ஆப்பிள் பை
தேவையானவை: ஆப்பிள் - 4, சர்க்கரை - முக்கால் கப், பிரெட் - 12 முதல் 15 ஸ்லைஸ், ஃப்ரெஷ் க்ரீம் - 1கப், வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: ஆப்பிளை தோல், விதை நீக்கி பொடியாக நறுக்கி சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துகிளறுங்கள். கிளறும்போதே சற்று மசித்துவிடுங்கள். சர்க்கரை நன்கு கரைந்து, சேர்ந்தாற்போல வந்ததும்இறக்குங்கள். பிரெட்டின் ஓரங்களை நீக்கி மிக்ஸியில் பொடியுங்கள். ஒரு பேக்கிங் பாத்திரத்தில் வெண்ணெயைநன்கு தடவுங்கள். அதன் மேல் பிரெட் தூளை அரை அங்குல கனத்துக்கு போட்டு நன்கு அழுத்துங்கள். அதன்மேல் ஆப்பிள் கலவையை பரவினாற் போல் போடுங்கள். அதன் மேல் மீண்டும் பிரெட் தூளை கால் அங்குலகனத்துக்கு தூவி சற்று அழுத்துங்கள். 180 டிகிரி சென்டிகிரேடில் பொன்னிற மாகும் வரை பேக் செய்யுங்கள்.ஃப்ரெஷ் க்ரீமுடன் பரிமாறுங்கள்.‘கேக் அவன்’ இல்லாதவர்கள் கடாயில் மணல் போட்டு சூடுபடுத்தி, அதன் மேல் பேக்கிங் பாத்திரத்தை வைத்து,அரைமணி நேரம் மூடி வைத்து ‘பேக்’ செய்யவும். மேற்புறம் பொன்னிறமானதும் எடுக்கவும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆப்பிள் பை, 30 வகையான பழ உணவுகள், 30 Type Fruit Dishes, மேல், பிரெட், சர்க்கரை, Recipies, சமையல் செய்முறை