பாகற்காய் கூட்டு

தேவையானவை: நறுக்கிய பாகற்காய் - ஒரு கப்,தட்டைப்பயறு (காராமணி) - கால் கப், துவரம்பருப்பு - கால்கப், புளி - எலுமிச்சை அளவு, உப்பு - தேவையான அளவு,மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன்,கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,காய்ந்த மிளகாய் - 5, மிளகு - ஒரு டீஸ்பூன், தேங்காய்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், வெல்லம் - ஒரு சிறு துண்டு.தாளிக்க: எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - கால்டீஸ்பூன், கொத்துமல்லி, கறிவேப்பிலை - தலா சிறிதளவு.
செய்முறை: தட்டைப்பயறை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். பின்னர் குக்கரில் துவரம்பருப்பு,தட்டைப்பயறு இரண்டையும் வேக வைக்கவும். புளியை கரைத்து அதில் உப்பு, மஞ்சள்தூள்சேர்த்து, பாகற்காயை வேகவிடவும். வெந்ததும் தனியா, மிளகாய், மிளகு, உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்பு, தேங்காய் துருவல் ஆகியவற்றை வறுத்து அரைத்து, பாகற்காயில் சேர்க்கவும்.எல்லாம் சேர்ந்து கொதித்ததும் தட்டைப் பயறையும் பருப்பையும் சேர்க்கவும். நன்கு கொதித்து,சேர்ந்தாற்போல வரும்போது கடுகு, கொத்துமல்லி, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, வெல்லம்சேர்த்து இறக்கவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாகற்காய் கூட்டு, 30 வகையான கூட்டு, 30 Type Koottu Poriyal, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை