பூவன் பழ அப்பம்
தேவையானவை: கோதுமை மாவு - அரை கப், அரிசி மாவு - 2 கப், நன்கு கனிந்த பூவன்பழம் - 2,வெல்லம் - 2 கப், தேங்காய் பல், பல்லாக கீறியது - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்தூள் - 1 டீஸ்பூன், நெய் -அரை கப், எண்ணெய் - அரை கப், ஆப்ப சோடா - 2 சிட்டிகை.
செய்முறை: மாவுகளை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். பூவன்பழத்தைத் துண்டுகளாக்கி, மிக்ஸியில் அடித்துமாவுடன் சேருங்கள். தேங்காய் துண்டுகளை 1 டேபிள்ஸ்பூன் நெய்யில் சிவக்க வறுத்து சேருங்கள்.வெல்லத்தை அரை கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கரைந்து கொதித்ததும் வடிகட்டி சூடாக மாவில்ஊற்றுங்கள். அத்துடன் ஏலக்காய்தூள், ஆப்ப சோடா சேர்த்து நன்கு கரையுங்கள். இட்லி மாவு பதத்தில்இருக்க வேண்டும். குழிப் பணியாரக் கல்லில் நெய், எண்ணெய் கலந்து ஊற்றி மாவு சிறிது ஊற்றி சிறு தீயில்நன்கு வேக விடுங்கள். மறு புறம் திருப்பிவிட்டு வெந்ததும் எடுத்து, சூடாகப் பரிமாறுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பூவன் பழ அப்பம், 30 வகையான பழ உணவுகள், 30 Type Fruit Dishes, மாவு, ஊற்றி, Recipies, சமையல் செய்முறை