மாம்பழ மூஸ்
தேவையானவை: மாம்பழ துண்டுகள் - அரை கப், கண்டன்ஸ்டு பால் - 4 டேபிள்ஸ்பூன், ஜெலட்டின் (ஜெல்)- 1 டீஸ்பூன், பால் - அரை கப், மாம்பழக் கூழ் - 2 டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளார் - 1 டேபிள்ஸ்பூன்,சர்க்கரை - 4 டீஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - அரை கப்.
செய்முறை: பாதி அளவு பாலுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்சுங்கள். மீதி உள்ள பாலில்கார்ன்ஃப்ளாரை கரைத்து, கொதிக்கும் பாலுடன் சேர்த்துக் கிளறுங்கள். நன்கு கொதித்ததும் இறக்கிஆறவிடுங்கள். ஆறியதும் கண்டன்ஸ்டு பால் சேர்க்கவும். ஜெலட்டினை கால் கப் தண்ணீரில் கரைத்துகொதிக்கவிடுங்கள். (இறுதியில்) இது கரைந்ததும் பால் கலவையில் ஊற்றி நன்கு கலக்குங்கள். ஃப்ரிஜ்ஜில்வைத்து குளிரவைத்தால், சற்று கெட்டிப்படும். மீண்டும் எடுத்து மாம்பழக்கூழ், பழத்துண்டுகள் சேர்த்து நன்குகலக்குங்கள். க்ரீமை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, சிறிதளவு ஐஸ் கட்டிகளின் மேல் வைத்து நன்கு அடித்து, சற்றுகெட்டியானதும் இதனுடன் சேர்த்து குளிர வைத்து பரிமா றுங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாம்பழ மூஸ், 30 வகையான பழ உணவுகள், 30 Type Fruit Dishes, பால், நன்கு, வைத்து, சேர்த்து, டேபிள்ஸ்பூன், Recipies, சமையல் செய்முறை