இலந்தைப்பழ வடை

தேவையானவை: சிறிய இலந்தைப்பழம் - 4 கப், புளி (சற்று பழையது) - எலுமிச்சை அளவு, பச்சைமிளகாய் - 8 முதல் 10, வெல்லம் - ஒரு சிறிய அச்சு, உப்பு - தேவைக்கேற்ப, பெருங்காயம் - 2 டீஸ்பூன்,எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: இலந்தைப்பழத்தை கழுவி துடைத்து நன்கு கசக்கி, விதைகளை எடுத்துவிடுங்கள். பெருங்காயத்தைபொரித்து எடுங்கள். எல்லாவற்றையும் ஒன்றாக ஆட்டுக்கல்லில் போட்டு அரைத்து எடுங்கள். சிறு சிறுவடைகளாக தட்டி வெயிலில் உலர்த்தி எடுங்கள். இனிப்பும், புளிப்பும், காரமும் கலந்த பிரமாதமான சுவைதரும் வடை இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலந்தைப்பழ வடை, 30 வகையான பழ உணவுகள், 30 Type Fruit Dishes, எடுங்கள், Recipies, சமையல் செய்முறை