திராட்சை பானி பூரி
தேவையானவை: பூரிகள் - 25, உருளைக்கிழங்கு - 2, பட்டாணி - கால் கப், பச்சை மிளகாய் - 1,மல்லித்தழை - சிறிது, உப்பு - தேவைக்கு, மசாலா நீர், பச்சை திராட்சை - 1 கப், பச்சை சட்னி - 3டேபிள்ஸ்பூன், இனிப்பு சட்னி - 1 டேபிள்ஸ்பூன், தண்ணீர் - ஒன்றரை கப்.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளுங்கள். அதனுடன் பட்டாணியையும்,வேக வைத்து சேருங்கள். மிளகாய், மல்லி பொடியாக நறுக்கி சேர்த்து, உப்பு கலந்து பிசறி வையுங்கள்.திராட்சையை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து நன்கு வடிகட்டி அதனுடன் பச்சை, இனிப்பு சட்னிகளைகலந்து குளிர வையுங்கள். பரிமாறும்போது, பூரியை லேசாக துளை செய்து அதனுள் உருளை மசாலாவைசிறிது வைத்து மசாலா நீரூற்றி பரிமாறுங்கள்.குறிப்பு: விருப்பமுள்ளவர்கள் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூந்தி அல்லது ஓமப்பொடி சேர்த்துபரிமாறலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திராட்சை பானி பூரி, 30 வகையான பழ உணவுகள், 30 Type Fruit Dishes, பச்சை, Recipies, சமையல் செய்முறை