எலுமிச்சம்பழ ரசம்

தேவையானவை: துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் - 2 கப், தக்காளி - 3, பச்சை மிளகாய் - 2,கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயம் - கால் டீஸ்பூன், சாம்பார் பொடி - அரை டீஸ்பூன், எலுமிச்சம்பழச்சாறு - ஒன்றரை டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கு, மல்லித்தழை - சிறிது.பொடிக்க: மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது.தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: ஒன்றரை தக்காளி பழத்தை மிக்ஸியில் அடித்து சாறு எடுத்து வடிகட்டுங்கள். மீதமுள்ள தக்காளியைபொடியாக நறுக்குங்கள். ஒன்றரை கப் தண்ணீரில் தக்காளி சாறு, நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு, கீறிய பச்சை மிளகாய், சாம்பார் பொடி, கறிவேப்பிலை, மிளகு ஆகியவற்றை போட்டு, பொடித்துவைத்த சீரகம், கறிவேப்பிலை சேர்த்து நடுத்தர தீயில் வைத்து கொதிக்க விடுங்கள். பச்சை வாசனை போனதும்,பருப்பு தண்ணீரை 2 முறை நுரைக்க ஆற்றி அதனுடன் சேர்க்கவும். நுரைத்து வந்ததும் இறக்கி, கடுகு, காய்ந்தமிளகாய் தாளித்து சேருங்கள். எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை சேர்த்து பரிமாறுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எலுமிச்சம்பழ ரசம், 30 வகையான பழ உணவுகள், 30 Type Fruit Dishes, டீஸ்பூன், தக்காளி, கறிவேப்பிலை, சாறு, ஒன்றரை, பச்சை, சிறிது, மிளகாய், Recipies, சமையல் செய்முறை