பீர்க்கங்காய்கூட்டு
தேவையானவை: சற்றுப் பெரிதாக நறுக்கிய பீர்க்கங்காய் - ஒருகப், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு -கால் கப், காய்ந்த மிளகாய் - 4, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - கால்டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு. தாளிக்க: கடுகு - கால்டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை -சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். ஒருபாத்திரத்தில் பீர்க்கங்காயைப் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். வேகவைத்தபருப்புகளை, காயுடன் சேர்க்கவும். உப்புப் போடவும். தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய்,மஞ்சள்தூள், சீரகம், கறிவேப்பிலை.. இவை எல்லாவற்றையும் அரைத்துச் சேர்க்கவும்.எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பீர்க்கங்காய்கூட்டு, 30 வகையான கூட்டு, 30 Type Koottu Poriyal, கறிவேப்பிலை, டீஸ்பூன், கால், Recipies, சமையல் செய்முறை