கவிதைத் தொகுப்புகள் - நட்புக்காலம் - பகுதி 3
உனக்கு மடல் எழுத உட்காருகிற போது மட்டும்தான் அப்புறம் எழுதிக் கொள்ளலாம் என்பதற்கான அர்த்தமற்ற காரணங்கள் மிக எளிதாய் எனக்குக் கிடைத்து விடுகின்றன போக்குவரத்து அதிகமுள்ள அந்தச் சாலையோரத்தில் நாம் பேசிக்கொண்டிருந்த பொழுது எத்தனை முறை காதுகளுக்குத் திரும்பினோம் என்று சொல்லிவிட முடியுமா உன்னால் 'எனக்கு மட்டும்' என்று குவிகிற மையத்தையே காம்பாக்கிக் கொண்டு 'வெளி'வாங்கிப் பூக்கிறது நட்பு தேர்வு முடிந்த கடைசி நாளில் நினைவேட்டில் கையொப்பம் வாங்குகிற எவருக்கும் தெரிவதில்லை அது ஒரு நட்பு முறிவிற்கான சம்மத உடன்படிக்கைஎன்று கனவில் கூட என்னைக் கிள்ளிப் பார்க்கும் இந்தச் சுரப்பிகள் உன்னைக் கண்டதும் எப்படி இவ்வளவு இயல்பாய் தூங்கிவிடுகின்றன தாய்ப்பாலுக்கான விதை காதலில் இருக்கிறது தாய்மைக்கான விதை நட்பில் இருக்கிறது காமத்தாலான பிரபஞ்சத்தில் நட்பைச் சுவாசித்தல் அவ்வளவு எளிதன்று பேருந்து நிறுத்தத்திற்குச் சற்றுத் தள்ளிநின்று பேசுகிறவர்கள் காதலர்கள் நிறுத்தத்திலேயே நின்று பேசுகிறவர்கள் நண்பர்கள் அந்த நீண்ட பயணத்தில் என் தோளில் நீயும் உன் மடியில் நானும் மாறிமாறித் தூங்கிக்கொண்டு வந்தோம் தூங்கு என்று மனசு சொன்னதும் உடம்பும் தூங்கிவிடுகிற சுகம் நட்புக்குத்தானே வாய்த்திருக்கிறது |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நட்புக்காலம் - பகுதி 3 - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -