உயிர்விந்து தான்நின்று போந்து கனவா நனவில் கலந்ததுஇவ் வாறே. |
1 |
2188 |
நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார் நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார் நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார் நனவில் கனவுஓட நன்செய்தி யானதே. |
2 |
2189 |
செறியுங் கிரியை சிவதத் துவமாம் பிறிவில் சுகயோகம் பேரருள் கல்வி குறிதல் திருமேனி குணம்பல வாகும் அறிவில் சராசரம் அண்டத் தளவே. |
3 |
2190 |
ஆதி பரஞ்சிவம் சத்தி சதாசிவம் ஏதம்இல் ஈசன்நல் வித்தியா தத்துவம் போதம் கலைகாலம் நியதிமா மாயை நீதிஈ றாக நிறுத்தினன் என்னே. |
4 |
2191 |
தேச திகழ்சிவம் சத்தி சதாசிவம் ஈசன் அனல்வித்தை இராகம் கலைகாலம் மாசகல் வித்தை நியதி மகாமாயை ஆசில் புருடாதி ஆன்மாஈ றாறே. |
5 |
2192 |
ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம் காணும் முளைக்குத் தவிடுஉமி ஆன்மாவும் தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும் பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே. |
6 |
2193 |
பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடில் பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே. |
7 |
2194 |
உடல்இந் தியம்மனம் ஒண்புத்தி சித்தம் அடலொன்று அகந்தை அறியாமை மன்னிக் கெடும்அவ் வுயிர்மயல் மேலும் கிளைத்தால் அடைவது தான்ஏழ் நரகத்து ளாயே. |
8 |
2195 |
தன்தெரியாத அதீதம்தற்கு ஆணவம் சொல்தெரி கின்ற துரியம்சொல் காமியம் பெற்ற சுழுத்திப்பின் பேசுறும் காதலாம் மற்றது உண்டிக் கனவுநன வாதலே. |
9 |
2196 |
நனவில் கனவுஇல்லை ஐந்து நனவில் கனவிலாச் சூக்குமம் காணும் சுழுத்தி தனலுண் பகுதியே தற்கூட்டும் மாயை நனவில் துரியம் அதீதம் தலைவந்தே. |
10 |
2197 |
ஆறாறில் ஐஐந்து அகல நனாநனா ஆறாம் அவைவிட ஆகும் நனாக்கனா வேறான ஐந்தும் விடவே நனாவினில் ஈறாம் சுழுத்தி இதில்மாயை தானே. |
11 |
2198 |
மாயையில் வந்த புருடன் துரியத்தில் ஆய முறைவிட்டு அதுவும்தான் அன்றாகிச் சேயதே வலவித் துடன் செல்லச் சென்றக்கால் ஆய தனுவின் பயனில்லை யாமே. |
12 |
2199 |
அதீதத் துரியத்து அறிவனாம் ஆன்மா அதீதத் துரியம் அதனால் புரிந்தால் அதீதத்து எழுந்து அறிவாகிய மானன் முதிய அனலில் துரியத்து முற்றுமே. |
13 |
2200 |
ஐஐந்து பத்துடன் ஆனது சாக்கிரம் கைகண்ட ஐஐந்தில் கண்டம் கனாஎன்பர் பொய்கண்ட மூவர் புருடன் சுழுனையின் மெய்கண்டவன்உந்தி மேவல் இருவரே. |
14 |
2201 |
புரியட் டகமே பொருந்தல் நனவு புரியட் டகந்தன்னில் மூன்று கனவு புரியட் டகத்தில் இரண்டு கழுத்தி புரியட் டகத்தொன்று புக்கல் துரியமே. |
15 |
2202 |
நனவில் நனவு புனலில் வழக்கம் நனவிற் கனவு நினைத்தல் மறத்தல் நனவிற் சுழுத்திஉள் நாடல் இலாமை நனவில் துரியம் அதீதத்து நந்தியே. |
16 |
2203 |
கனவில் நனவுபோல் காண்டல் நனவாம் கனவினில் கண்டு மறத்தல் கனவாம் கனவில் சுழுத்தியும் காணாமை காணல் அனுமாதி செய்தலில் ஆன துரியமே. |
17 |
2204 |
சுழுத்தி நனவுஒன்றும் தோன்றாமை தோன்றல் சுழுத்தி கனவுஅதன் உண்மை சுழுத்தியில் சுழுத்தி அறிவுஅறி வாலே அழிகை சுழுத்தித் துரியமாம் சொல்லறும் பாழே. |
18 |
2205 |
துரிய நனவாம் இதமுணர் போதம் துரியக் கனவாம் அகமுணர் போதம் துரியச் சுழுத்தி வியோமம் துரியம் துரியம் பரமெனத் கோன்றிடும் தானே. |
19 |
2206 |
அறிவுஅறி கின்ற அறிவு நனவாம் அறிவுஅறி யாமை அடையக் கனவாம் அறிவுஅறி அவ்அறி யாமை சுழுத்தி அறிவுஅறி வாகும் ஆன துரியமே. |
20 |
2207 |
தான் எங்கும் ஆயவன் ஐம்மலம் தான்விட்டு ஞானம் தனதுரு வாகி நயந்தபின் தான்எங்கு மாய்நெறி நின்றது தான்விட்டு மேல்நந்தச் சூக்கம் அவைவண்ணம் மேலிட்டே. |
21 |
2208 |
ஐஐந்தும் ஆறும்ஓர் ஐந்தும் நனாவினில் எய்யும் நனவு கனவு சுழுத்தியாம் மெய்யும்பின் சூக்கமும் மெய்ப்பகுதி மாயை ஐயமும் தான்அவன் அத்துரி யத்தனே. |
22 |
2209 |
ஈதென்று அறிந்திலன் இத்தனை காலமும் ஈதென்று அறிந்தபின் ஏதும் அறிந்திலேன் ஈதென்று அறியும் அறிவை அறிந்தபின் ஈதென்று அறியும் இயல்புடை யோனே. |
23 |
2210 |
உயிர்க்குஉயி ராகி உருவாய் அருவாய் அயல்புணர் வாகி அறிவாய்ச் செறிவாய் நயப்புறு சத்தியும் நாதன் உலகாதி இயற்பின்றி எல்லாம் இருண்மூட மாமே. |
24 |
2211 |
சத்தி இராகத்தில் தான்நல் உயிராகி ஒத்துறி பாச மலம்ஐந்தோடு ஆறாறு தத்துவ பேதம் சமைத்துக் கருவியும் வைத்தனன் ஈசன் மலம்அறு மாறே. |
25 |
2212 |
சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன்னுண்மை சாக்கிரா தீதம் துரியத்தில் தானுறச் சாக்கிரா தீதத்தில் ஆணவம் தான்விடாச் சாக்கிரா தீதம் பரன்உண்மை தங்குமே. |
26 |
2213 |
மலக்கலப் பாலே மறைந்தது சத்தி மலக்கலப் பாலே மறைந்தது ஞானம் மலக்கலப் பாலே மறைந்தனன் தாணு மலக்கலப்பு அற்றால் மதியொளி யாமே. |
27 |
2214 |
திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து பகைக்கின்ற நெஞ்சுக்குப் பாலிரண் டாமே. |
28 |
2215 |
கதறு பதினெட்டுக் கண்களும் போகச் சிதறி எழுந்திடுஞ் சிந்தையை நீரும் விதறு படாமுன்னம் மெய்வழி நின்றால் அதிர வருவதோர் ஆனையும் ஆமே. |
29 |
2216 |
நனவகத் தேயொரு நாலைந்தும் வீடக் கனவகத் தேஉள் கரணங்க ளோடு முனவகத் தேநின்று உதறியுட் புக்கு நினைவகத்து இன்றிச் சுழுத்திநின் றானே. |
30 |
2217 |
நின்றவன் ஆசான் நிகழ்துரி யத்தனாய் ஒன்றி உலகின் நியமாதிகள் உற்றுச் சென்று துரியாதீ தத்தே சிலகாலம் நின்று பரனாய் நின்மல னாமே. |
31 |
2218 |
ஆனஅவ் ஈசன் அதீதத்தில் வித்தையாத் தான்உலகு உண்டு சதாசிவ மாசத்தி மேனிகள் ஐந்தும்போல் விட்டுச் சிவமாகி மோனம் அடைந்தொளி மூலத் னாமே. |
32 |
2219 |
மண்டலம் மூன்றினுள் மாயநன் நாடனைக் கண்டுகொண்டு உள்ளே கருதிக் கழிகின்ற விண்டவர் தாமரை மேலொன்றும் கீழாக அண்டமும் தானாய் அகத்தினுள் ஆமே. |
33 |
2220 |
போதறி யாது புலம்பின புள்ளினம் மாது அறி யாவகை நின்று மயங்கின வேதுஅறி யாவணம் நின்றனன் எம்இறை சூதறி வாருச்சி சூடிநின் றாரே. |
34 |
2221 |
கருத்தறிந்து ஒன்பது கண்டமும் ஆங்கே பொருந்தறிந் தேன்புவ னாபதி நாடித் திருத்தறிந் தேன்மிகு தேவர் பிரானை பருத்தறிந் தேன்மனம் மன்னிநின் றேனே. |
35 |
2222 |
ஆன விளக்கொளி தூண்டும் அவன் என்னத் தான விளக்கொளி யாம்மூல சாதனத்து ஆன விதிமூலத் தானத்தில் அவ்விளக்கு ஏனை மதிமண்ட லம்கொண்டு எரியுமே. |
36 |
2223 |
உள்நாடும் ஐவர்க்கு மண்டை ஓதுங்கிய விண்நாட நின்ற வெளியை வினவுறில் அண்ணாந்து பார்த்துஐவர் கூடிய சந்தியில் கண்நாடி காணும் கருத்ததுஎன் றானே. |
37 |
2224 |
அறியாத வற்றை அறிவான் அறிவான் அறிவான் அறியாதான் தன்னறிவு ஆகான் அறியா தவத்தை அறிவானைக் கூட்டி அறியாது அறிவானை யார்அறிவாரே. |
38 |
2225 |
துரிய தரிசனம் சொற்றோம் வியோமம் அரியன தூடணம் அந்தண வாதி பெரியன கால பரம்பின் துரியம் அரிய அதீதம் அதீதத்த தாமே. |
39 |
2226 |
மாயையிற் சேதனன் மன்னும் பகுதியோன் மாயையின் மற்றது நீவுதல் மாயையாம் கேவல மாகும் சகலமா யோனியுள் தோயும் மனிதர் துரியத்துள் சீவனே. |
40 |
7. கேவல சகல சுத்தம்
2227 |
தன்னை அறிசுத்தன் தற்கேவ லன்தானும் பின்னம் உறநின்ற பேத சகலனும் மன்னிய சத்தசத் துச்சத சத்துடன் துன்னவர் தத்தம் தொழில்கள் வாகவே. |
1 |
2228 |
தானே தனக்குப் பகைவனும் நட்டானும் தானே தனக்கு மறுமையும் இம்மையும் தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும் தானே தனக்குத் தலைவனும் ஆமே. |
2 |
2229 |
ஆமுயிர் கேவலம் மாமாயை யின்நடந்து ஆம்உயிர் மாயை எறிப்ப அறிவுற்று காமியம் மாமேய மும்கல வாநிற்பத் தாம்உறு பாசம் சகலத்து ஆமே. |
3 |
2230 |
சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர் புகலும் மலம்மூ வகையும் புணர்ந்தோர் நிகரில் மலரோன்மால் நீடுபல் தேவர்கள் நிகழ்நரர் சீடம் அந்தமும் ஆமே. |
4 |
2231 |
தாவிய மாயையில் தங்கும் பிரளயம் மேவிய மற்றது உடம்பாய்மிக் குள்ளன ஓவல் இலக்கணர் ஒன்றிய சீகண்டர் ஆவயின் நூற்றெட்டு உருத்திர ராமே. |
5 |
2232 |
ஆகின்ற கேவலத்து ஆணவத்து ஆனவர் ஆகின்ற வித்தேச ராம்அனந் தாதியர் ஆகின்ற எண்மர் எழுகோடி மந்திரர் ஆகின்ற ஈசர் அநேகரும் ஆமே. |
6 |
2233 |
ஆம்அவ ரில்சிவ னார்அருள் பெற்றுளோர் போம்மலந் தன்னால் புகழ்விந்து நாதம்விட்டு ஒம்மய மாகி ஒடுங்கலின் நின்மலம் தோம்அறும் சுத்த அவத்தைத் தொழிலே. |
7 |
2234 |
ஒரினும் மூவகை நால்வகை யும்உள தேரில் இவைகே வலம்மாயை சேர்இச்சை சார்இய லாயவை தாமே தணப்பவை வாரிவைத்து ஈசன் மலம்அறுத் தானே. |
8 |
2235 |
பொய்யான போதாந்தம் ஆறாறும் விட்டகன்று எய்யாமை நீங்கவே எய்தவன் தானாகி மெய்யாம் சராசர மாய்வெளி தன்னுட்புக்கு எய்தாமல் எய்தும்சுத் தாவத்தை என்பதே. |
9 |
2236 |
அனாதி பசுவியாத்தி யாகும் இவனை அனாதியில் வந்த மலம்ஐந்தால் ஆட்டி அனாதியில் கேவலம் அச்சக லத்திட்டு அனாதி பிறப்புறச் சுத்தத்துள் ஆகுமே. |
10 |
2237 |
அந்தரம் சுத்தாவத் தைகே வலத்தாறு தந்தோர்தம் சுத்தகே வலத்தற்ற தற்பரத் தின்பால் துரியத் திடையே அறிவுறத் தன்பால் தனையறி தத்துவந் தானே. |
11 |
2238 |
ஐ ஐந்து ஒடுங்கும் ஆன்மாவில் ஆன்மாவும் மெய்கண்டு சுத்த அவத்தையில் வீடாகும் துய்யஅவ் வித்தை முதன்மூன்றும் தொல்சத்தி ஐயன் சிவன்சத்தி யாம்தோற்றம் அவ்வாறே. |
12 |
2239 |
ஐஐந்தும் ஆன்மாவில் ஆறோடு அடங்கியும் மெய்கண்ட மேல்மூன்றும் மேவுமெய் யோகத்தில் கைகண்ட சத்தி சிவபாகத் தேகாண எய்யும் படியடங்கும் நாலேழ் எய்தியே. |
13 |
2240 |
ஆணவத் தார்ஒன்று அறியாத கேவலர் பேணிய மாயைப் பிரளயா கலராகும் காணும் உருவினர் காணாமை காண்பவே பூணும் சகலர்முப் பாசமும் புக்கோரே. |
14 |
2241 |
ஆணவம் ஆகும் விஞ்ஞான கலருக்குப் பேணிய மாயை பிரளயா கலருக்கே ஆணவ மாயையும் கன்மம் மூன்றுமே காணும் சகலர்க்குக் காட்டும் மலங்களே |
15 |
2242 |
கேவலம் தன்னில் கிளர்ந்தவிஞ் ஞாகலர் கேவலம் தன்னில் கிளர்விந்து சத்தியால் பூவயின் கேவலத்து அச்சக லத்தையும் மேவிய மந்திர மாமாயை மெய்ம்மையே. |
16 |
2243 |
மாயையில் மன்னும் பிரளயா கலர்வந்து மாயையும் தோன்றா வகைநிற்க ஆணவ மாய சகலத்துக் காமிய மாமாயை ஏயமன் நூற்றெட்டு உருத்திரர் என்பவே. |
17 |
2244 |
மும்மலம் கூடி முயங்கி மயங்குவோர் அம்மெய்ச் சகலத்தர் தேவர் சுரர்நரர் மெய்ம்மையில் வேதா விரிமிகு கீடாந்தத்து அம்முறை யோனிபுக்கு ஆர்க்கும் சகலரே. |
18 |
2245 |
சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும்மலச் சத்துஅசத்து ஓடத் தனித்தனி பாசமும் மத்த இருள்சிவ னான கதிராலே தொத்தற விட்டிடச் சுத்தஆ வார்களே. |
19 |
2246 |
தற்கே வலம்முத்தி தானே தனிமையாம் பிற்பால் சகலம் கலாதிப் பிறிவதாம் சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம் தற்பால் புரிவது தற்சுத்தம் ஆமே. |
20 |
2247 |
அறிவின்றி முத்தன் அராகாதி சேரான் குறியொன்றி லாநித்தன் கூடான் காலதி செறியும் செயலிலான் தினங்கற்ற வல்லோன் கிறியன் மலவியாபி கேவலம் தானே. |
21 |
2248 |
விந்துவும் மாயையும் மேவும் கிரியையும் சந்தத ஞான பரையும் தனுச்சுத்தி விந்துவின் மெய்ஞ்ஞான மேவும் பிரளயர் வந்த சகலசுத் தான்மாக்கள் வையத்தே. |
22 |
2249 |
கேவல மாதியின் பேதம் கிளக்குறில் கேவல மூன்றும் கிளரும் சகலத்துள் ஆவயின் மூன்று மதிசுத்த மூடவே ஓவலில் லாஒன்பான் ஒற்றுணர் வோர்கட்கே. |
23 |
2250 |
கேவலத்தில் கேவலம் அதீதா தீதம் கேவலத் தில்சகலங்கள் வயிந்தவம் கேவத் திறசுத்தம் கேடில்விஞ் ஞாகலர்க்கு ஆவயின் நாதன் அருண்மூர்த்தி தானே. |
24 |
2251 |
சகலத்தில் கேவலம் சாக்கிரா தீதம் சகல சகலமே சாக்கிர சாக்கிரம் சகலத்திற் சுத்தமே தற்பரா வத்தை சகலத்தில் இம்மூன்று தன்மையும் ஆமே. |
25 |
2252 |
சுத்தத்தில் சுத்தமே தொல்சிவ மாகுதல் சுத்தத்தில் கேவலம் தொல்லுப சாந்தமாம் சுத்த சகலம் துரிய விலாசமாம் சுத்தத்தில் இம்மூன்றும் சொல்லலும் ஆமே. |
