கொத்தவரை கூட்டு
தேவையானவை: நறுக்கிய கொத்தவரங்காய் - ஒரு கப், காய்ச்சியபால் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 2, மிளகு - கால் டீஸ்பூன்,உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒருடேபிள்ஸ்பூன், சர்க்கரை - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: எண்ணெய் - ஒருடீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை: கொத்தவரங்காயை நன்றாக வேகவைத்துக் கொள்ளவும். தேவையான அளவுஉப்பையும் சேர்க்கவும். மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு இவைகளை வறுத்து தேங்காய்துருவல் சேர்த்து அரைத்து காயில் கொட்டவும். பின்னர் நன்றாக கொதித்ததும், பால் சேர்த்துசர்க்கரையையும் போடவும். கடைசியில் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். மிளகுக் காரமும்சர்க்கரையின் இனிப்பும் சேர்ந்து அமர்க்களமான சுவை தரும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொத்தவரை கூட்டு, 30 வகையான கூட்டு, 30 Type Koottu Poriyal, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை