ஆப்பிள் அல்வா
தேவையானவை: ஆப்பிள் - 2, பால்கோவா - அரை கப், சர்க்கரை - அரை கப், நெய் - கால் கப்,ஏலக்காய்தூள் - 1 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு சிறியது - 1 டேபிள்ஸ்பூன், பாதாம் (சீவியது) - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: ஆப்பிளை தோல் சீவி துருவிக்கொள்ளுங்கள். நெய்யை காய வைத்து பாதாம், முந்திரியை வறுத்துஎடுத்து கொண்டு ஆப்பிளை சேருங்கள். சிறு தீயில் நன்கு கிளறுங்கள். 10 நிமிடம் கிளறிய பின் கோவா,சர்க்கரை சேர்த்து கிளறுங்கள். இது சற்று இளகி, மீண்டும் சேர்ந்து வரும் பொழுது முந்திரி, பாதாம்,ஏலக்காய்தூள் சேர்த்து கிளறி இறக்குங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆப்பிள் அல்வா, 30 வகையான பழ உணவுகள், 30 Type Fruit Dishes, பாதாம், Recipies, சமையல் செய்முறை