26 |
2253 |
சாக்கிர சாக்கிரம் தன்னில் கனவொடுஞ் சாக்கிரம் தன்னில் சுழுத்தி துரியமே சாக்கிரா தீதம் தனிற்சுகா னந்தமே ஆக்கு மறையாதி ஐம்மல பாசமே. |
27 |
2254 |
சாக்கிரா தீதத்தில் தானறும் ஆணவம் சாக்கிரா தீதம் பிராவத்தை தங்காது ஆக்கு பரோபதி யாஉப சாந்தத்தை நோக்கும் மலங்குணம் நோக்குதல் ஆகுமே. |
28 |
2255 |
பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும் சுத்த அதீதமும் தோன்றாமல் தானுணும் அத்தன் அருள்என்று அருளால் அறிந்தபின் சித்தமும் இல்லை செயல்இல்லை தானே. |
29 |
2256 |
எய்திய பெத்தமும் முத்தமும் என்பன எய்தும் அரன்அரு ளேவிளை யாட்டோடு எய்திடு உயிர்சுத்தத் திடுநெறி என்னவே எய்தும் உயிர்இறை பால்அறி வாமே. |
30 |
2257 |
ஐம்மலத் தாரும் மதித்த சகலத்தர் ஐம்மலத் தாரும் அருவினைப் பாசத்தார் ஐம்மலத் தார்சுவர்க் கந்நெறி யான்பவர் ஐம்மலத் தார்அர னார்க்குஅறி வோரே. |
31 |
2258 |
கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை அரிய துரியம் அதிலுண்ணும் ஆசையும் உரிய கழுனை முதல்எட்டும் சூக்கத்து அரிய கனாத்துலம் அந்தன வாமே. |
32 |
2259 |
ஆணவம் ஆகும் அதிதம்மேல் மாயையும் பூணும் துரியம் சுழுத்திபொய்க் காமியம் பேணும் கனவும் மாமாயை திரோதாயி காணும் நனவில் மலக்கலப்பு ஆகுமே. |
33 |
2260 |
அரன்முத லாக அறிவோன் அதீதத்தன் அரன்முத லாமாயை தங்கிச் சுழுனை கருமம் உணர்ந்து மாமாயைக் கைகொண்டோர் அருளும் அறைவார் சகலத்துற் றாரே. |
34 |
2261 |
உருவுற்றுப் போகமே போக்கியம் துற்று மருவுற்றுப் பூதம னாதியான் மன்னி வரும்அச் செயல்பற்றிச் சத்தாதி வைகிக் கருவுற் றிடுஞ் சீவன் காணும் சகலத்தே. |
35 |
2262 |
இருவிடை ஒத்திட இன்னருள் சத்தி மருவிட ஞானத்தில் ஆதனம் மன்னிக் குருவினைக்கொண்டருள் சத்திமுன் கூட்டிப் பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே. |
36 |
2263 |
ஆறாறும் ஆறதின் ஐ ஐந்து அவத்தையோடு ஈறாம் அதீதத் துரியத்து இவன்எய்தப் பேறான ஐவரும் போம்பிர காசத்து நீறார் பரம்சிவம் ஆதேய மாகுமே. |
37 |
2264 |
தன்னை அறியாது உடலைமுன் தான்என்றான் தன்னைமுன் கண்டான் துரியம் தனைக்கண்டான் உன்னும் துரியமும் ஈசனோடு ஒன்றாக்கால் பின்னையும் வந்து பிறந்திடும் தானே. |
38 |
2265 |
சாக்கிரத் தன்னில் அதீதம் தலைப்படில் ஆக்கிய அந்த வயிந்தவம் ஆனந்தம் நோக்கும் பிறப்புஅறும் நோன்முத்தி சித்தியாம் வாக்கும் மனமும் மருவல்செய் யாவே. |
39 |
2266 |
அப்பும் அனலும் அகலத்து ளேவரும் அப்பும் அனலும் அகலத்து ளேவாரா அப்பும் அனலும் அகலத்துள் ஏதெனில் அப்பும் அனலும் கலந்ததுஅவ் வாறே. |
40 |
2267 |
அறுநான்கு அசுத்தம் அதிசுத்தா சுத்தம் உறும்ஏழு மாயை உடன்ஐந்தே சுத்தம் பெறுமாறு இவைமூன்றும் கண்டத்தால் பேதித்து உறும்மாயை மாமாயை ஆன்மாவி னோடே. |
41 |
2268 |
மாயைகைத் தாயாக மாமாயை ஈன்றிட ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே ஏயும் உயிர்க்கே வலசகலத்து எய்தி ஆய்தரு சுத்தமும் தான்வந்து அடையுமே. |
42 |
8. பராவத்தை
2269 |
அஞ்சும் கடந்த அனாதி பரன்தெய்வம் நெஞ்சம தாய நிமலன் பிறப்பிலி விஞ்சும் உடலுயிர் வேறு படுத்திட வஞ்சத் திருந்த வகையறிந் தேனே. |
1 |
2270 |
சத்தி பராபரம் சாந்தி தனிலான சத்தி பரானந்தம் தன்னில் சுடர்விந்து சத்திய மாயை தனுச்சத்தி ஐந்துடன் சத்தி பெறுமுயிர் தான்அங்கத்து ஆறுமே. |
2 |
2271 |
ஆறாறுக்கு அப்பால் அறிவார் அறிபவர் ஆறாறுக்கு அப்பால் அருளார் பெறுபவர் ஆறாறுக்கு அப்பால் அறிவாம் அவர்கட்கே ஆறாறுக்கு அப்பால் அரன்இனி தாமே. |
3 |
2272 |
அஞ்சொடு நான்கும் கடந்துஅக மேபுக்குப் பஞ்சணி காலத்துப் பள்ளி துயில்கின்ற விஞ்சையர் வேந்தனும் மெல்லிய லாளொடு நஞ்சுற நாடி நயம்செய்யு மாறே. |
4 |
2273 |
உரிய நனாத்துரி யத்தில் இவளாம் அரிய துரிய நனவாதி மூன்றில் பரிய பரதுரி யத்தில் பரனாம் திரிய வரும்துரி யத்தில் சிவமே. |
5 |
2274 |
பரமாம் அதீதமே பற்றறப் பற்றப் பரமாம் அதீதம் பயிலப் பயிலப் பரமாம் அதீதம் பயிலாத் தபோதனார் பரமாகார் பாசமும் பற்றொன்றுஅ றாதே. |
6 |
2275 |
ஆயும்பொய்ம் மாயை அகம்புற மாய்நிற்கும் வாயு மனமும் கடந்துஅம் மயக்கறின் தூய அறிவு சிவானந்த மாகிப்போய் வேயும் பொருளாய் விளைந்தது தானே. |
7 |
2276 |
துரியப் பரியில் இருந்தஅச் சீவனைப் பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டு நரிகளை ஓடத் துரத்திய நாதர்க்கு உரிய வினைகள் நின்று ஓலமிட் டன்றே. |
8 |
2277 |
நின்றஇச் சாக்கிர நீள்துரி யத்தினின் மன்றனும் அங்கே மணம்செய்ய நின்றிடும் மன்றன் மணம்செய்ய மாயை மறைந்திடும் அன்றே இவனும் அவன்வடி வாமே. |
9 |
2278 |
விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய் இருந்த இடத்திடை ஈடான மாயை பொருந்தும் துரியம் புரியல்தா னாகும் தெரிந்த துரியத்துத் தீதுஅக லாதே. |
10 |
2279 |
உன்னை அறியாது உடலைமுன் நான்ஒன்றாய் உன்னை அறிந்து துரியத்து உறநின்றாய் தன்னை அறிந்தும் பிறவி தணவாதால் அன்ன வியாத்தன் அமலன் என்று அறிதியே. |
11 |
2280 |
கருவரம்பு ஆகிய காயம் துரியம் இருவரும் கண்டீர் பிறப்புஇறப்பு உற்றார் குருவரம் பெற்றவர் கூடிய பின்னை இருவரும் இன்றிஒன் றாகி நின் றாரே. |
12 |
2281 |
அணுவின் துரியத்தில் ஆன நனவும் அணுஅசை வின்கண் ஆனகனவும் அணுஅசை வில்பரா தீதம் கழுத்தி பணியில் பரதுரி யம்பர மாமே. |
13 |
2282 |
பரதுரி யத்து நனவும் பரந்து விரிசகம் உண்ட கனவும்மெய்ச் சாந்தி உருவுறு கின்ற சுழுத்தியும் ஓவத் தெரியும் சிவதுரி யத்தனு மாமே. |
14 |
2283 |
பரமா நனவின்பின் பால்சக முண்ட திரமார் கனவும் சிறந்த சுழுத்தி உரமாம் உபசாந்தம் உற்றல் துறவே தரனாம் சிவதுரி யத்தனும் ஆமே. |
15 |
2284 |
சீவன் துரியம் முதலாகச் சீரான ஆவ சிவன்துரி யாந்தம் அவத்தைபத்தும் ஓவும் பராநந்தி உண்மைக்குள் வைகியே மேவிய நாலேழ் விடுவித்துநின் றானே. |
16 |
2285 |
பரம்சிவன் மேலாம் பரமம் பரத்தில் பரம்சிவன் மேலாம் பரநனவாக விரிந்த கனாவிடர் வீட்டும் கழுமுனை உரந்தரும் மாநந்தி யாம்உண்மை தானே. |
17 |
2286 |
சார்வாம் பரம்சிவன் சத்தி பரநாதம் மேலாய விந்து சதாசிவம் மிக்கோங்கிப் பாலாய்ப் பிரமன் அரிஅம ராபதி தேவாம் உருத்திரன் ஈசனாம் காணிலே. |
18 |
2287 |
கலப்புஅறி யார்கடல் சூழ்உல கேழும் உலப்புஅறி யார்உட லோடுஉயிர் தன்மை அலப்புஅறிந்து இங்குஅர சாளகி லாதார் குறிப்பது கோலம் அடலது வாமே. |
19 |
2288 |
பின்னை அறியும் பெருந்தவத்து உண்மைசெய் தன்னை அறியில் தயாபரன் எம்இறை முன்னை அறிவு முடிகின்ற காலமும் என்னை அறியலுற்று இன்புற்ற வாறே. |
20 |
2289 |
பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம் பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம் தன்னை மறைத்தது தன்கர ணங்களாம் தன்னின் மறைந்தது தன்கர ணங்களே. |
21 |
2290 |
மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தின் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தை மறைந்தது பார்முதல் பூதமே. |
22 |
2291 |
ஆறாறு ஆகன்று நமவிட்டு அறிவாகி வேறான தானே யகாரமாய் மிக்கோங்கி ஈறார் பரையின் இருளற்ற தற்பரன் பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே. |
23 |
2292 |
துரியத்தில் ஓரைந்தும் சொல்அக ராதி விரியப் பரையில் மிகும்நாதம் அந்தம் புரியப் பரையில் பராவத்தா போதம் திரிய பரமம் துரியம் தெரியவே. |
24 |
2293 |
ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்றுப் பந்திடும் சுத்த அவத்தைப் பதைப்பினில் நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம் அந்தி இருள்போலும் ஐம்மலம் மாறுமே. |
25 |
2294 |
ஐஐந்து மட்டுப் பகுதியும் மாயையும் பொய்கண்ட மாமாயை தானும் புருடன்கண்டு எய்யும் படியாய் எவற்றுமாய் அன்றாகி உய்யும் பராவத்தை உள்ளுதல் சுத்தமே. |
26 |
2295 |
நின்றான் அருளும் பரமும்முன் நேயமும் ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும் சென்றான் எனைவிடுத்து ஆங்கிச் செல்லாமையும் நன்றான ஞானத்தின் நாதப் பிரானே. |
27 |
9. முக்குண நிர்க்குணம்
2296 |
சாத்திகம் எய்தும் நனவெனச் சாற்றுங்கால் வாய்ந்த இராசதம் மன்னும் கனவென்ப ஒய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம் மாய்த்திடும் நிற்குணம் மாசில் துரியமே. |
1 |
10. அண்டாதி பேதம்
2297 |
பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம் எறிகடல் ஏழின் மணல்அள வாகப் பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச் செறியும் அண் டாசனத் தேவர் பிரானே. |
1 |
2298 |
ஆனந்த தத்துவம் அண்டா சலத்தின்மேல் மேனிஐந்தாக வியாத்தம்முப் பத்தாறாய்க் தான்அந்த மில்லாத தத்துவம் ஆனவை ஈனமி லா அண்டத்து எண்மடங்கு ஆமே. |
2 |
11. பதினோராம் தானமும் அவத்தையெனக் காணல்
2299 |
அஞ்சில் அமுதும்ஓர் ஏழின்கண் ஆனந்தம் முஞ்சில்ஓங் காரம் ஓர் ஒன்பான் பதினொன்றில் வஞ்சக மேநின்று வைத்திடில் காயமாம் கிஞ்சுகக் செவ்வாய்க் கிளிமொழி கேளே. |
1 |
2300 |
புருட னுடனே பொருந்திய சித்தம் அருவமொ டாறும் அதீதத் துரியம் விரியும் சுழுத்தியின் மிக்குள்ள எட்டும் அரிய பதினொன்று மாம்அவ் அவத்தையே. |
2 |
2301 |
காட்டும் பதினொன்றும் கைகலந் தால்உடல் நாட்டி அழுத்திடின் நந்திஅல்லால் இல்லை ஆட்டம்செய் யாத அதுவிதி யேநினை ஈட்டு மதுதிடம் எண்ணலும் ஆமே. |
3 |
12. கலவு செலவு
2302 |
கேவலம் தன்னில் கலவச் சகலத்தின் மேவும் செலவு விடவரு நீக்கத்துப் பாவும் தனைக்கண்டால் மூன்றும் படர்வற்ற தீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே. |
1 |
2303 |
வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச் செல்லும் அளவும் செலுத்துமி? சிந்தையை அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால் கல்லும் பிளந்து கடுவெளி யாமே. |
2 |
13. நின்மல அவத்தை
2304 |
ஊமைக் கிணற்றகத் துள்ளே உறைவதோர் ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்துள வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல் ஆமையின் மேலும்ஓர் ஆயிரத்து ஆண்டே. |
1 |
2305 |
காலங்கி நீர்பூக் கலந்தஆ காயம் மாலங்கி ஈசன் பிரமன் சதாசிவன் மேலஞ்சும் ஓடி விரவவல் லார்கட்குக் காலனும் இல்லை கருத்தில்லை தானே. |
2 |
2306 |
ஆன்மாவே மைந்தன் ஆயினன் என்பது தான்மா மறையறை தன்மை அறிகிலர் ஆன்மாவே மைந்தன் அரனுக்கு இவன்என்றால் ஆன்மாவும் இல்லையால் ஐஐந்தும் இல்லையே. |
3 |
2307 |
உதயம் அழுங்கில் ஒடுங்கல்இம் மூன்றின் கதிசாக் கிரங்கன வாதி சுழுத்தி பதிதரு சேதனன் பற்றாம் துரியத்து அதிசுப னாய்அனந் தான் அந்தி யாகுமே. |
4 |
2308 |
எல்லாம்தன் னுட்புக யாவுளும் தானாகி நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர் பொல்லாத ஆறாறுள் போகாது போதமாய்ச் செல்லாச் சிவகதி சென்றுஎய்தும் அன்றே. |
5 |
2309 |
காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும் வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல் ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத் தோய்ந்த கருமத் துரிசுஅக லாதே. |
6 |
2310 |
ஆன மறையாதி யாம் உரு நந்திவந்து ஏனை அருள்செய் தெரிநனா அவத்தையில் ஆன வகையை விடும்அடைத் தாய்விட ஆன மாலதீதம் அப்பரந் தானே. |
7 |
2311 |
சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில் அத்தன் அருள்நீங்கா ஆங்கணில் தானாகச் சித்த சுகத்தைத் தீண்டாச் சமாதிசெய்து அத்தனோடு ஒன்றற்கு அருள்முத லாமே. |
8 |
2312 |
வேறுசெய் தான்இரு பாதியின் மெய்த்தொகை வேறுசெய் தான்என்னை எங்கணும் விட்டுய்த்தான் வேறுசெய் யாஅருள் கேவலத் தேவிட்டு வேறுசெய் யாஅத்தன் மேவிநின் றானே. |
9 |
2313 |
கறங்குஓலை கொள்ளிவட் டம்கட லில்திரை நிறஞ்சேர் ததிமத்தன் மலத்தே நின்றங்கு அறங்காண் சுவர்க்க நரகம் புவிசேர்த்து கிரங்கா உயிர்அரு ளால்இவை நீங்குமே. |
