பச்சைப்பட்டாணி கூட்டு
தேவையானவை: பச்சைப் பட்டாணி - ஒரு கப், பாசிப்பருப்பு- கால் கப், உப்பு - தேவையான அளவு, மஞ்சள்தூள் - கால்டீஸ்பூன், மிளகு - 10, பச்சை மிளகாய் - 2, காய்ந்த மிளகாய்2, பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒருடேபிள்ஸ்பூன். தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு -கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை- சிறிதளவு.
செய்முறை: பாசிப்பருப்பை முக்கால் பதம் வேகவைத்து, அதில்பச்சைப் பட்டாணியை சேர்க்கவும். மிளகு, காய்ந்த மிளகாய்இரண்டையும் வறுத்து அதனுடன் பொட்டுக்கடலை, தேங்காய்துருவல், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து பட்டாணியுடன்சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கொதிக்கும்போது, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துகொட்டவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 21 | 22 | 23 | 24 | 25 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பச்சைப்பட்டாணி கூட்டு, 30 வகையான கூட்டு, 30 Type Koottu Poriyal, டீஸ்பூன், கால், Recipies, சமையல் செய்முறை