பைனாப்பிள் கேசரி
தேவையானவை: அன்னாசிப் பழம் - கால் பாகம், ரவை - 1 கப், சர்க்கரை - 2 கப், நெய் - கால் கப்,எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், அன்னாசி எசன்ஸ் - 2 டீஸ்பூன், ஃபுட் கலர் (மஞ்சள்) - கால் டீஸ்பூன்,முந்திரிப்பருப்பு - 6.
செய்முறை: அன்னாசிப் பழத்தை தோல், முள் நீக்கி பொடியாக நறுக்குங்கள். அதனுடன் சர்க்கரை கலந்து,அரை மணி நேரம் வையுங்கள். ரவையை 2 டீஸ்பூன் நெய் சேர்த்து வறுத்தெடுங்கள். மீதமுள்ள நெய்,எண்ணெயை காய வைத்து முந்திரிப்பருப்பைப் போட்டு தாளித்து, 3 கப் தண்ணீர் சேருங்கள். அதில் மஞ்சள்கலர் சேர்த்து, தண்ணீர் கொதித்ததும் வறுத்த ரவையைச் சேர்த்து கட்டி படாமல் கிளறுங்கள். நன்கு கிளறியபின்,தீயைக் குறைத்து 5 நிமிடம் நன்கு வேகவிடுங்கள்.பின்னர் அன்னாசி, சர்க்கரை கலவையையும் அதில் சேருங்கள். இது சற்று இளகி, மீண்டும் கெட்டிப்படும்.அதை நன்கு கிளறி, எசன்ஸ் சேர்த்து கலந்து பரிமாறுங்கள். விருந்துகளுக்கு ஏற்ற, சுவையான ஸ்வீட் இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பைனாப்பிள் கேசரி, 30 வகையான பழ உணவுகள், 30 Type Fruit Dishes, சேர்த்து, நன்கு, டீஸ்பூன், நெய், சர்க்கரை, கால், Recipies, சமையல் செய்முறை