10 |
2314 |
தானே சிவமான தன்மை தலைப்பட ஆன மலமும்அப் பாச பேதமும் ஆன குணமும் பரான்மா உபாதியும் பானுவின் முன்மதி போல்பலராவே. |
11 |
2315 |
நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்கு அருக்கனும் சோமனும் அங்கே அமரும் திருத்தக்க மாலும் திசைமுகன் தானும் உருத்திர சோதியும் உள்ளத்து ளாரே. |
12 |
2316 |
ஆனைகள் ஐந்தம் அடங்கி அறிவென்னும் ஞானத் திரியைக் கொளுவி அதனுட்புக்கு ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு வானகம் ஏற வழிஎளி தாமே. |
13 |
2317 |
ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும் தாடித் தெழுந்த தமருக ஓசையும் பாடி எழுகின்ற வேதாக மங்களும் நாடியின் உள்ளாக நான்கண்ட வாறே. |
14 |
2318 |
முன்னை அறிவினில் செய்த முதுதவம் பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம் தன்னை அறிவது அறிவாம் அ தன்றிப் பின்னை அறிவது பேயறி வாகுமே. |
15 |
2319 |
செயலற் றிருக்கச் சிவானந்த மாகும் செயலற் றிருப்பார் சிவயோகம் தேடார் செயலற் றிருப்பார் செகத்தோடுங் கூடார் செயலற் றிருப்பார்க்கே செய்தியுண் டாமே. |
16 |
2320 |
தான்அவ னாகும் சமாதிகை கூடினால் ஆன மலம்அறும் அப்பசுத் தன்மைபோம் ஈனமில் காயம் இருக்கும் இருநிலத்து ஊனங்கள் எட்டும் ஒழித்தொன்று வோர்கட்கே. |
17 |
2321 |
தொலையா அரனடி தோன்றும் அம் சத்தி தொலையா இருளொளி தோற்ற அணுவும் தொலையாத் தொழின்ஞானம் தொன்மையில் நண்ணித் தொலையாத பெத்தம்முத் திக்கிடை தோயுமே. |
18 |
2322 |
தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ்சத்தி மான்றும் தெருண்டும் உயிர்பெறும் மற்றவை தான்தரு ஞானம் தன் சத்திக்குச் சாதனாம் ஊன்றல்இல் லாஉள் ளொளிக்கு ஒளி யாமே. |
19 |
2323 |
அறிகின்றி லாதன ஐஏழும் ஒன்றும் அறிகின்ற என்னை அறியா திருந்தேன் அறிகின்றாய் நீயென்று அருள்செய்தான் நந்தி அறிகின்ற நானென்று அறிந்துகொண் டேனே. |
20 |
2324 |
தான்அவ னாகிய ஞானத் தலைவனை வானவ ராதியை மாமணிச் சோதியை ஈனமில் ஞானத்து இன்னருள் சத்தியை ஊனமிலாள்தன்னை ஊனிடைக் கண்டதே. |
21 |
2325 |
ஒளியும் இருளும் பரையும் பரையுள் அளியது எனலாகும் ஆன்மாவை யன்றி அளியும் அருளும் தெருளும் கடந்து தெளிய அருளே சிவானந்த மாமே. |
22 |
2326 |
ஆனந்த மாகும் அரனருட் சத்தியில் தான் அந்த மாம்உயிர் தானே சமாதிசெய்து ஊன்அந்த மாய் உணர் வாய்உள் உணர்வுறில் கோன்அந்தம் வாய்க்கும் மகாவா கியமாமே. |
23 |
2327 |
அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும் அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும் அறிவுற்று அறியாமை எய்திநிற் போர்க்கே அறிவிக்கத் தம்அறி வார்அறி வோரே. |
24 |
2328 |
சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கூடிச் சித்தும் அசித்தும் சிவசித்த தாய்நிற்கும் சுத்தம் அசுத்தம் தொடங்காத துரியத்துச் சுத்தரா மூன்றுடன் சொல்லற் றவர்களே. |
25 |
2329 |
தானே அறியான் அறிவிலோன் தானல்லன் தானே அறிவான் அறிவு சதசத்தென்று ஆனால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத் தானே அறிந்து சிவத்துடன் தங்குமே. |
24 |
2330 |
தத்துவ ஞானம் தலைப்பட் டவர்க்கே தத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும் தத்துவ ஞானத்துத் தான்அவ னாகவே தத்துவ ஞானானந் தந்தான் தொடங்குமே. |
27 |
2331 |
தன்னை அறிந்து சிவனுடன் தானாக மன்னும் மலம்குணம் மாளும் பிறப்பறும் பின்அது சன்முத்தி சன்மார்க்கப் பேரொளி நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே. |
28 |
2332 |
ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம் தானுறும் இச்சை உயிராகத் தற்பரன் மேனிகொண்டு ஐங்கரு மத்தவித் தாதலான் மோனிகள் ஞானத்து முத்திரை பெற் றார்களே. |
29 |
2333 |
உயிர்க்குஅறி உண்மை உயிர்இச்சை மானம் உயிர்க்குக் கிரியை உயிர்மாயை சூக்கம் உயிர்க்குஇவை ஊட்டுவோன் ஊட்டும் அவனே உயிர்ச்சொல் அன்றி அவ்வுளத்து ளானே. |
30 |
2334 |
தொழில்இச்சை ஞானங்கள் தொல்சிவசீவர் கழிவற்ற மாமாயை மாயையின் ஆகும் பழியற்ற காரண காரியம் பாழ்விட்டு அழிவற்ற சாந்தாதீ தன்சிவ னாமே. |
31 |
2335 |
இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி இல்லதம் உள்ளது மாய்அன்றாம் அண்ணலைச் சொல்வது சொல்லிடில் தூராகி தூரமென்று ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயி ராகுமே. |
32 |
2336 |
உயிரிச்சை யூட்டி உழிதரும் சத்தி உயிரிச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம் உயிரிச்சை யூட்டி யுடனுறலாலே உயிரிச்சை வாட்டி உயர்பதஞ் சேருமே. |
33 |
2337 |
சேரும் சிவமானார் ஐம்மலம் தீர்ந்தவர் ஓர்ஒன்றி லார் ஐம் மலஇருள் உற்றவர் பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர் ஆருங்கண் டோரார் அவையருள் என்றே. |
34 |
2338 |
எய்தினர் செய்யும் இருமாயா சத்தியின் எய்தினர் செய்யும் இருஞான சத்தியின் எய்தினர் செய்யும் இருஞால சத்தியின் எய்தினர் செய்யும் இறையருள் தானே. |
35 |
2339 |
திருந்தினர் விட்டார் திருவில் நரகம் திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம் திருந்தினர் விட்டார் செறிமலர் கூட்டம் திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே. |
36 |
2340 |
அவமும் சிவமும் அறியார் அறியார் அவமும் சிவமும் அறிவார் அறிவார் அவமும் சிவமும் அருளால் அறிந்தால் அவமும் சிவமும் அவனரு ளாமே. |
37 |
2341 |
அருளான சத்தி அனல் வெம்மை போல பொருள் அவனாகத்தான் போதம் புணரும் இருள் ஒளியாய் மீண்டு மும்மல மாகும் திருவருள் ஆனந்தி செம்பொருளாமே. |
38 |
2342 |
ஆதித்தன் தோன்ற வரும்பது மாதிகள் பேதித்த தவ்வினை யாற்செயல் சேதிப்ப ஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப் பேதித்தப் பேதியா வாறுஅருட் பேதமே. |
39 |
2343 |
பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும் போதம் புணர்போதம் போதமும் நாதமும் நாத முடன்நாக நாதாதி நாதமும் ஆதன் அருளின் அருள்இச்சை யாமே. |
40 |
2344 |
மேவிய பொய்க்கரி யாட்டும் வினையெனப் பாவிய பூதம்கொண்டு ஆட்டிப் படைப்பாதி பூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள் ஆவியை நாட்டும் அரன்அரு ளாமே. |
41 |
2345 |
ஆறாது அகன்று தனையறிந் தானவன் ஈறாகி யாவினும் இயலாவும் தனில்எய்த வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அம்மருள் தேறாத் தெளிவுற்றுத் தீண்டச் சிவமாமே. |
42 |
2346 |
தீண்டற்குரிய அரிய திருவடி நேயத்தை மீண்டுற்று அருளால் விதிவழியே சென்று தூண்டிச் சிவஞான மாவினைத் தானேறித் தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே. |
43 |
2347 |
சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர் சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர் சார்ந்தவர் நேயந் தலைப்ட்ட ஆனந்தர் சார்ந்தவர் சத்த அருள்தன்மை யாரே. |
44 |
2348 |
தான்என்று அவன்என்று இரண்டென்பர் தத்துவம் தான்என்று அவன்என்று இரண்டற்ற தன்மையத் தான்என்று இரண்டுஉன்னார் கேவலத் தானவர் தான்இன்றித் தானாகத் தத்துவ சுத்தமே. |
45 |
2349 |
தன்னினில் தன்னை அறியும் தலைமகன் தன்னினில் தன் ஐ அறியத் தலைப்படும் தன்னினில் தன்னைச் சார்கிலன் ஆகில் தன்னினில் தன்ஐயும் சார்தற்கு அரியவே. |
46 |
2350 |
அறியகி லேன்என்று அரற்றாதே நீயும் நெறிவழி யேசென்ற நேர்பட்ட பின்னை இருசுட ராகி இயற்றவல் லானும் ஒருசுட ராவந்துஎன் உள்ளத்துள் ஆமே. |
47 |
2351 |
மண்ஒன்று தான்பல நற்கலன் ஆயிடும் உள்கின்ற யோனிகட்டு எல்லாம் ஒருவனே கண்ஒன்று தான்பல காணும் தனைக்காணா அண்ணலும் அவ்வண்ணம் ஆகிநின்றானே. |
48 |
2352 |
ஓம்புகின் றான்உலகு ஏழையும் உள்நின்று கூம்புகின் றார்குணத் தின்னொடும் கூறுவர் தேம்புகின்றார்சிவன் சிந்தைசெய் யாதவர் கூம்பகில் லார்வந்து கொள்ளலும் ஆமே. |
49 |
2353 |
குறிஅறி யார்கள் குறிகாண மாட்டார் குறிஅறி யார்கடம் கூடல் பெரிது குறிஅறி யாவகை கூடுமின் கூடி அறிவறி யாஇருந்து அன்னமும் ஆமே. |
50 |
2354 |
ஊனோ உயிரோ உறுகின்றது ஏதுஇன்பம் வானோர் தலைவி மயக்கத்து உறநிற்கத் தானோ பெரிதுஅறி வோம் என்னும் மானுடர் தானே பிறப்போடு இறப்பறி யாரே. |
51 |
14. அறிவுதயம்
2355 |
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே. |
1 |
2356 |
அங்கே அடற்பெரும் தேவரெல் லாம்தொழச் சிங்கா தனத்தே சிவன்இருந் தானென்று சங்குஆர் வளையும் சிலம்பும் சரேலெனப் பொங்குஆர் குழலியும் போற்றிஎன் றாளே. |
2 |
2357 |
அறிவு வடிவென்று அறியாத என்னை அறிவு வடிவென்று அருள்செய்தான் நந்தி அறிவு வடிவென்று அருளால் உணர்ந்தே அறிவு வடிவென்று அருந்திருந் தானே. |
3 |
2358 |
அறிவுக்கு அழிவில்aல ஆக்கமும் இல்லை அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு அறைகின் றனமறை ஈறுகள் தாமே. |
4 |
2359 |
ஆயு மலரின் அணிமலர் தன்மேலே பாய இதழ்கள் பதினாறும் அங்குள தூய அறிவு சிவானந்த மாகியே போய அறிவாய்ப் புணர்ந்திருந் தானே. |
5 |
2360 |
மன்னிநின் றாரிடை வந்தருள் மாயத்து முன்னிநின் றாமை மொழிந்தேன் முதல்வனும் பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப் பின்னிநின் றேன்நீ பெரியையென் றானே. |
6 |
2361 |
அறிவுஅறி வாக அறிந்துஅன்பு செய்மின் அறிவுஅறி வாக அறியும்இவ் வண்ணம் அறிவுஅறி வாக அணிமாதி சித்தி அறிவுஅறி வாக அறிந்தணன் நந்தியே. |
7 |
2362 |
அறிவுஅறி வென்று அங்கு அரற்றும் உலகம் அறிவுஅறி யாமை யாரும் அறியார் அறிவுஅறி யாமை கடந்துஅறி வானால் அறிவுஅறி யாமை அழகிய வாறே. |
8 |
2363 |
அறிவுஅறி யாமையை நீவி யவனே பொறிவாய் ஒழிந்துஎங்கும் தானான போது அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவின் செறிவாகி நின்றவன் சிவனும் ஆமே. |
9 |
2364 |
அறிவுடை யார்நெஞ்சு அகலிடம் ஆவது அறிவுடை யார்நெஞ்ச அருந்தவம் ஆவது அறிவுடை யார்நெஞ்சொடு ஆதிப் பிரானும் அறிவுடை யார்நெஞ்சத்து அங்குநின் றானே. |
10 |
2365 |
மாயனும் ஆகி மலரோன் இறையுமாய்க் காயநன் னாட்டுக் கருமுதல் ஆனவன் சேயன் அணியன் தித்திக்கும் தீங்கரும் பாய்அமு தாகிநின்று அண்ணிக்கின் றானே. |
11 |
2366 |
என்னை அறிந்திலேன் இத்தனை காலமும் என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன் என்னை அறிந்திட்டு இருத்தலும் கைவிடாது என்னையிட்டு என்னை உசாவுகின் றானே. |
12 |
2367 |
மாய விளக்கது நின்று மறைந்திடும் தூய விளக்கது நின்று சுடர்விடும் காய விளக்கது நின்று கனன்றிடும் சேய விளக்கினைத் தேடுகின் றேனை. |
13 |
2368 |
தேடுகின் றேன்திசை எட்டோடு இரண்டையும் நாடுகின் றேன்நல மேஉடை யானடி பாடுகின் றேன்பர மேதுணை யாமெனக் கூடுகின் றேன்குறை யாமனைத் தாலே. |
14 |
2369 |
முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர் பின்னை பெருமலம் வந்தவர் பேர்த்திட்டுத் தன்னைத் தெரிந்துதன் பண்டைத் தலைவன்தன் மன்னிச் சிவமாக வாரா பிறப்பே. |
15 |
15. ஆறு அந்தம்
2370 |
வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும் நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும் ஓதத் தகும்எட்டு யோகாநந்த அந்தமும் ஆதிக்க லாந்தமும் ஆறந்தம் ஆமே. |
1 |
2371 |
அந்தம்ஓர் ஆறும் அறிவார் அதிசுத்தர் அந்தம்ஒர் ஆறும் அறிவார் அமலத்தர் அந்தம்ஓர் ஆறும் அறியார் அவர்தமக்கு அந்தமோடு ஆதி அறியஒண் ணாதே. |
2 |
2372 |
தானான வேதாந்தம் தான்என்னும் சித்தாந்தம் ஆனாத் துரியத்து அணுவன் தனைக்கண்டு தேனார் பராபரம் சேர்சிவ யோகமாய் ஆனா மலமற்று அரும்சித்தி யாதலே. |
3 |
2373 |
நித்தம் பரனோடு உயிருற்று நீள்மனம் சத்தம் முதல்ஐந்தும் தத்துவத் தால்நீங்கச் சுத்தம் அசுத்தம் தொடரா வகைநினைந்து அத்தன் பரன்பால் அடைதல்சித் தாந்தமே. |
4 |
2374 |
