கத்திரிக்காய்-கடலை கூட்டு

தேவையானவை: கத்திரிக்காய் - 4 அல்லது 5,கொண்டைக்கடலை - அரை கப், துவரம்பருப்பு - கால் கப்,புளி - எலுமிச்சை அளவு, உப்பு - தேவையான அளவு,மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால்டீஸ்பூன்.தாளிக்க: எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - கால்டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை -சிறிதளவு. வறுக்க :தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு -ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, வெந்தயம் - கால்டீஸ்பூன்.
செய்முறை: புளியைக் கரைத்து, அந்தத் தண்ணீரில் கத்திரிக்காயை வேகவிடவும். அதில்பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். வறுக்கக் கொடுத்துள்ளவற்றை வெறும் கடாயில் வறுத்து,நைஸாக அரைத்து அதனைச் சேர்க்கவும். கொண்டைக்கடலையை முதல் நாள் இரவேஊறவைக்கவும். அதையும் குக்கரில் வேகவைத்து சேர்க்கவும். கடைசியாக வெந்த துவரம்பருப்பைகொட்டி, கொதித்ததும் இறக்கி கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கத்திரிக்காய்-கடலை கூட்டு, 30 வகையான கூட்டு, 30 Type Koottu Poriyal, டீஸ்பூன், சேர்க்கவும், கால்டீஸ்பூன், கடலைப்பருப்பு, Recipies, சமையல் செய்முறை