தேங்காய்ப்பால் கூட்டு
தேவையானவை: குட்டி உருளைக்கிழங்கு - கால் கிலோ, தேங்காய்துருவல் - ஒரு கப், பச்சைமிளகாய் - 4, உப்பு - தேவையானஅளவு, தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன். தாளிக்க: கடுகு- கால் டீஸ்பூன்.
செய்முறை: குட்டி உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து,உப்பு சேர்த்த (தேவையான அளவு) நீரில் நன்றாக கொதிக்கவைக்கவும். அப்போதுதான் கிழங்கினுள் உப்பு நன்கு உறைக்கும்.தேங்காயை அரைத்து கெட்டியான பாலெடுக்கவும். உருளைக்கிழங்குநன்றாகக் கொதித்ததும், தேங்காய் எண்ணெயைக் காய வைத்து,பச்சை மிளகாயை கீறிப் போட்டு வதக்கிச் சேர்க்கவும்.தேங்காய்ப்பாலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும். கடுகு தாளித்து கொட்டவும்.சூப்பர் கூட்டு ரெடி!
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேங்காய்ப்பால் கூட்டு, 30 வகையான கூட்டு, 30 Type Koottu Poriyal, உப்பு, Recipies, சமையல் செய்முறை