மேவும் பிரமனே விண்டு உருத்திரன் மேவுசெய் ஈசன் சதாசிவன் மிக்கு அப்பால் மேவும் பரவிந்து நாதம் விடாஆறாறு ஓவும் பொழுதுஅணு ஒன்றுஉள தாமே. |
5 |
2375 |
உள்ள உயிர்ஆறாற தாகும் உபாதியைத் தெள்ளி அகன்றுநா தாந்தத்தைச் செற்றுமேல் உள்ள இருள்நீங்க ஓர்iஉணர் வாகுமேல் எள்ளலின் நாதாந்தத்து எய்திடும் போதமே. |
6 |
2376 |
தேடும் இயம நியமாதி சென்றகன்று ஊடும் சமாதியில் உற்றுப் படர்சிவன் பாடுறச் சீவன் பரமாகப் பற்றறக் கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே. |
7 |
2377 |
கொள்கையில் ஆன கலாந்தம் குறிக்கொள்ளில் விள்கையில் ஆன நிவிர்த்தாதி மேதாதிக்கு உள்ளன வாம்விந்து உள்ளே ஓடுங்கலும் தெள்ளி அதனைத் தெளிதலும் ஆமே. |
8 |
2378 |
தெளியும் இவையன்றித் தேர்ஐங் கலைவேறு ஒளியுள் அமைந்துள்ளது ஓரவல் லார்கட்கு அளியவ னாகிய மந்திரம் தந்திரம் தெளிஉப தேசஞா னத்தொடுஐந் தாமே. |
9 |
2379 |
ஆகும் அனாதி கலைஆ கமவேதம் ஆகும்அத் தந்திரம் அந்நூல் வழிநிற்றல் ஆகும் அனாதி உடல்அல்லா மந்திரம் ஆகும் சிவபோ தகம்உப தேசமே. |
10 |
2380 |
தேசார் சிவமாகும் தன்ஞானத் தின்கலை ஆசார நேய மறையும் கலாந்தத்துப் பேசா உரையுணர் வற்ற பெருந்தகை வாசா மகோசர மாநந்தி தானே. |
11 |
2381 |
தான்அவ னாகும் சமாதி தலைப்படில் ஆன கலாந்தநா தாந்தயோ காந்தமும் ஏனைய போதாந்தம் சித்தாந்த மானது ஞான மென்ஞேய ஞாதுரு வாகுமே. |
12 |
2382 |
ஆறந்த மும்சென்று அடங்கும்அந் நேயத்தே ஆறந்த ஞேயம் அடங்கிடும் ஞாதுரு கூறிய ஞானக் குறியுடன் வீடவே தேறிய மோனம் சிவானந்த மாமே. |
13 |
2383 |
உண்மைக் கலைஆறுஓர் ஐந்தான் அடங்கிடும் உண்மைக் கலாந்தம் இரண்டுஐந்தோடு ஏழ்அந்தம் உண்மைக் கலைஒன்றில் ஈறாய நாதாந்தத்து உண்மைக் கலைசொல்ல ஓர்அந்தம் ஆமே. |
14 |
2384 |
ஆவுடை யானை அரன்வந்து கொண்டபின் தேவுடை யான்எங்கள் சீர்நந்தி தாள்தந்து வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக் கூளி யருளிய கோனைக் கருதுமே. |
15 |
2385 |
கருதும் அவர்தம் கருத்தினுக்கு ஒப்ப அரனுரை செய்தருள் ஆகமந் தன்னில் வருசமயப் புற மாயைமா மாயை உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே. |
16 |
2386 |
வேதாந்தம் சித்தாந்தம் வேறிலா முத்திரை போதாந்த ஞானம் யோகாந்தம் பொதுஞேய நாதாந்தம் ஆனந்தம் சீரோ தயமாகும் மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே. |
17 |
2387 |
வேதாந்தம் தன்னில் உபாதிமே வேழ்விட நாதாந்த பாசம் விடுநல்ல தொம்பதம் மீதாந்த காரணோ பாதியேழ் மெய்ப்பரன் போதாந்த தற்பதம் போமசி என்பவே. |
18 |
2388 |
அண்டங்கள் ஏழும் கடந்துஅகன்று அப்பாலும் உண்டென்ற பேரொளிக் குள்ளாம் உளஒளி பண்டுறு நின்ற பராசக்தி என்னவே கொண்டவன் அன்றிநின் றான்தங்கள் கோவே. |
19 |
2389 |
கோஉணர்ந் தும்சத்தி யாலே குறிவைத்துத் தேவுணர்த் துங்கரு மஞ்செய்தி செய்யவே பாவனைத் தும்படைத் தர்ச்சனை பாரிப்ப ஓஅனைத் துண்டுஒழி யாத ஒருவனே. |
20 |
2390 |
ஒருவனை உன்னார் உயிர்தனை உன்னார் இருவினை உன்னார் இருமாயை உன்னார் ஒருவனு மேயுள் உணர்ந்திநின் றூட்டி அருவனு மாகிய ஆதரத் தானே. |
21 |
2391 |
அரன்அன்பர் தானம தாகிச் சிவத்து வருமவை சத்திகள் முன்னா வகுத்திட்டு உரனுறு சந்நிதி சேட்டிப்ப என்றும் திரனுறு தோயாச் சிவாநந்தி யாமே. |
22 |
2392 |
வேதாந்த தொம்பதம் மேவும் பசுஎன்ப நாதாந்த பாசம் விடநின்ற நன்பதி போதாந்த தற்பதம் போய்இரண்டு ஐக்கியம் சாதா ரணம்சிவ சாயுச் சிய மாமே. |
23 |
2393 |
சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும் அவம்அவம் ஆகும் அவ்வவ் இரண்டும் சிவமாம் சதாசிவன் செய்துஒன்றான் ஆனால் நவமான வேதாந்தம் ஞானசித் தாந்தமே. |
24 |
2394 |
சித்தாந்த தேசீவன் முத்திசித் தித்திலால் சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்திவர் சித்தாந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால் சிந்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே. |
25 |
2395 |
சிவனைப் பரமனுள் சீவனுள் காட்டும் அவமற்ற வேதாந்த சித்தாந்தம் ஆனால் நவமுற்று அவத்தையில் ஞானம் சிவமாம் தவமிக்கு உணர்ந்தவர் தத்துவத் தாரே. |
26 |
2396 |
தத்துவம் ஆகும் சகள அகளங்கள் தத்துவ மாம்விந்து நாதம் சதாசிவம் தத்துவ மாகும் சீவன் தன் தற்பரம் தத்துவ மாம்சிவ சாயுச் சியமே. |
27 |
2397 |
வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல் ஓதும் பொதுவும் சிறப்பும்என்று உள்ளன நாதன் உரையவை நாடில் இரண்டந்தம் பேதமது என்பர் பெரியோர்க்கு அபேதமே. |
28 |
2398 |
பராநந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம் பரானந்தம் மேல்மூன்றும் பாழுறா ஆனந்தம் விராமுத்தி ரானந்தம் மெய்நடன ஆனந்தம் பொராநின்ற உள்ளமே பூரிப்பி யாமே. |
29 |
2399 |
ஆகுங் கலாந்தம் இரண்டந்த நாதாந்தம் ஆகும் பொழுதிற் கலைஐந்தாம் ஆதலில் ஆகும் அரனேபஞ் சாந்தகன் ஆம் என்ற ஆகும் மறைஆ கமம்மொழிந் தான்அன்றே. |
30 |
2400 |
அன்றாகும் என்னாதுஐ வகைஅந்தம் அன்னை ஒன்றான வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டு நின்றால் யோகாந்தம் நேர்படும் நேர்பட்டால் மன்றாடி பாதம் மருவலும் ஆமே. |
31 |
2401 |
அனாதி சீவன்ஐம் மலமற்றுஅப் பாலாய் அனாதி அடக்கித் தனைக்கண்டு அரனாய்த் தன்ஆதி மலம்கெடத் தத்துவா தீதம் வினாவுநீர் பாலாதல் வேதாந்த உண்மையே. |
32 |
2402 |
உயிரைப் பரனை உயிர்சிவன் தன்னை அயர்வற்று அறிதொந் தத்தசி அதனால் செயலற்று அறிவாகி யும்சென்று அடங்கி அயர்வற்ற வேதாந்த சித்தாந்தம் ஆமே. |
33 |
2403 |
மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம் சென்னிய தான சிவயோகமாம் ஈதென்ன அன்னது சித்தாந்த மாமறை யாய்பொருள் துன்னிய ஆகம நூலெனத் தோன்றுமே. |
34 |
2404 |
முதலாகும் வேத முழுதுஆ கமம்அகப் பதியான ஈசன் பகர்ந்தது இரண்டு முதிதான வேதம் முறைமுறை யால்அமர்ந்து அதிகாதி வேதாந்த சித்தாந்தம் ஆகவே. |
35 |
16. பதி பசு பாசம் வேறின்மை
2405 |
அறிவுஅறிவு என்ற அறிவும் அனாதி அறிவுக்கு அறிவாம் பதியும் அனாதி அறிவினைக் கட்டிய பாசம் அனாதி அறிவு பதியில் பிறப்பறுந் தானே. |
1 |
2406 |
பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப் பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு பசுத்தன்மை நீக்கிஅப் பாசம் அறுத்தால் பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே. |
2 |
2407 |
கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்று நடக்கின்ற ஞானத்தை நாடோறும் நோக்கித் தொடக்குஒன்றும் இன்றித் தொழுமின் தொழுதால் குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே. |
3 |
2408 |
பாசம்செய் தானைப் படர்சடை நந்தியை நேசம்செய்து ஆங்கே நினைப்பர் நினைத்தாலும் கூசம் செய்து உன்னிக் குறிக்கொள்வது எவ்வண்ணம் வாசம்செய் பாசத்துள் வைக்கின்ற வாறே. |
4 |
2409 |
விட்ட விடம்ஏறா வாறுபோல் வேறாகி விட்ட பசுபாசம் மெய்கண்டோன் மேவுறான் சுட்டிய கேவலம் காணும் சகலத்தைச் சுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே. |
5 |
2410 |
நாடும் பதியுடன் நற்பசு பாசமும் நீடுமாம் நித்தன் நிலையறி வார்இல்லை நீடிய நித்தம் பசுபாச நீக்கமும் நாடிய சைவர்க்கு நந்தி அளித்ததே. |
6 |
2411 |
ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம் ஆய பசுவும் அடலே றெனநிற்கும் ஆய பலிபீடம் ஆகுநற் பாசமாம் ஆய அரனிலை ஆய்ந்துகொள் வார்கட்கே. |
7 |
2412 |
பதிபசு பாசம் பயில்வியா நித்தம் பதிபசு பாசம் பகர்வோர்க்கு ஆறாக்கிப் பதிபசு பாசத்தைப் பற்றற நீக்கும் பதிபசு பாசம் பயில நிலாவே. |
8 |
2413 |
பதியும் பசுவொடு பாசமும் மேலைக் கதியும் பசுபாச நீக்கமும் காட்டி மதிதந்த ஆனந்த மாநந்தி காணும் துதிதந்து வைத்தனன் சத்தசை வத்திலே. |
9 |
2414 |
அறிந்தணு மூன்றுமே யாங்கணும் ஆகும் அறிந்தணு மூன்றுமெ யாங்கணும் ஆக அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன் அறிந்த பதிபடைப் பான்அங்கு அவற்றையே. |
10 |
2415 |
படைப்புஆதி யாவது பரம்சிவம் சத்தி இடைப்பால உயிர்கட்கு அடைத்துஇவை தூங்கல் படைப்பாதி சூக்கத்தைத் தற்பரன் செய்ய படைப்பாதி தூய மலம்அப் பரத்திலே. |
11 |
2416 |
ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும் ஆகிய சத்தி சிவபர மேம்ஐந்தால் ஆகிய சூக்கத்தில் ஐங்கரு மம்செய்வோன் ஆகிய தூயஈ சானனும் ஆமே. |
12 |
2417 |
மேவும் பரசிவம் மேற்சத்தி நாதமும் மேவும் பரவிந்து ஐம்முகன் வேறுஈசன் மேவும் உருத்திரன் மால்வேதா மேதினி ஆகும் படிபடைப் போன்அர னாமே. |
13 |
2418 |
படைப்பும் அளிப்பும் பயில்இளைப் பாற்றும் துடைப்பும் மறைப்பும்முன் தோன்ற அருளும் சடத்தை விடுத்த அருளும் சகலத்து அடைத்த அனாதியை ஐந்தென லாமே. |
14 |
2419 |
ஆறாறு குண்டலி தன்னின் அகத்திட்டு வேறாகு மாயைiல் முப்பால் மிகுத்திட்டுஅங்கு ஈறாம் கருவி இவற்றால் வகுத்திட்டு வேறாம் பதிபசு பாசம்வீ டாகுமே. |
15 |
2420 |
வீட்கும் பதிபசு பாசமும் மீதுற ஆட்கும் இருவினை ஆங்குஅவற் றால் உணர்ந்து ஆட்கு நரசு சுவர்க்கத்தில் தானிட்டு நாட்குற நான்தங்கு நற்பாசம் நண்ணுமே. |
16 |
2421 |
நண்ணிய பாசத்தில் நான்எனல் ஆணவம் பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன் கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள் அண்ணல் அடிசேர் உபாயமது ஆகுமே. |
17 |
2422 |
ஆகும் உபாயமே யன்றி அழுக்கற்று மோசு மறச்சுத்தன் ஆதற்கு மூலமே ஆகும் அறுவை அழுக்கேற்றி ஏற்றல்போல் ஆகுவ தெல்லாம் அருட்பாச மாகுமே. |
18 |
2423 |
பாசம் பயிலுயிர் தானே பரமுதல் பாசம் பயிலுயிர் தானே பசுவென்ப பாசம் பயிலப் பதிபர மாதலால் பாசம் பயிலப் பதிபசு வாகுமே. |
19 |
2424 |
அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர் அத்தத்தில் உத்தர மாகும் அருள்மேனி அத்தத்தி னாலே அணையப் பிடித்தலும் அத்தத்தில் தம்மை அடைந்து நின்றாரே. |
20 |
17. அடிதலை அறியும் திறங்கூறல்
2425 |
காலும் தலையும் அறியார் கலதிகள் கால்அந்தச் சத்தி அருள்என்பர் காரணம் பாலொன்று ஞானமே பண்பார் தலைஉயிர் கால்அந்த ஞானத்கைக் காட்டவீ டாகுமே. |
1 |
2426 |
தலைஅடி யாவது அறியார் காயத்தில் தலைஅடி உச்சியில் உள்ளது மூலம் தலைஅடி யான அறிவை அறிந்தோர் தலைஅடி யாகவே தான்இருந் தாரே. |
2 |
2427 |
நின்றான் நிலமுழுது அண்டமும் மேலுற வன்தாள் அசுரர் அமரரும் உய்ந்திடப் பின்தான் உலகம் படைத்தவன் பேர்நந்தி தன்தாள் இணைஎன் தலைமிசை ஆனதே. |
3 |
2428 |
சிந்தையின் உள்ளே எந்தை திருவடி சிந்தையின் எந்தை திருவடிக் கீழது எந்தையும் என்னை அறியகி லான்ஆகில் எந்தையை யானும் அறியகி லேனே. |
4 |
2429 |
பன்னாத பாரொளிக்கு அப்புறத்து அப்பால் என்நா யாகனார் இசைந்தங்கு இருந்திடம் உன்னா ஒளியும் உரைசெய்யா மந்திரம் சொன்னான்கழலினை சூடிநின் றேனே. |
5 |
2430 |
பதியது தோற்றும் பதமது வைம்மின் மதியது செய்து மலர்ப்பதம் ஓதும் நதிபொதி யும்சடை நாரியோர் பாகன் கதிசெயும் காலங்கள் கண்டுகொ ளீரே. |
6 |
2431 |
தரித்துநின்றானடி தன்னிட நெஞ்சில் தரித்து நின்றான் அமராபதி நாதன் கரித்துநின் றான்கரு தாதவர் சிந்தை பரித்துநின் றான்அப் பரிபாகத் தானே. |
7 |
2432 |
ஒன்றுண்டு தாமரை ஒண்மலர் மூன்றுள தன்தாதை தாளும் இரண்டுள காயத்துள் நன்றாகக் காய்ச்சிப் பதஞ்செய வல்லார்கட்கு இன்றேசென்று ஈசனை எய்தலும் ஆமே. |
8 |
2433 |
கால்கொண்டுஎன் சென்னியிற் கட்டறக் கட்டற மால்கொண்ட நெஞ்சின் மயக்கிற் றுயக்கறப் பால்கொண்ட என்ணைப் பரன்கொள்ள நாடினான் மேல்கொண்டென் செம்மை விளம்ப ஒண்ணாதே. |
9 |
2434 |
பெற்ற புதல்வர்போல் பேணிய நாற்றமும் குற்றமுங் கண்டு குணங்குறை செய்யவோர் பற்றைய ஈசன் உயிரது பான்மைக்குச் செற்றமி லாச் செய்கைக்கு எய்தின செய்யுமே. |
10 |
18. முக்குற்றம்
2435 |
மூன்றுள குற்றம் முழுதும் நலிவன மான்றுஇருள் தூங்கி மயங்கிக் கிடந்தன மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார் மூன்றினுள் பட்டு முடிகின்ற வாறே. |
