முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » இருபத்திரண்டாம் அதிகாரம்
எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - இருபத்திரண்டாம் அதிகாரம்

இருபத்திரண்டாம் அதிகாரம்
22. பகை தணி வினைப் பிரிவு
பேரின்பக் கிளவி
பகைதணி வித்தல் துறையோர் இரண்டும் எங்கும் இன்பக் கனமென் றியறல். |
1.பிரிவு கூறல்
மிகைதணித் தற்(கு)அரி தாம்இரு வேந்தர்வெம் போர்மிடைந்த பகைதணித் தற்குப் படர்தலுற் றார்நமர் பல்பிறவித் தொகைதணித் தற்(கு)என்னை ஆண்டுகொண் டோன்தில்லைச் சூழ்பொழில்வாய் முகைதணித் தற்(கு)அரி தாம்புரி தாழ்தரு மொய்குழலே. |
314 |
கொளு துன்னு பகை தணிப்ப மன்னவன் பிரிவு நன்னறுங் கோதைக்கு முன்னி மொழிந்தது. |
2. வருத்தம் தணித்தல்
நெருப்புறு வெண்ணெயும் நீருறும் உப்பு மெனஇங்ஙனே பொருப்புறு தோகை புலம்புறல் பொய்யன்பர் போக்குமிக்க விருப்புறு வோரைவிண் ணோரின் மிகுத்துநண் ணார்கழியத் திருப்புறு சூலத்தி னோன்தில்லை போலும் திருநுதலே. |
315 |
கொளு மணிப்பூண் மன்னவன் தணப்ப தில்லை அஞ்சல் பொய்யென வஞ்சியைத் தணித்தது. |
பகை தணி வினைப் பிரிவு முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
இருபத்திரண்டாம் அதிகாரம் - எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பிரிவு