வாழைக்கச்சை கூட்டு
தேவையானவை: நறுக்கிய வாழைக்காய் - ஒரு கப்,துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சம்பழம் - 1,பச்சைமிளகாய் - 2. தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,பெருங்காயம் - கால் டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், சீரகம் -சிறிதளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை -சிறிதளவு, இஞ்சி - சிறிதளவு.
செய்முறை: முதலில் வாழைக்காயை வேக வைத்துஎடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு, குக்கரில் துவரம்பருப்பை வேக வைத்து, வாழைக்காயுடன்சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து இரண்டையும் நன்றாக மசித்து கூட்டு பக்குவத்தில் இறக்கவும்.கடைசியில் கடுகு, மஞ்சள்தூள், சீரகம், பெருங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய்இவைகளை தாளித்து கொட்டி எலுமிச்சம்பழச் சாறை விடவும். தேவை யான அளவு உப்பைசேர்க்கவும்.குறிப்பு: வாழைக்கச்சை என்றால் சிறிய வாழைக்காயைக் குறிக்கும். இது உடலுக்கு நல்லது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாழைக்கச்சை கூட்டு, 30 வகையான கூட்டு, 30 Type Koottu Poriyal, டீஸ்பூன், சிறிதளவு, கால், Recipies, சமையல் செய்முறை