சௌசௌ கூட்டு
தேவையானவை: பொடியாக நறுக்கிய சௌசௌ - ஒரு கப்,பச்சை மிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், வறுத்தஉளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒருடேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள்- கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, பாசிப்பருப்பு -கால் கப். தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு -கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை -சிறிதளவு, காய்ந்த மிளகாய் - சிறிதளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். முக்கால்பதம்வெந்ததும், நறுக்கி வைத்துள்ள சௌசௌவையும் போடவும். அதோடு உப்பையும் போட்டு நன்றாகவேகவிடவும். தேங்காய், வறுத்த உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை அரைத்து,காயுடன் சேர்த்து கொதிக்கவைத்து, பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கவும். பிறகு எண்ணெயைக்காயவைத்து, கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டுத் தாளித்துகூட்டில் சேர்த்து கலக்க வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சௌசௌ கூட்டு, 30 வகையான கூட்டு, 30 Type Koottu Poriyal, டீஸ்பூன், கால், சேர்த்து, மிளகாய், Recipies, சமையல் செய்முறை