1 |
2436 |
காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்து ஏமம் பிடித்திருந் தேனுக்கு எறிமணி ஓமெனும் ஓசையின் உள்ளே உறைவதோர் தாமம் அதனைத் தலைப்பட்ட வாறே. |
2 |
19. முப்பதம்
2437 |
தோன்றிய தொம்பதம் தற்பதம் சூழ்தர ஏன்ற அசிபதம் இம்மூன்றோடு எய்தனோன் ஆகின்ற பராபர மாகும் பிறப்பற ஏன்றனன் மாளச் சிவமாய் இருக்குமே. |
1 |
2438 |
போதந் தனையுன்னிப் பூதாதி பேதமும் ஓதுங் கருவிதொண் ணூறுடன் ஓராறு பேதமும் நாதாந்தப் பெற்றியில் கைவிட்டு வேதம்சொல் தொம்பத மாகுதல் மெய்ம்மையே. |
2 |
2439 |
தற்பதம் என்றும் துவம்பதம் தான்என்றும் நிற்பது அசியத்துள் நேரிழை யாள்பதம் சொற்பதத் தாலும் தொடரஒண் ணாச்சிவன் கற்பனை யின்றிக் கலந்துநின் றானே. |
3 |
2440 |
அணுவும் பரமும் அசிபதத்து ஏய்ந்த கணுஒன் றிலாத சிவமும் கலந்தால் இணையறு பால்தேன் அமுதென இன்பத் துணையது வாயுரை யற்றிடத் தோன்றுமே. |
4 |
2441 |
தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம் நம்பிய சீவன் பரன்சிவ னாய்நிற்கும் அம்பத மேலைச் சொரூபமா வாக்கியம் செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே. |
5 |
2442 |
ஐம்பது அறியா தவரும் அவர்சிலர் உம்பனை நாடி உரைமுப்ப தத்திடைச் செம்பர மாகிய வாசி செலுத்திடத் தம்பரயோகமாய்த் தான்அவன் ஆகுமே. |
6 |
2443 |
நந்தி அறிவும் நழுவில் அதீதமாம் இந்தியும் சத்தாதி விடவிய னாகும் நந்திய மூன்றுஇரண்டு ஒன்று நலம்ஐந்து நந்தி நனவாதி மூட்டும் அனாதியே. |
7 |
2444 |
பரதுரி யத்து நனவு படியுண்ட விரிவிற் கனவும் இதன்உப சாந்தத்து துரிய கழுமுனையும் ஓவும் சிவன்பால் அரிய துரியம் அசிபதம் ஆமே. |
8 |
20. முப்பரம்
2445 |
தோன்றிஎன் உள்ளே சுழன்றுஎழு கின்றதோர் மூன்று படிமண் டலத்து முதல்வனை ஏன்றெய்தி இன்புற்று இருந்தே இளங்கொடி நான்று நலம்செய் நலந்தரு மாறே. |
1 |
2446 |
மன்று நிறைந்தது மாபர மாயது நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும் கன்று நினைந்தெழு தாயென வந்தபின் குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே. |
2 |
2447 |
ஆறாறு தத்துவத்து அப்புறத்து அப்புரம் கூறா உபதேசம் கூறில் சிவபரம் வேறாய் வெளிப்பட்ட வேதப் பசுவனார் பேறாக ஆனந்தம் பேறும் பெருகவே. |
3 |
2448 |
பற்றறப் பற்றில் பரம்பதி யாவது பற்றறப் பற்றில் பரனறி வேபரம் பற்றறப் பற்றினில் பற்றவல் லோர்கட்கே பற்றறப் பற்றில் பரம்பர மாமே. |
4 |
2449 |
பரம்பர மான பதிபாசம் பற்றாப் பரம்பர மாகும் பரஞ்சிவ மேவப் பரம்பர மான பரசிவா னந்தம் பரம்பர மாகப் படைப்பது அறிவே. |
5 |
2450 |
நனவில் கலாதியாம் நாலொன்று அகன்று தனியுற்ற கேவலம் தன்னில் தானாகி நினைவுற்று அகன்ற அதீதத்துள் நேயந் தனையுற்று இடத்தானே தற்பர மாமே. |
6 |
2451 |
தற்கண்ட தூயமும் தன்னில் விசாலமும் பிற்காணும் தூடணம் தானும் பிறழ்வுற்றுத் தற்பரன் கால பரமும் கலந்தற்ற நற்பரா தீதமும் நாடுஅக ராதியே. |
7 |
21. பரலட்சணம்
2452 |
அதீதத்து ளாகி அகன்றவன் நந்தி அதீதத்து ளாகி அறிவிலோன் ஆன்மா மதிபெற் றிருள்விட்ட மன்னுயிர் ஒன்றாம் பதியிற் பதியும் பரவுயிர் தானே. |
1 |
2453 |
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதி சோதிப் பரஞ்சுடர் தோன்றத்தோன் றாமையின் நீதிய தாய்நிற்கும் நீடிய அப்பர போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே. |
2 |
2454 |
துரியங் கடங்கு துரியா தீதத்தே அரிய வியோகங்கொண்டு அம்பலத் தாடும் பெரிய பிரானைப் பிரணவக் கூபத்தே துரியவல் லார்க்குத் துரிசில்லை தானே. |
3 |
2455 |
செம்மைமுன் னிற்பச் சுவேதம் திரிவபோல் அம்மெய்ப் பரத்தோடு அணுவன்உள் ளாயிடப் பொய்மைச் சகமுண்ட போத வெறும்பாழில் செம்மைச் சிவமேரு சேர்கொடி யாகுமே. |
4 |
2456 |
வைச்ச கலாதி வருதத்து வங்கெட வெச்ச இருமாயை வேறாக வேரறுத்து உச்ச பரசிவ மாம்உண்மை ஒன்றவே அச்சம் அறுத்தென்னை ஆண்டவன் நந்தியே. |
5 |
2457 |
என்னை அறிய இசைவித்த என்நந்தி என்னை அறிந்து அறி யாத இடத்துய்த்துப் பின்னை ஒளியிற் சொரூபம் புறப்பட்டுத் தன்னை அளித்தான் தற்பர மாகவே. |
6 |
2458 |
பரந்தும் சுருங்கியும் பார்புனல் வாயு நிரந்தர வளியொடு ஞாயிறு திங்கள் அரந்த அறநெறி யாயது வாகித் தரந்த விசும்பொன்று தாங்கிநின் றானே. |
7 |
2459 |
சத்தின் நிலையினில் தானான சத்தியும் தற்பரை யாய்நிற்கும் தானாம் பரற்கு உடல் உய்த்தரும் இச்சையில் ஞானாதி பேதமாய் நித்தம் நடத்தும் நடிக்கும்மா நேயத்தே. |
8 |
2460 |
மேலொடு கீழ்பக்கம் மெய்வாய்கண் நாசிகள் பாலிய விந்து பரையுள் பரையாகக் கோலிய நான்சுவை ஞானம் கொணர் விந்து சீலமி லாஅணுச் செய்திய தாமே. |
9 |
2461 |
வேறாம் அதன்தன்மை போலும்இக் காயத்தில் ஆறாம் உபாதி அனைத்தாகும் தத்துவம் பேறாம் பரவொளி தூண்டும் பிரகாசமாய் ஊறாய் உயிர்த்துண்டு உறங்கிடும் மாயையே. |
10 |
2462 |
தற்பரம் மன்னும் தனிமுதல் பேரொளி சிற்பரம் தானே செகமுண்ணும் போதமும் தொற்பதம் தீர்பாழில் சுந்தரச் சோதிபுக்கு அப்புறம் மற்றதுஇங்கு ஒப்பில்லை தானே. |
11 |
2463 |
பண்டை மறைகள் பரவான் உடலென்னும் துண்ட மதியோன் துரியாதீ தந்தன்னைக் கண்டு பரனும்அக் காரணோ பாதிக்கே மிண்டின் அவன்சுத்தம் ஆகான் வினவிலே. |
12 |
2464 |
வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்ற தனியா இயதற் பரங்காண் அவன்தான் வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்ற வெளியாய சத்தி அவன்வடி வாமே. |
13 |
2465 |
மேருவி னோடே விரிகதிர் மண்டலம் ஆர நினையும் அருந்தவ யோகிக்குச் சீரார் தவம்செய்யில் சிவனருள் தானாகும் பேரவும் வேண்டாம் பிறிதில்லை தானே. |
14 |
22. முத்திரியம்
2466 |
நனவாதி மூன்றினில் சீவ துரியம் தனதுஆதி மூன்றினில் பரதுரி யந்தான் நனவாதி மூன்றி னில்சிவ துரியமாம் இனதாகும் தொந்தத் தசிபதத் துஈடே. |
1 |
2467 |
தானாம் நனவில் துரியம்தன் தொம்பதம் தானாம் துரியம் நனவாதி தான்மூன்றில் ஆனாப் பரபதம் அற்றது அருநனா வானான மேல்மூன்றில் துரியம் அணுகுமே. |
2 |
2468 |
அணுவின் துரியத்து நான்கும துஆகிப் பணியும் பரதுரி யம்பயில் நான்கும் தணிவில் பரமாகிச் சாரமுந் துரியக் கணுவில் இந் நான்கும் கலந்தார் ஐந்தே. |
3 |
2469 |
ஈர்ஐந்து அவத்தை இசைமுத் துரியத்துள் நேர்அந்த மாகநெறிவழி யேசென்று பார்அந்த மான பராபத்து அயிக்கியத்து ஓர்அந்த மாம்இரு பாதியைச் சேர்த்திடே. |
4 |
2470 |
தொட்டே இருமின் துரிய நிலத்தினை எட்டாது எனின்நின்று எட்டும் இறைவனைப் பட்டாங்கு அறிந்திடில் பன்னா உதடுகள் தட்டாது ஒழிவதோர் தத்துவந் தானே. |
5 |
2471 |
அறிவாய் அசத்தென்னும் ஆறாறு அகன்று செறிவாய மாயை சிதைத்துஅரு ளாலே பிறியாத பேரருள் ஆயிடும் பெற்றி நெறியான அன்பர் நிலையறிந் தாரே. |
6 |
2472 |
நனவின் நனவாகி நாலாம் துரியம் தனதுயிர் தெம்பதம் ஆமாறு போல வினையறு சீவன் நனவாதி யாகத் தனைய பரதுரி யந்தற் பதமே. |
7 |
2473 |
தொம்பதம் தற்பதம் சொன்முத் துரியம்பொல் நம்பிய மூன்றாம் துரியத்து நல்நாமம் அம்புலி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச் செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே. |
8 |
23. மும்முத்தி
2474 |
சீவன்தன் முத்தி அதீதம் பரமுத்தி ஓய்உப சாந்தம் சிவமுத்தி ஆனந்தம் Yமூவயின் முச்சொரூப முத்திமுப் பாலதாய் ஓவுறு தாரத்தில் உள்ளும்நா தாந்தமே. |
1 |
2475 |
ஆவது அறியார் உயிர்பிறப் பாலுறும் ஆவது அறியும் உயிர்அருட் பாலுறும் ஆவது ஒன்றில்லை அகம்புறத் தென்றுஅகன்று ஓவு சிவனுடன் ஒன்றாதல் முத்தியே. |
2 |
2476 |
சிவமாகி மும்மலம் முக்குணம் செற்றுத் தவமான மும்முத்தி தத்துவத்து அயிக்கியத் துவம்ஆ கியநெறி சோகம்என் போர்க்குச் சிவமாம் அமலன் சிறந்தனன் தானே. |
3 |
2477 |
சித்தியும் முத்தியும் திண்சிவ மாகிய சுத்தியும் முத்தீ தொலைக்கும் சுகானந்த சத்தியும் மேலைச் சமாதியும் ஆயிடும் பெத்தம் அறுத்த பெரும்பெரு மானே. |
4 |
24. முச்சொரூபம்
2478 |
ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைந்து ஆறிய ஞானச் சிவோகம் அடைந்திட்டு வேறும் எனமுச் சொரூபத்து வீடுற்று அங்கு ஈறதில் பண்டைப் பரன்உண்மை செய்யுமே. |
1 |
2479 |
மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம் மூன்றினில் முப்பத் தாறும் உதிப்புள மூன்றினின் உள்ளே முளைத்தெழும் சோதியைக் காண்டலும் காயக் கணக்கற்ற வாறே. |
2 |
2480 |
உலகம் புடைபெயர்ந்து ஊழியம் போன நிலவு சுடரொளி மூன்றும் ஒன்றாய பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன் அளவும் பெருமையும் ஆரறி வாரே. |
3 |
2481 |
பெருவாய் முதலெண்ணும் பேதமே பேதித்து அருவாய் உருவாய் அருவுரு வாகிக் குருவாய் வரும்சத்தி கோன்உயிர்ப் பன்மை உருவாய் உடனிருந்து ஒன்றாய்அன் றாமே. |
4 |
2482 |
மணிஒளி சோபை இலக்கணம் வாய்த்து மணிஎன வாய்நின்ற வாறுஅது போலத் தணிமுச் சொருபாதி சத்தியாதி சாரப் பணிவித்த பேர்நந்தி பாதம்பற்றாயே. |
5 |
2483 |
கல்லொளி மாநிறம் சோபை கதிர்தட்ட நல்ல மணியொன்றின் நாடிஒண் முப்பதும் சொல்லறும் முப்பாழில் சொல்லறு பேருரைத்து அல்அறும் முத்திராந் தத்துஅனு பூதியே. |
6 |
2484 |
உடந்தசெந் தாமரை உள்ளுறு சோதி நடந்தசெந் தாமரை நாதம் தகைந்தால் அடைந்த பயோதரி அட்டி அடைத்தஅவ் விடம்தரு வாசலை மேல்திற வீரே. |
7 |
25. முக்கரணம்
2485 |
இடனொரு மூன்றில் இயைந்த ஒருவன் கடன் உறும் அவ்வுரு வேறெனக்காணும் திடமது போலச் சிவபர சீவர் உடனுரை பேதமும் ஒன்றென லாமே. |
1 |
2486 |
ஒளியைஒளிசெய்து ஓம்என்று எழுப்பி வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி வெளியை வெளிசெய்து மேலெழ வைத்துத் தெளியத் தெளியும் சிவபதம் தானே. |
2 |
2487 |
முக்கர ணங்களின் மூர்ச்சைதீர்த்து ஆவதுஅக் கைக்கா ரணம் என்னத் தந்தனன் காண்நந்தி மிக்க மனோன்மணி வேறே தனித்துஏக ஒக்குமது உன்மணி ஓதுஉள் சமாதியே. |
3 |
26. முச்சூனிய தொந்தத்தசி
2488 |
தற்பதம் தொம்பதம் தானாம் அசிபதம் தொல்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றலே நிற்பது உயிர்பரன் நிகழ்சிவ மும்மூன்றின் சொற்பத மாகும் தொந்தத் தசியே. |
1 |
2489 |
தொந்தத் தசிமூன்றில் தொல்கா மியமாதி தொந்தத் தசிமூன்றில் தொல்கா மதமாதி வந்த மலம்குணம் மாளச் சிவம்தோன்றின் இந்துவின் முன்இருள் ஏகுதல் ஒக்குமே. |
2 |
2490 |
தொந்தத் தசியைஅவ் வாசியில் தோற்றியே அந்த முறைஈர் ஐந்தாக மதித்திட்டு அந்தம் இல்லாத அவத்தைஅவ் வாக்கியத்து உந்து முறையில் சிவன்முன்வைத்து ஓதிடே. |
3 |
2491 |
வைத்துச் சிவத்தை மதிசொரு பானந்தத்து உய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தை மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து அத்தற்கு அடிமை அடைந்துநின் றானே. |
4 |
2492 |
தொம்பதம் மாயையுள் தோன்றிடும் தற்பதம் அம்புரை தன்னில் உதிக்கும் அசிபதம் நம்புறு சாந்தியில் நண்ணும்அவ் வாக்கியம் உம்பர் உரைதொந்தத் தசிவாசி யாமே. |
5 |
2493 |
ஆகிய அச்சோயம் தேவதத் தன்இடத்து ஆகிய வைவிட்டால் காயம் உபாதானம் ஏகிய தொந்தத் தசியென்ப மெய்யறிவு ஆகிய சீவன் பரசிவன் ஆமே. |
6 |
2494 |
தாமதம் காமியம் ஆசித் தகுணம் மாமலம் மூன்றும் அகார உகாரத்தோடு ஆம்அறும் மவ்வும் அவ் வாய்உடல் மூன்றில் தாமாம் துரியமும் தொந்தத் தசியதே. |
7 |
27. முப்பாழ்
2495 |
காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக் காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ்விடக் காரிய காரண வாதனை கண்டறும் சீர்உப சாந்தமுப் பாழ்விடத் தீருமே. |
1 |
2496 |
மாயப்பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன் சேயமுப் பாழெனச் சிவசத்தி யில் சீவன் ஆய வியாப்தம் எனும்முப்பா ழாம்அந்தத் தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே. |
2 |
