கவிதைத் தொகுப்புகள் - நட்புக்காலம்
- அறிவுமதி உன் பிறந்த நாளுக்கான வாழ்த்து அட்டைகளில் நல்ல வாசகம் தேடித் தேடி ஏமாந்த சலிப்பில் தொடங்கிற்று உனக்கான என் கவிதை நீ என்னிடம் பேசியதை விட எனக்காகப் பேசியதில்தான் உணர்ந்தேன் நமக்கான நட்பை .... உன் பிறந்த நாளுக்கான வாழ்த்து அட்டைகளில் நல்ல வாசகம் தேடித் தேடி ஏமாந்த சலிப்பில் தொடங்கிற்று உனக்கான என் கவிதை நீ என்னிடம் பேசியதை விட எனக்காகப் பேசியதில்தான் உணர்ந்தேன் நமக்கான நட்பை .... அடிவானத்தை மீறிய உலகின் அழகு என்பது பயங்களற்ற இரண்டு மிகச்சிறிய இதயங்களின் நட்பில் இருக்கிறது நீ வயசுக்கு வந்தபோது தடுமாறிய என் முதல் கூச்சத்திற்குக் குட்டு வைத்து நம் நட்பைக் காப்பாற்றியவள் நீ உன்னுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்த பிறகுதான் சாலை ஓர மரங்களிலிருந்து உதிரும் பூக்களின் மௌனத்திலும் நான் இசை கேட்க ஆரம்பித்தேன் பள்ளி மைதானம் காலை வணக்கம் காற்று கலைத்ததைக் கண்களால் மூடினேன் இதயம் சேகரித்துக் கொண்டிருந்த வானத்தில் நீ பறக்கத் துடிக்கையில் அசைந்த புற்களின் நடுவேதான் அமர்ந்திருந்தது நம் நட்பின் முதல் நாள் நம்மைப் பற்றிய ஆசிரியர்களின் சந்தேகங்களுக்குத் துணையாய்ப் புத்தகங்களைப் படபடக்கச் சொல்லிவிட்டு நிதானமாய்ப் பேசிக் கொண்டிருந்தோம் நாம் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நட்புக்காலம் - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -