முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » சைவ சித்தாந்த சாத்திரங்கள் » திருக்களிற்றுப்படியார்
திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்

| எல்லா ரறிவுகளின் தாற்பரிய மென்னறிவு செல்லு மிடத்தளவுஞ் சென்றறிந்தேன் - வல்லபடி வாதனையை மாற்றும் வகையிதுவெ மற்றவற்றுள் ஏதமறக் கண்ட திது. |
56 |
| வித்துமத னங்குரமும் போன்றிருக்கு மெய்ஞ்ஞானம் வித்துமத னங்குரமு மெய்யுணரில் - வித்ததனிற் காணாமை யாலதனைக் கைவிடுவர் கண்டவர்கள் பேணாமை யாலற்றார் பேறு. |
57 |
| ஒன்றன் றிரண்டன் றுளதன் றிலதன்று நன்றன்று தீதன்று *நானென்று - நின்ற நிலையன்று நீயன்று நின்னறிவு மன்று தலையன் றடியன்று தான். |
58 |
| *நானன்று |
| செய்யாச் செயலையவன் செய்யாமற் செய்ததனைச் செய்யாச் செயலிற் செலுத்தினா - லெய்யாதே மாணவக வப்பொழுதே வாஞ்சைக் கொடிவளர்க்கும் ஆணவமு *மற்ற தறி. |
59 |
| *அற்றால் அறி |
| ஏதேனுங் காலமுமா மேதேனுந் தேசமுமாம் ஏதேனுந் திக்கா சனமுமாம் - ஏதெனுஞ் செய்தா லொருவலுமாஞ் செய்யாச் செயலதனைக் *செய்யாமற் செய்யும் பொழுது. |
60 |
| *செய்வா னொருவனுமாம் |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், செய்யாச், சித்தாந்த, திருக்களிற்றுப்படியார், சாத்திரங்கள், வித்துமத, இலக்கியங்கள்