2497 |
எதிர்அற நாளும் எருதுஉவந்து ஏறும் பதியெனும் நந்தி பதமது கூடக் கதியெனப் பாழை கடந்து அந்தக் கற்பனை உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே. |
3 |
2498 |
துரியம் அடங்கிய சொல்லறும் பாழை அரிய பரம்பரம் என்பர்கள் ஆதர் அரிய பரம்பரம் என்றே துதிக்கும் அருநிலம் என்பதை யார்அறி வாரே. |
4 |
2499 |
ஆறாறு நீங்க நமவாதி அகன்றிட்டு வேறா கயபரை யாவென்று மெய்ப்பரன் ஈறான வாசியில் கூட்டும் அதுவன்றோ தேறாச் சிவாய நமவெனத் தேறிலே. |
5 |
2500 |
உள்ளம் உருவென்றும் உருவம் உளமென்றும் உள்ள பரிசறித் தோரும் அவர்கட்குப் பள்ளமும் இல்லைத் திடர்இல்லை பாழ்இல்லை உள்ளமும் இல்லை உருவில்லை தானே. |
6 |
28. காரிய காரண உபாதி
2501 |
செற்றிடும் சீவ உபாதித் திறன்ஏழும் பற்றும் பரோபதி ஏழும் பகருரை உற்றிடும் காரிய காரணத் தோடற அற்றிட அச்சிவ மாகும் அணுவனே. |
1 |
2502 |
ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு வேறாய் நனவு மிகுந்த கனாநனா ஆறாறு அகன்ற கழுத்தி அதில் எய்தாப் பேறா நிலத்துயிர் தொம்பதம் பேசிலே. |
2 |
2503 |
அகாரம் உயிரே உகாரம் பரமே மகாரம் சிவமாய் வருமுப் பதத்துச் சிகாரம் சிவமே வகாரம் பரமே யகாரம் உயிரென்று அறையலும் ஆமே. |
3 |
2504 |
உயிர்க்குயி ராகி ஒழிவற்று அழிவற்று அயிர்ப்புஅறும் காரணோ பாதி விதிரேகத்து உயிர்ப்புறும் ஈசன் உபமிதத் தால்அன்றி வியர்ப்புறும் ஆணவம் வீடல்செய் யாவே. |
4 |
2505 |
காரியம் ஏழில் கலக்கும் கடும்பசு காரணம் ஏழில் கலக்கும் பரசிவன் காரிய காரணம் கற்பனை சொற்பதப் பாரறும் பாழில் பராபரத் தானே. |
5 |
29. உபசாந்தம்
2506 |
முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே
பத்திக்கு வித்துப் பணிந்துற்றப் பற்றலே சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல் சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே. |
1 |
2507 |
காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள் காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி காரிய காரண வாதனைப் பற்றறப் பாரண வும் உப சாந்தப் பரிசிதே. |
2 |
2508 |
அன்ன துரியமே ஆத்தும சுத்தியும் முன்னிய சாக்கிரா தீதத் துறுபுரி மன்னும் பரங்காட்சி யாவது உடனுற்றுத் தன்னின் வியாத்தி தனில்உப சாந்தமே. |
3 |
2509 |
ஆறாதுஅமைந்துஆண வத்தையுள் நீக்குதல் பேறான தன்னை அறிதல் பின் தீர்சுத்தி கூறாத சாக்கிரா தீதம் குருபரன் பேறாம் வியாத்தம் பிறழ்உப சாந்தமே. |
4 |
2510 |
வாய்ந்த உபசாந்த வாதனை உள்ளப் போய் ஏய்ந்த சிவமாத லின்சிவா னந்தத்துத் தோய்ந்தறல் மோனச் சுகானுபவத் தோடே ஆய்ந்துஅதில் தீர்க்கை யானதுஈர் ஐந்துமே. |
5 |
2511 |
பரையின் பரவ பரத்துடன் ஏகமாய்த் திரையின்நின்று ஆகிய தெண்புனல் போலவுற்று உரையுணர்ந்து ஆரமுது ஒக்க உணர்ந்துளோன் கரைகண் டானுரை அற்ற கணக்கிலே. |
6 |
30. புறங்கூறாமை
2512 |
பிறையுள் கிடந்த முயலை எறிவான் அறைமணி வாள்கொண் டவர்தமைப் போலக் கறைமணி கண்டனக் காண்குற மாட்டார் நிறையறி வோம்என்பர் நெஞ்சிலர் தாமே. |
1 |
2513 |
கருந்தாள் கருடன் விசும்பூடு இறப்பக் கருந்தாள் கயத்தில் கரும்பாம்பு நீங்க பெருந்தன்மை பேசுதி நீஒழி நெஞ்சே அருந்தர அலைகடல் ஆறசென் றாலே. |
2 |
2514 |
கருதலர் மாளக் கருவாயில் நின்ற பொருதலைச் செய்வது புல்லறி வாண்மை மருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால் தருவலர் கேட்ட தனியும்ப ராமே. |
3 |
2515 |
பிணங்கவும் வேண்டாம் பெருநில முற்றும் இணங்கிஎம் ஈசனே ஈசன்என்று உன்னில் கணம்பதி னெட்டும் கழலடி காண வணங்ககெழு நாடி அங்கு அன்புற லாமே. |
4 |
2516 |
என்னிலும் என்னுயி ராய இறைவனைப் பொன்னிலும் மாமணி யாய புனிதனை மின்னிய எவ்வுய ராய விகிர் தனை உன்னிலும் உன்னும் உறும்வகை யாலே. |
5 |
2517 |
நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை ஒன்றும் பொருள்கள் உரைப்பல ராகிலும் வென்றுஐம் புலனும் விரைந்து பிணக்கறுவந்து ஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே. |
6 |
2518 |
நுண்ணறி வாய்உல காய்உலகு ஏழுக்கும் எண்ணறி வாய்நின்ற எந்தை பிரான்தன்னைப் பண்அறி வாளனைப் பாவித்த மாந்தரை விண்அறி வாளர் விரும்புகின் றாரே. |
7 |
2519 |
விண்ணவ ராலும் அறிவுஅறி யான்தன்னைக் கண்ணற வுள்ளே கருதிடின் காலையில் எண்உற வாசமுப் போதும் இயற்றிநீ பண்ணிடில் தன்மை பராபர னாமே. |
8 |
2520 |
ஒன்றாய் உலகுடன் ஏழும் பரந்தவன் பின்தான் அருள்செய்த பேரருள் ஆளவன் கன்றா மனத்தார்தம் கல்வியுள் நல்லவன் பொன்றாத போது புனைபுக ழானே. |
9 |
2521 |
போற்றியென் றேன்எந்தை பொன்னான சேவடி ஏற்றியே தென்றும் எறிமணி தான்அகக் காற்றின் விளக்கது காயம் மயக்குறும் அற்றலும் கேட்டது மன்றுகண் டேனே. |
10 |
2522 |
நேடிக்கொண் டென்னுள்ளே நேர்தரு நந்தியை ஊடுபுக் காரும் உணர்ந்தறி வாரில்லை கூடுபுக் கேறலுற் றேனவன் கோலங்கண் மூடிக்கண் டேனுல கேழுங்க்ண் டேனே. |
11 |
2523 |
ஆன புகழும் அமைந்த தோர் ஞானமுந் தேனு மிருக்குஞ் சிறுவரை யொன்றுடண் டூனமொன் றின்றி யுணர்வுசெய் வார்கட்கு வானகஞ் செய்யு மறவனு மாமே. |
12 |
2524 |
மாமதி யாமதி யாய்நின்ற மாதவர் தூய்மதி யாகுஞ் சுடர்பர மானந்தந் தாமதி யாகச் சகமுணச் சாந்திபுக் காமல மற்றார் அமைவுபெற் றாரே. |
13 |
2525 |
பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட் டிதமுற்ற பாச இருளைத் துரந்து மதமற் றெனதியான் மாற்றிவிட் டாங்கே திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே. |
14 |
2526 |
சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன் சுத்தாசுக் தத்துடன் தோய்ந்துந்தோ யாதவர் முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச் சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே. |
15 |
31. எட்டிதழ்க் கமல முக்குண அவத்தை
2527 |
உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும் துதிக்கும் நிருதி வருணன்நல் வாயு மதிக்கும் குபேரன் வடதிசை யீசன் நிதித்தெண் டிசையு நிறைந்துநின் றாரே. |
16 |
2528 |
ஒருங்கிய பூவுமோர் எட்டித ழாகும் மருங்கிய மாயா புரியத னுள்ளே சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே ஒருங்கிய சோதியை ஒர்ந்தெழும் உய்ந்தே. |
17 |
2529 |
மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும் விட்டலர் கின்றனன் சோதி விரிசுடர் எட்டல ருள்ளே இரண்டலர் உள்ளுறிற் பட்டலர் கின்றதோர் பண்டங் கனாவே. |
18 |
2530 |
ஆறே யருவி யகங்குளம் ஒன்றுண்டு நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும் கூறே குவிமுலைக் கொண்பனை யாளொடும் வேறே யிருக்கும் விழுபொருள் தானே. |
19 |
2531 |
திகையெட்டும் தேரேட்டும் தேவதை எட்டும் வகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானை வகையெட்டு நான்குமற் றாங்கே நிறைந்து முகையெட்டும் உள்நின் றுதிக்கின்ற வாறே. |
20 |
2532 |
ஏழுஞ் சகளம் இயம்பு கடந்தெட்டில் வாழும் பரமென் றதுகடந் தொன்பதில் ஊழி பராபரம் ஓங்கிய பத்தினில் தாழ்வது வான தனித்தன்மை தானே. |
21 |
2533 |
பல்லூழி பண்பன் பகலோன் இறையவன் நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற வூழிகள் செல்லூழி அண்டத்துக் சென்றவவ் வூழியுள் அவ்வூழி யுச்சியு ள்ஒன்றிற் பகவனே 22 |
2534 |
புரியும் உலகினிற் பூண்டவெட் டானை திரியுங் களிற்றொடு தேவர் குழாமும் எரியு மழையும் இயங்கும் வெளியும் பரியுமா காசத்திற் பற்றது தானே. |
23 |
2535 |
ஊறு மருவி யுயர்வரை யுச்சிமேல் ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப் பூவின்றிச் சூடான் புரிசடை யோனே. |
24 |
2536 |
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும் வென்று மிருந்து விகிர்தனை நாடுவர் சென்றும் இருந்தும் திருவடை யோரே. |
25 |
32. ஒன்பான் அவத்தை - ஒன்பான் அபிமானி
2537 |
தொற்பத விசுவன் றைசதன் பிராஞ்ஞன் நற்பத விராட்டன்பொன் கர்ப்பனவ் யாகிர்தன் பிற்பதஞ் சொலிதையன் பிரசா பத்தியன் பொற்புவி சாந்தன் பொருதபி மானியே. |
26 |
2538 |
நவமாம் அவத்தை நன்வாதி பற்றிற்
பவமா மலங்குணம் பற்றற்றுப் பற்றாத் தவமான சத்திய ஞானப் பொதுவிற் றுவமார் துரியஞ் சொருபம தாமே. |
27 |
2539 |
சிவமான சிந்தையிற் சீவன் சிதைய பவமான மும்மலம் பாறிப் பறிய நவமான அந்தத்தின் நற்சிவ போதந் தவமான மவையாகித் தானல்ல வாகுமே. |
28 |
2540 |
முன்சொன்ன வொன்பானின் முன்னுறு தத்துவந் தன்சொல்லில் எண்ணத்தகாவொன்பான் வேறுள பின்சொல்ல லாகுமிவ் வீரொன்பான் பேர்த்திட்டுத் தன்செயத வாண்டவன் றான்சிறந் தானே. |
29 |
2541 |
உகந்த ஒன்பதும் ஐந்தும் உலகம் பகர்ந்த பிரானென்னும் பண்பினை நாடி அகந்தெம் பிரானென்பன் அல்லும் பகலும் இகந்தன வல்வினை யோடறுத் தானே. |
30 |
2542 |
நலம்பல காலந் தொகுத்தன நீளங் குலம்பல வண்ணங் குறிப்பொடுங் கூடும் பலம்பல பன்னிரு கால நினையும் நிலம்பல வாறின் நீர்மையன் றானே. |
31 |
2543 |
ஆதி பராபர மாகும் பராபரை சோதி பரமுயிர் சொல்லுநற் றத்துவம் ஓதுங் கமைமாயே யோரிரண் டோரமுத்தி நீதியாம் பேதமொன் பானுடன் ஆதியே. |
32 |
2544 |
தேராத சிந்தை தெளியத் தெளிவித்து வேறாத நரக சுவர்க்கமும் மேதினி ஆறாப் பிறப்பும் உயிர்க்கரு ளால்வைத்தான் வேறாத் தெளியார் வினையுயிர் பெற்றதே. |
33 |
2545 |
ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானி நன்பாற் பயிலு நவதத் துவமாதி ஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துறச் செம்பாற் சிவமாதல் சித்தாந்த சித்தியே. |
34 |
33. சுத்தாஅசுத்தம்
2546 |
நாசி நுனியினின் நான்குமூ விரலிடை ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர் பேசி யிருக்கும் பெருமறை யம்மறை கூசி யிருக்குங் குணமது வாமே. |
1 |
2547 |
கருமங்கள் ஒன்று கருதுங் கருமத் துரிமையுங் கன்மமும் முன்னும் பிறவிப் கருவினை யாவது கண்டகன் றன்பின் புரிவன கன்மக் கயத்துட் புகுமே. |
2 |
2548 |
மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள் மாயை மறைய வெளிப்படும் அப்பொருள் மாயை மறைய மறையவல் லார்கட்குக் காயமும் இல்லை கருத்தில்லை தானே. |
3 |
2549 |
மோழை யடைந்து முழைதிறந் துள்புக்குக் கோழை யடைகின்ற தண்ணற் குறிப்பினில் ஆழ அடைந்தங் கனலிற் புறஞ்செய்து தாழ அடைப்பது தன்வலி யாமே. |
4 |
2550 |
காயக் குழப்பனைக் காயநன் னாடனைக் காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத் தேயத்து ளேயெங்குந் தேடித் திரிவர்கள் காயத்துள் நின்ற கருத்தறி யாரே. |
5 |
2551 |
ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார் ஆசூச மாமிடம் ஆரும் அறிகிலார் ஆசூச மாமிடம் ஆரும் அறிந்தபின் ஆசூச மானிடம் ஆசூச மாமே. |
6 |
2552 |
ஆசூச மில்லை அருநிய மத்தருக்கு ஆசூச மில்லை அரனை அர்ச் சிப்பவர்க்கு ஆசூச மில்லையாம் அங்கி வளர்ப்போர்க்கு ஆசூச மில்லை அருமறை ஞானிக்கே. |
7 |
2553 |
வழிபட்டு நின்று வணங்கு மவர்ககுச் சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும் குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள் கழிபட் டவர்க்கன்றிக் காணவொண் ணாதே. |
8 |
2554 |
தூய்மணி தூயனல் தூய ஒளிவிடும் தூய்மணி தூயனல் தூரறி வாரில்லை தூய்மணி தூயனல் தூரறி வார்கட்குத் தூய்மணி தூயனல் தூயவு மாமே. |
9 |
2555 |
தூயது வாளா வைத்தது தூநெறி தூயது வாளா நாதன் திருநாமம் தூயது வாளா அட்டமா சித்தியும் தூயது வாளா தூயடிச் சொல்லே. |
10 |
2556 |
பொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தை அருளது போற்றும் அடியவ ரன்றிச் சுருளது வாய்நின்ற துன்பச் சுழியின் மருளது வாச்சிந்தை மயங்குகின் றாரே. |
11. |
2557 |
வினையா மசத்து விளைவ துணரார் வினைஞானந் தன்னில் வீடலுந் தேரார் வினைவிட வீடென்னும் வேதமும் ஓதார் வினையாளார் மிக்க விளைவறி யாரே. |
12 |
34. முத்திநிந்தை.
