முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » ஏழாம் அதிகாரம்
எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - ஏழாம் அதிகாரம்

ஏழாம் அதிகாரம்
7. குறையுற வுணர்தல்
நூற்பா
குறையற்று நிற்றல் அவன்குறிப்பு அறிதல் அவள் குறிப்(பு) அறிதலோ(டு) அவர்நினை(வ) எண்ணல் கூறிய நான்கும் குறையுற உணர்வெனத் தேறிய பொருளிற் தெளிந்திசி னோரே. |
பேரின்பக் கிளவி
குறையுற உணர்தல் துறைஒரு நான்கும் உயிர்சிவத்(து) இடைசென்(று) ஒருப்படுந் தன்மை பணியாற் கண்டு பரிவால் வினாயது. |
1. குறையுற்று நிற்றல்
மடுக்கோ கடலின் விடுதிமில் அன்றி மறிதிரைமீன் படுக்கோ பணிலம் பலகுளிக் கோபரன் தில்லைமுன்றில் கொடுக்கோ வளைமற்று நும்ஐயர்க்(கு) ஆயகுற் றேவல் செய்கோ தொடுக்கோ பணியீர் அணியீர் மலர்நும் கரிகுழற்கே. |
63 |
கொளு கறையற்ற வேலவன் குறையுற்றது. |
2. அவன் குறிப்பறிதல்
அளியமன் னும்மொன்று உடைத்(து) அண்ணல் எண்ணரன் தில்லையன்னாள் கிளிமைமன்னுங்கடியச் செல்ல நிற்பின் கிளர்அளகத்(து) அளியமர்ந்(து) ஏறின் வறிதே யிருப்பின் பளிங்கடுத்த ஒளியமர்ந் தாங்கொன்று போன்றுறொன்று தோன்றும் ஒளிமுகத்தே. |
64 |
கொளு பொற்றொடித் தோளிதன் சிற்றிடைப் பாங்கி வெறிப்பூஞ் சிலம்பன் குறிப்ப றிந்தது. |
3. அவள் குறிப்பறிதல்
பிழைகொண்(டு) ஒருவிக் கெடா(து)அன்பு செய்யின் பிறவியென்னும் முழைகொண்(டு) ஒருவன்செல் லாமைநின்(று) அம்பலத்(து) ஆடுமுன்னோன் உழைகொண்(டு) ஒருங்(கு)இரு நோக்கம் பயின்றஎம் ஒண்ணுதல்மாந் தழைகொண்(டு) ஒருவன்என் னாமுன்னம் உள்ளம் தழைத்திடுமே. |
65 |
கொளு ஆங்கவள் குறிப்புப் பாங்கி பகர்ந்தது. |
4. இருவர் நினைவும் ஒருவழி உணர்தல்
மெய்யே இவற்(கு)இல்லை வேட்டையின் மேல்மனம் மீட்(டு) இவளும் பொய்யே புனத்தினை காப்பது இறைபுலி யூர்அனையாள் மையேர் குவளைக்கண் வண்டினம் வாழும்செந் தாமரைவாய் எய்யேம் எனினும் குடைந்தின்பத் தேனுண்(டு) எழில்தருமே. |
66 |
கொளு அன்புறு நோக்(கு) ஆங்கறிந்(து) இன்புறு தோழி எண்ணியது. |
பேரின்பக் கிளவி
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏழாம் அதிகாரம் - எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - குறையுற