கீரை தயிர் கூட்டு
தேவையானவை: பொடியாக நறுக்கிய முளைக்கீரை - ஒரு கப்,உப்பு - தேவையான அளவு, காய்ந்த மிளகாய் - 4, சீரகம் - கால்டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள்- கால் டீஸ்பூன், தயிர் - அரை கப். தாளிக்க: எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - கால்டீஸ்பூன்.
செய்முறை:முதலில் கீரையை உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும். காய்ந்த மிளகாய், சீரகம்,தேங்காய்த்துருவல் இவைகளை சேர்த்து அரைத்து கீரைக்கலவையில் கொட்டவும். பிறகு கடுகு,பெருங்காயம் தாளித்து இறக்கி, கடைசியாக தயிர் சேர்க்கவும்.குறிப்பு: எந்த வகைக் கீரையில் வேண்டுமானாலும் இந்தக் கூட்டு செய்யலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 23 | 24 | 25 | 26 | 27 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கீரை தயிர் கூட்டு, 30 வகையான கூட்டு, 30 Type Koottu Poriyal, , Recipies, சமையல் செய்முறை