2558 |
பரகதி யுண்டென இல்லையென் போர்கள் நரகதி செல்வது ஞாலம் அறியும் இரகதி செய்திடு வார்கடை தோறும் துரகதி யுண்ணத் தொடங்குவர் தாமே. |
1. |
2559 |
கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள் பாடகில் லாரவன் செய்த பரிசறிந் தாடவல் லாரவர் பேறெது வாமே. |
2. |
2560 |
புறப்பட்டுப் போகும் புகுதுமென் னெஞ்சில் திறப்பட்ட சிந்தையைப் தெய்வமென் றெண்ணி அறப்பட்ட மற்றப் பதியென் றழைத்தேன் இறப்பற்றி னேன்இங் கிதென்னென்கின் றானே |
3. |
2561 |
திடரடை நில்லாத நீர்போல் ஆங்கே உடலிடை நில்லா உறுபொருள் காட்டிக் கடலிடை நில்லா கலஞ்சேரு மாபோல் அடலிடை வண்ணனும் அங்குநின் றானே. |
4. |
2562 |
தாமரை நூல்போல் தடுப்பார் பரந்தொடும் போம்வழி வேண்டிப் புறமே யுழிதர்வர் காண்வழி காட்டக்கண் காணாக் கலதிகள் தீநெறி செல்வான் திரிகின்ற வாறே. |
5. |
2563 |
மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள் கூடுவர் நந்தி யவனைக் குறித்துடன் காடும் மலையுங் கழனி கடந்தோறும் ஊடும் உருவினை யுன்னிகி லாரே. |
6. |
2564 |
ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள் போவார் குடக்கும் குணக்கும் குறுவழி நாவினின் மந்திர மென்று நடுவங்கி வேவது செய்து விளங்கிடு வீரே. |
7. |
2565 |
மயக்குற நோக்கினும் மாதவஞ் செய்யார் தமக்குறப் பேசின தாரணை கொள்ளார் சினக்குறப் பேசின தீவினை யாளர் தமக்குற வல்லினை தாங்கிநின் றாரே. |
8. |
35. இலக்கணாத் திரயம்
2566 |
விட்ட விலக்கணைதான்போம் வியோமத்துத் தொட்டு விடாத துபசாந்தத் தேதொகும் விட்டு விடாதது மேவுஞ்சத் தாதியிற் சுட்டு மிலக்கணா தீதஞ் சொருபமே. |
1 |
2567 |
வில்லின் விசைநாணிற்கோத்திலக்கெய்தபின் கொல்லுங் களிறைந்துங் கோலொடு சாய்ந்தன வில்லு ளிருந்தெறி கூரும் ஒருவற்குக் கல்கலன் என்னக் கதிரெதி யாமே. |
2 |
36. தத்துவமசி வாக்கியம்.
2568 |
சீவ துரியத்துத் தொம்பதஞ் சீவனார் தாவு பரதுரி யத்தனில் தற்பதம் மேவு சிவதுரி யத்தசி மெய்ப்பத மோவி விடும் தத் துவமசி உண்மையே. |
1. |
2569 |
ஆறா றகன்ற அணுத்தொம் பதஞ்சுத்தம் ஈறான தற்பதம் எய்துப சாந்தத்துப் பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து வீறான தொந்தத் தசிதத்வ மசியே. |
2. |
2570 |
ஆகிய வச்சோயம் தேவகத் தன்னிடத்து ஆகிய விட்டு விடாத விலக்கணைத்து ஆருப சாந்தமே தொந்தத் தசியென்ப ஆகிய சீவன் பரன்சிவ னாமே. |
3. |
2571 |
துவந்தத் தசியே தொந்தத் தசியும் அவைமன்னா வந்து வயத்தேகமான தவமுறு தத்துவ மசிவே தாந்த சிவமா மதுஞ்சித் தாந்தவே தாந்தமே. |
4. |
2572 |
துரியம் அடங்கிய சொல்லறும் பாழை அரிய பரமென்ப ராகாரி தன்றென்னார் உரிய பரம்பர மாமொன் றுதிக்கும் அருநிலம் என்பதை யாரறி வாரே. |
5. |
2573 |
தொம்பதந் தற்பதஞ் சொல்லும் அசிபதம் நம்பிய முத்துரி யத்துமே னாடவே யும்பத மும்பத மாகும் உயிர்பரன் செம்பொரு ளான சிவமென லாமே. |
6. |
2574 |
வைத்த துரிய மதிற்சொரு பானந்தத் துய்த்த பிரணவ மாமுப தேசத்தை மெய்த்த விதயத்து விட்டிடு மெய்யுணர் வைத்த படியே யடைந்து நின்றானே. |
7. |
2575 |
நனவாதி ஐந்தையும் நாதாதியில் வைத்துப் பினமா மலத்தைப் பின்வைத்துப் பின்சுத்தத் தனதாஞ் சிவகதி சத்தாதி சாந்தி மனவா சகங்கெட்ட மன்னனை நாடே. |
8. |
2576 |
பூரணி யாது புறம்பொன்றி லாமையின் பேரணி யாதது பேச்சொன்றி லாமையின் ஓரணை யாததுவொன்றுமி லாமையிற் காரண மின்றியே காட்டுந் தகைமைத்தே. |
9. |
2577 |
நீயது வானா யெனநின்ற பேருரை ஆயது நானானேன் என்னச் சமைந்தறச் சேய சிவமாக்குஞ் சீர்நந்தி பேரருள் ஆயது வாயனந் தானந்தி யாகுமே. |
10. |
2578 |
உயிர்பர மாக உயர்பர சீவன் அரிய சிவமாக அச்சிவ வேதத்து இரியிலுஞ் சீராம் பராபரன் என்ன உரிய உரையற்ற வோமய மாமே. |
11. |
2579 |
வாய்நாசி யேபுரு மத்தகம் உச்சியில் ஆய்நாசி யுச்சி முதலவை யாய்நிற்கும் தாய்நாடி யாதிவாக் காதி சகலாதி சேய்நா டொளியெனச் சிவகதி யைந்துமே. |
12. |
2580 |
அறிவறி யாமை இரண்டும் அகற்றிப் செறிவறி வாய்எங்கும் நின்ற சிவனைப் பிறிவறி யாது பிரானென்று பேணுங் குறியறி யாதவர் கொள்ளறி யாரே. |
13. |
2581 |
அறிவார் அறிவன அப்பும் அனலும் அறிவார் அறிவன அப்புங் கலப்பும் அறிவான் இருந்தங் கறிவிக்கி னல்லால் அறிவான் அறிந்த அறிவறி யோமே. |
14. |
2582 |
அதீதத்துள் ளாகி அகன்றவன் நந்தி அதீதத்துள் ளாகி அறிவிலோன் ஆன்மா மதிபெற் றுருள்விட்ட மன்னுயி ரொன்றாம் பதியிற் பதியும் பரவுயிர் தானே. |
15. |
2583 |
அடிதொழ முன்னின் றமரர்க ளத்தன் முடிதொழ ஈசனும் முன்னின் றருளிப் படிதொழ நீபண்டு பாவித்த தெல்லாங் கடிதொழ காணன்னுங் கண்ணுத லானே. |
16. |
2584 |
நின்மல மேனி நிமலன் பிறப்பிலி என்னுளம் வந்திவன் என்னடி யானென்று பொன்வளர் மேனி புகழ்கின்ற வானவன் நின்மல மாகென்று நீக்கவல் லானே. |
17. |
2585 |
துறந்துபுக் கொள்ளொளி சோதியைக் கண்டு பறந்ததென் உள்ளம் பணிந்து கிடந்தே மறந்தறி யாவென்னை வான்வர் கோனும் இறந்து பிறவாமல் ஈங்குவைத் தானே. |
18. |
2586 |
மெய்வாய் கண்மூக்குச் செவியென்னும் மெய்த் தோற்றத்
தவ்வாய அந்தக் கரணம் அகில்மும் எவ்வா யியுரும் இறையாட்ட ஆடலாற் கைவா யிலாநிறை எங்குமெய் கண்டதே. |
19. |
37. விசுவக் கிராசம்.
2587 |
அழிகின்ற சாயா புருடனைப் போலக் கழிகின்ற நீரிற் குமிழியைக் காணில் எழுகின்ற தீயிற்கர்ப் பூரத்தை யொக்கப் பொழிகின்ற இவ்வுடற் போமப் பரத்தே. |
1. |
2588 |
உடலும் உயிரும் ஒழிவற ஒன்றிற் படருஞ் சிவசத்தி தாமே பரமாம் உடலைவிட் டிந்த உயிரெங்கு மாகிக் கடையுந் தலையுங் கரக்குஞ் சிவத்தே. |
2. |
2589 |
செவிமெய்வாய் கண்மூக்குச் சேரிந் திரியம் அவியின் றியமன மாதிகள் ஐந்துங் குவிவொன் றிலாமல் விரிந்து குவிந்து தவிர்வொன் றிலாத சராசரந் தானே. |
3. |
2590 |
பரனெங்கு மாரப் பரந்துற்று நிற்கும் திரனெங்கு மாகிச் செறிவெங்கு மெய்தும் உரனெங்கு மாயுல குண்டு உமிழ்க்கும் வரமிங்ஙன் கண்டியான் வாழ்ந்துற்ற வாறே. |
4. |
2591 |
அளந்து துரியத் தறிவினை வாங்கி உளங்கொள் பரஞ்சகம் உண்ட தொழித்துக் கிளர்ந்த பரஞ்சிவஞ்சேரக் கிடைத்தால் விளங்கிய வெட்ட வெளியனு மாமே. |
5. |
2592 |
இரும்பிடை நீரென என்னையுள் வாங்கிப் பரம்பர மான பரமது விட்டே உரம்பெற முப்பாழ் ஒளியை விழுங்கி இருந்தஎன் நந்தி இதயத்து ளானே. |
6. |
2593 |
கரியுண் விளவின் கனிபோல் உயிரும் உரிய பரமுமுன் னோதுஞ் சிவமும் அரிய துரியமேல் அகிலமும் எல்லாம் திரிய விழுங்குஞ் சிவபெரு மானே. |
7. |
2594 |
அந்தமும் ஆதியும் ஆகும் பராபரன் தந்தம் பரம்பரன் தன்னிற் பரமுடன் நந்தமை யுண்டுமெய்ஞ் ஞானநே யாந்தத்தே நந்தி யிருந்தனன் நாமறி யோமே. |
8 |
38. வாய்மை
2595 |
அற்ற துரைக்கில் அருளுப தேசங்கள் குற்ற மறுத்தபொன் போலுங் கனலிடை அற்றற வைத்திறை மாற்றற ஆற்றிடில் செற்றம் அறுத்த செழுஞ்சுட ராகுமே. |
1. |
2596 |
எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டு எல்லாம் அறிந்தும் இலாபமங் கில்லை எல்லாம் அறிந்த அறிவினை நானென்னில் எல்லாம் அறிந்த இறையென லாமே. |
2. |
2597 |
தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும் புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து கலைநின்ற கள்வனை கண்டுகொண் டேனே. |
3. |
2598 |
தானே யுலகில் தலைவ னெனத்தகும் தானே யுலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும் வானே மழைபொழி மாமறை கூர்ந்திடும் ஊனே யுருகிய வுள்ளமொன் றாமே. |
4. |
2599 |
அருள்பெற்ற காரணம் என்கொல் அமரில் இருளற்ற சிந்தை இறைவனை நாடி மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப் பொருளுற்ற சேவடி போற்றுவோர் தாமே. |
5. |
2600 |
மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்தன்னை பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை உய்கலந் தூழித் தலைவனுமாய் நிற்கும் மெய்கலந் தின்பம் விளைந்திடும் மெய்யர்க்கே. |
6. |
2601 |
மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்மிகப் பொய்கலந் தாருட் புகுதாப் புனிதனை கைகலந் தாவி எழும்பொழு தண்ணலைக் கைகலந் தார்க்கே கருத்துற லாமே. |
7. |
2602 |
எய்திய காலத் திருபொழு துஞ்சிவன் மெய்செயின் மேலை விதியது வாய்நிற்கும் பொய்யும் புலனும் புகலொன்று நீத்திடில் ஐயனும் அவ்வழி யாகிநின் றானே. |
8. |
2603 |
எய்துவ தெய்தா தொழிவ திதுவருள் உய்ய அருள்செய்தான் உத்தமன் சீர்நந்தி பொய்செய்புலன் நெறியொன்பதுந்தாட்கொளின் மெய்யென் புரவியை மேற்கொள்ள லாமே. |
9. |
2604 |
கைகலந் தானை கருத்தினுள் நந்தியை மெய்கலந் தான்தன்னை வேத முதல்வனைப் பொய்கலந் தார்முன் புகுதாப் புனிதனைப் பொய்யொழிந் தார்க்கே புகலிட மாமே |
10. |
2605 |
மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக் கைத்தாள் கொண்டாருந் திறந்தறி வாரில்லை பொய்த்தாள் இடும்பையைப் பொய்யற நீவிட்டாம் கத்தாள் திறக்கில் அரும் பேற தாமே. |
11. |
2606 |
உய்யும் வகையால் உணர்வில் ஏத்துமின் மெய்யன் அரனெறி மேலுண்டு திண்ணெனப் பொய்யொன்று மின்றிப் புறம்பொலி வார்நடு ஐயனும் அங்கே அமர்ந்துநின் றானே. |
12. |
2607 |
வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டு தம்பாற் பறவை புகுந்துணத் தானொட்டா தம்புகொண் டெய்திட் டகலத் துரத்திடிற் செம்பொற் சிவகதி சென்றெய்த லாமே. |
13 |
2608 |
மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத் துயக்கறுத்தானைத் தொடர்மின்தொடர்ந்தால் தியக்கஞ் செய்யாதே சிவனெம் பெருமான் உயப்போ எனமனம் ஒன்றுவித் தானே. |
14 |
2609 |
மனமது தானே நினையவல் லாருக்குக் கினமெனக் கூறு மிருங்காய மேவற் றனிவினி னாதன்பால் தக்கன செய்யில் புனிதன் செயலாகும் போதப் புவிக்கே. |
15 |
39. ஞானி செயல்
2610 |
முன்னை வினைவரின் முன்னுண்டே நீங்குவர் பின்னை வினைக்கணார் பேர்ந்தறப் பார்ப்பர்கள் தன்னை யறிந்திடுந் தததுவ ஞானிகள் நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே. |
1. |
2611 |
தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள் முன்னை வினையின் முடிச்சை யவிழ்பவர்கள் பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள் சென்னியின் வைத்த சிவனரு ளாலே. |
2 |
2612 |
மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும் மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா மனவாக்கு கெட்டவர் வாதனை தன்னால் தனைமாற்றி யாற்றத் தகுஞானி தானே. |
3 |
40. அவா அறுத்தல்
2613 |
வாசியு மூசியும் பேசி வகையினால் பேசி இருந்து பிதற்றிப் பயனில்லை ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின் ஈசன் இருந்த இடம் எளிதாமே. |
