கீரைத்தண்டு கூட்டு
தேவையானவை: நார் எடுத்து, நறுக்கிய கீரைத்தண்டு - ஒருகப், துவரம்பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் - 2,உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகு - 5, சீரகம் - கால்டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு -தேவையான அளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்.தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: பருப்பை குக்கரில் வேகவிடவும். கீரைத்தண்டை ஒரு பாத்திரத்தில் வேக வைக்கவும்.வெந்ததும் பருப்பைச் சேர்த்து, உப்பு, மஞ்சள்தூள் போடவும். பிறகு, காய்ந்த மிளகாய்,உளுத்தம்பருப்பு, மிளகு, சீரகம் எல்லாவற்றையும் வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து,கீரைத்தண்டு கலவையில் சேர்த்து கொதிக்க விடவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டிஇறக்கவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 20 | 21 | 22 | 23 | 24 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கீரைத்தண்டு கூட்டு, 30 வகையான கூட்டு, 30 Type Koottu Poriyal, டீஸ்பூன், சேர்த்து, Recipies, சமையல் செய்முறை