1. |
2614 |
மாடத்து ளானலன் மண்டபத் தானலன் கூடத்து ளானலன் கோயிலுள் ளானலன் வேடத்து ளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சில் மூடத்து ளேநின்று முத்திதந் தானே. |
2. |
2615 |
ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள் ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்த மாமே. |
3. |
2616 |
அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே படுவழி செய்கின்ற பற்றற வீசி விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம் தொடுவது தம்மைத் தொடர்தலு மாமே. |
4. |
2617 |
உவாக்கடல் ஒக்கின்ற வூழியும் போன துவாக்கட லுட்பட்டுத் துஞ்சினர் வானோர் அவாக்கட லுட்பட் டழுந்தினர் மண்ணோர் தவாக்கடல் ஈசன் தரித்து நின்றானே. |
5. |
2618 |
நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல் துந்தொழி லற்றுச் சுத்தம தாகலும் பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத் துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே. |
6. |
2619 |
உண்மை யுணர்ந்துற ஒண்சித்தி முத்தியாம் பெண்மயற் கெட்டறப் பேறட்ட சித்தியாம் திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால் வண்மை யருள்தான் அடைந்தபின் ஆறுமே. |
7. |
2620 |
அவனிவன் ஈசனென் றன்புற நாடிச் சிவனிவன் ஈசனென் றுண்மையை யோரார் பவனிவன் பல்வகை யாமிப் பிறவி புவனிவன் போவது பொய்கண்ட போதே. |
8. |
2621 |
கொதிக்கின்ற வாறுங் குளிர்கின்ற வாறும் பதிக்கின்ற வாறிந்தப் பாரக முற்றும் விதிக்கின்ற ஐவரை வேண்டா துலகம் நொதிக்கின்ற காயத்து நூலொன்று மாமே. |
9. |
2622 |
உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர் கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச் சிந்தையில் வைத்துத் தெளிவுறச் சேர்த்திட்டால் முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே. |
10. |
41. பக்தியுடைமை
2623 |
முத்திசெய் ஞானமும் கேள்வியு மாய்நிற்கும் அத்தனை மாயா அமரர் பிரான்தனைச் சுத்தனை தூய்நெறி யாய்நின்ற சோதியைப் பத்தர் பரசும் பசுபதி தானென்றே. |
1. |
2624 |
அடியார் அடியார் அடியார்க் கடிமைக் கடியவனாய் நல்கிட் டடினையும் பூண்டேன் அடியார் அருளால் அவனடி கூட அடியா னிவனென் றடிமைகொண் டானே. |
2. |
2625 |
நீரிற் குளிரும் நெருப்பினிற் சுட்டிடும் ஆரிக் கடனந்தி யாமா ரறிபவர் பாரிற் பயனாரைப் பார்க்கிலும் நேரியர் ஊரில் உமாபதி யாகிநின் றானே. |
3. |
2626 |
ஒத்துல கேழும் அறியா ஒருவனென் ற்த்தன் இருந்திடம் ஆரறிவார்சொல்லப் பத்தர்தம் பத்தியிற் பாற்படில் அல்லது முத்தினை யார்சொல்ல முந்துநின் றாரே. |
4. |
2627 |
ஆன்கன்று தேடி யழைக்கு மதுபோல் நான்கன்றாய் நாடி யழைத்தேனென் நாதனை வான்கன்றுக் கப்பாலாய் நின்ற மறைப்பொருள் ஊன்கன்றா னாடிவந் துள்புகுந் தானே. |
5. |
2628 |
பெத்தத்துந் தன்பணி இல்லை பிறத்தலான் முத்தத்துந் தன்பணி இல்லை முறைமையால் அத்தற் கிரண்டும் அருளால் அளித்தலாற் பத்திப்பட் டோர்க்குப் பணியொன்றும் இல்லையே. |
6. |
2629 |
பறவையிற் கற்பமும் பாம்புமெய் யாகப் குறவஞ் சிலம்பக் குளிர்வரை யேறி நறவார் மலர்கொண்டு நந்தியை யல்லால் இறைவனென் றென்மனம் ஏத்தகி லாவே. |
7. |
2630 |
உறுதுணை நந்தியை உம்பர் பிரானை பெறுதுணை செய்து பிறப்பறுத் துய்மின் செறிதுணை செய்து சிவனடி சிந்தித் துறுதுணை யாயங்கி யாகிநின் றானே. |
7. |
2631 |
வானவர் தம்மை வலிசெய் திருக்கின்ற தானவர் முப்புரஞ் செற்ற தலைவனைக் கானவன் என்றுங் கருவரை யானென்றும் ஊனத னுள்நினைந் தொன்றுபட் டாரே. |
8. |
2632 |
நிலைபெறு கேடென்று முன்னே படைத்த தலைவனை நாடித் தயங்குமென் உள்ளம் மலையுளும் வானகத் துள்ளும் புறத்தும் உலையுளும் உள்ளத்து மூழ்கிநின் றேனே. |
9. |
42. முத்தியுடைமை
2633 |
முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்றுத்
தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணி மெய்த்தவஞ் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப் பத்தியி லுற்றோர் பரானந்த போதரே. |
1. |
2634 |
வளங்கனி தேடிய வன்றாட் பறவை உளங்கனி தேடி யுழிதரும் போது களங்கனி யங்கியிற் கைவிளக் கேற்றி நலங் கொண்ட நால்வரும் நாடுகின்றாரே. |
2 |
43. சோதனை
2635 |
பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்து அம்மா நடிதந் தருட்கடல் ஆடினோம் எம்மாய மும்விடுத் தெம்மைக் கரந்திட்டுச் சும்மா திருந்திடஞ் சோதனை யாகுமே. |
1. |
2636 |
அறிவுடை யானரு மாமறை யுள்ளே செறிவுடை யான்மிகு தேவர்க்குந் தேவன் பொறியுடை யான்புலன் ஐந்துங் கடந்த குறியுடை யானொடுங் கூடுவன் நானே. |
2. |
2637 |
அறிவறி வென்றங் கரற்றும் உலகம் அறிவறி யாமையை யாரும் அறியார் அறிவறி யாமை கடந்தறி வானால் அறிவறி யாமை யழகிய வாறே. |
3. |
2638 |
குறியாக் குறியினிற் கூடாத கூட்டத் தறியா அறிவில் அவிழ்ந்தேக சித்தமாய் நெறியாம் பராநந்தி நீடருள் ஒன்றுஞ் செறியாச் செறிவே சிவமென லாமே. |
4. |
2639 |
காலினில் ஊருங் கரும்பினில் கட்டியும் பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும் பூவினுள் நாற்றமும் போலுளன் எம்மிறை காவலன் எங்குங் கலந்துநின் றானே. |
5. |
2640 |
விருப்பொடு கூடி விகிர்த்னை நாடிப் பொருப்பகஞ் சேர்தரு பொற்கொடி போல இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார் நெருப்புரு வாகி நிகழ்ந்துநின் றாரே. |
6. |
2641 |
நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து வந்தென் அகம்படி கோயில்கொண் டான்கொள்ள எந்தைவந் தானென் றெழுந்தேன் எழுதலுஞ் சிந்தையி லுள்ளே சிவனிருந் தானே. |
7. |
2642 |
தன்மைவல் லோனைத் தவத்துள் நலத்தினை நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப் புன்மைபொய் யாதே புனிதனை நாடுமின் பன்மையில் உம்மைப் பரிசுசெய் வானே. |
8. |
2643 |
தொடர்ந்துநின் றானென்னைச் சோதிக்கும் போது தொடர்ந்துநின் றானல்ல நாதனும் அங்கே படர்ந்துநின் றாதிப் பராபரன் எந்தை கடந்துநின் றவ்வழி காட்டுகின் றானே. |
9. |
2644 |
அவ்வழி காட்டும் அமரர்க் கரும்பொருள் இவ்வழி தந்தை தாய் கேளியான் ஒக்குஞ் செவ்வழி சேர்சிவ லோகத் திருந்திடும் இவ்வழி நந்தி இயல்பது தானே. |
10. |
2645 |
எறிவது ஞானத் துறைவாள் உருவி அறிவது னோடேயவ் வாண்டகை யானைச் செறிவது தேவர்க்குத் தேவர் பிரானைப் பறிவது பல்கணப் பற்றுவி டாரே. |
11. |
2646 |
ஆதிப் பிரான்தந்த வாள்ங்கைக்கொண்டபின் வேதித்து என்னை விலக்கவல் லாரில்லை சோதிப்பன் அங்கே சுவடு படாவண்ணம் ஆதிக்கட் டெய்வ மவனிவ னாமே. |
12. |
2647 |
அந்தக் கருவை யருவை வினைசெய்தற் பந்தம் பணியச்சம் பல்பிறப் பும்வாட்டிச் சிந்தை திருத்தலுஞ் சேர்ந்தாரச் சோதனை சந்திக்கத் தற்பர மாகுஞ் சதுரர்க்கே. |
13. |
2648 |
உரையற்ற தொன்றை யுரைத்தான் எனக்குக் கரையற் றெழுந்த கலைவேட் டறுத்துத் திரையொத்த என்னுடல் நீங்கா திருத்திப் புரையற்ற என்னுட் புகுந்தற் பரனே. |
14. |
எட்டாம் தந்திரம் முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எட்டாம் தந்திரம் - பத்தாம் திருமுறை - திருமந்திரம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - துரியம், தத்துவ, தன்னில், அறிவுஅறி, நனவில், கேவலம், மாகும், சாக்கிரா, சுழுத்தி, அறிவார், மேவும், சாக்கிர, தத்துவம், தொந்தத், சாக்கிரம், வேதாந்த, காணும், தற்பதம், அறியார், ஐந்தும், தொம்பதம், நனவாதி, நின்று, அதீதம், துரியத்து, மாமாயை, ஆகின்ற, அறியும், மன்னும், பின்னை, அவத்தை, சித்தாந்த, எல்லாம், பரதுரி, மூன்றும், மாயையும், அருளால், பரம்பர, துரியமே, பதிபசு, அறிவறி, ஆனந்தம், அந்தமும், சித்தாந்தம், அப்பால், மூன்று, சுத்தமே, பாசமும், சிவமும், காட்டும், பற்றறப், அசிபதம், காரணம், அறிவான், அவத்தையில், மறைந்தது, மெய்கலந், வேதாந்தம், அறிந்தபின், முன்னை, சுத்தம், பேதமும், சிவகதி, ஒன்பான், அறிந்து, வாகுமே, சீர்நந்தி, அருளும், விளக்கது, அறிவுடை, அப்பும், அனலும், சிவானந்த, பேரருள், நந்தியை, அறிந்த, செய்து, நாதமும், காமியம், துரியத்துத், தான்அவ, செய்யும், துரியமும், ஒன்றுண்டு, அத்தன், ஆன்மாவும், எய்தும், வடிவென்று, சாந்தமே, சென்று, ஆறாறுக்கு, தன்னினில், ஐம்மலத், தூயனல், அவ்வழி, நித்தம், தாந்தமே, சித்தம், தூய்மணி, தந்திரம், அந்தக், சார்ந்தவர், தானாகி, னாகும், வேண்டாம், இரண்டும், தற்பரன், முத்திரை, எட்டும், கைகலந், செயலற், வேறுசெய், யாகுமே, மறைத்தது, ஆயிடும், அவமும், உண்மைக், ளானலன், பயிலப், விட்டார், திருந்தினர், காரியம், உயிரிச்சை, எய்தினர், பரமாம், ஐஐந்து, மூன்றுள, சதாசிவம், பதியும், ஐஐந்தும், சொல்லறும், காலமும், உன்னார், புரியட், நின்மல, அதீதத், மாயையில், துரியத்தில், அதீதத்து, ஏய்ந்த, ஆவயின், அதீதத்துள், வல்வினை, ஈதென்று, அறியாது, தீதத்தில், வாய்நின்ற, அறிகின்ற, ஒன்றும், வேறாய், ஐம்மலம், நான்கும், நாலேழ், சிந்தை, தானாம், தலைஅடி, அடங்கிடும், கடந்து, சிவமாய், அடியார், அருள்செய்தான், அத்தத்தில், சிவனுடன், அறிவிலோன், நம்பிய, வாக்கியம், சத்தியின், ஞானத்து, தன்பணி, கற்பனை, அகன்று, போதாந்த, மூன்றினில், ஒருங்கிய, மில்லை, யாரும், வாரில்லை, உண்மையே, மந்திரம், புனிதனை, உள்ளம், கலாந்தம், இருந்தும், அறிவுக்கு, பற்றில், தோன்றுமே, தான்என்று, படைப்பாதி, யாகிநின், ஞானிகள், செம்பொருள், அறியகி, பொய்கலந், பராபரன், சிவமாம், குறிஅறி, யாதவர், யறுமின்கள், பெத்தமும், பேர்நந்தி, மெய்த்த, மேதினி, மண்டலம், மனமும், வாயுவும், அதனால், நிற்பது, பிறப்பிலி, வியோமம், சிவமாதல், கிரியை, நந்தியே, நனவாம், கனவாம், எய்யும், கழுத்தி, பொய்கண்ட, நிற்கும், பசுக்கள், மற்றது, எழுந்து, இதயத்து, அரன்அரு, தற்பரம், முத்தியே, காயத்தில், உடம்பே, பொருந்தும், கட்டிய, அற்றது, சூக்கம், கழிகின்ற, முடிகின்ற, அறிகிலர், அண்டமும், தானாய், நின்றவன், மலம்குணம், மந்திர, இல்லையே, எழுகின்ற, கைகண்ட, அறிந்திலேன், உருவாய், உபசாந்தம், பராநந்தி, பரம்சிவன், மாநந்தி, சிவதுரி, மாய்நிற்கும், அறிவாம், யத்தில், மூன்றில், விந்து, பிரமன், நின்றான், ஒன்றாய், வாய்ந்த, சதாசிவன், தானும், அந்தம், உருத்திரன், பொன்னணி, தன்னின், சாந்தி, பராபரம், சேதனன், சகலத்து, தத்துவந், பிரளயா, அறியாத, பிரானை, சத்தியும், மலக்கலப், சிந்தையை, மும்மலம், கேவலத், சத்தாதி, அசுத்தம், பரசிவன், பராவத்தை, கனவும், முத்தியும், சகலத்தில், சுத்தத்தில், நோக்கும், அறிவது