முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.086.திருவன்பார்த்தான்பனங்காட்டூர்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.086.திருவன்பார்த்தான்பனங்காட்டூர்

7.086.திருவன்பார்த்தான்பனங்காட்டூர்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. இது திருவிளம்பூதூரென்று வழங்குகிறது.
சுவாமிபெயர் - பனங்காட்டீசுவரர்.
தேவியார் - அமிர்தவல்லியம்மை.
872 |
விடையின்மேல் வருவானை அடையில்அன் புடையானை மடையில்வா ளைகள்பாயும் சடையிற்கங்கை தரித்தானைச் |
7.086.1 |
இடபத்தின்மேல் ஏறி வருபவனும், வேதத்தின் பொருளாய் உள்ளவனும், தன்னை அடைந்தால், அங்ஙனம் அடைந்தார்மாட்டு, அன்புடையனாகின்றவனும் ஆகிய, நீர் மடைகளில் வாளை மீன்கள் துள்ளுகின்ற திருவன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற, யாவராலும் அறியவொண்ணாத, சடைமுடியின்கண் கங்கையைத் தாங்கியுள்ள பெருமானை அடையாதவரது அடைவுதான் என்னே!
873 |
அறையும்பைங் கழலார்ப்ப பிறையுங்கங் கையுஞ்சூடிப் பறையுஞ்சங் கொலியோவாப் உறையுமெங் கள்பிரானை |
7.086.2 |
ஒலிக்கின்ற, பசிய பொன்னாலாகிய கழல்கள் கலிப்பவும், அணியப்பட்ட பாம்புகள் சுழன்று ஆடவும், கையில் நெருப்பை ஏந்தி, தலையில் பிறையையும் கங்கையையும் அணிந்து கொண்டு, அடிபெயர்ந்து நின்று நடனம் ஆடுகின்ற பெருமானாகிய, யாவராலும் அறியவொண்ணாமையிற் கள்வனாய், முழங்குகின்ற பறைகளும், சங்குகளும் ஒலித்தல் ஒழியாத, தனது திருவன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் இறைவனை உணராதாரது உணர்வுதான் என்னே!
874 |
தண்ணார்மா மதிசூடித் கெண்ணார்நாண் மலர்கொண்டங் பண்ணார்பா டலறாத பெண்ணாணா யபிரானைப் |
7.086.3 |
குளிர்ச்சி பொருந்திய சிறந்த சந்திரனை முடிமேற் சூடி, கள்வனாய், நெருப்புப்போலும் தனது திருமேனிக்கு உரியனவாக எண்ணுதல் பொருந்திய, அன்று மலர்ந்த மலர்களைக்கொண்டு, மனம் பொருந்தித் துதித்து வழிபடும் அடியார்களது பண்ணிறைந்த பாடலின் ஒலி நீங்காத, தனது திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற, பெண்ணும் ஆணும் ஆய உருவத்தினனாகிய பெருமானைச் சொல்லாதவரது சொல்தான் என்னே!
875 |
நெற்றிக்கண் ணுடையானை குற்றமில் குணத்தானைக் பற்றிப்பாம் பரையார்த்த பெற்றொன்றே றும்பிரானைப் |
7.086.4 |
நெற்றியில் கண்ணை யுடையவனும், திருநீறு பொருந்திய திருமேனியை உடையவனும், குற்றம் இல்லாத இயல்பை யுடையவனும், கோடுதல் இல்லாதவரது மனத்தில் உள்ளவனும், பாம்பைப் பிடித்து அரையிற் கட்டிய கள்வனும் ஆகிய, தனது திருவன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற, எருது ஒன்றின்மேல் ஏறுகின்ற கடவுளைச் சொல்லாதவரது சொல்தான் என்னே!
876 |
உரமென்னும் பொருளானை சிரமென்னுங் கலனானைச் வரமுன்னம்அருள்செய்வான் பரமன்எங் கள்பிரானைப் |
7.086.5 |
'ஞானம்' என்று சொல்லப்படும் பொருளாய் உள்ளவனும், உள்ளம் அன்பால் உருகினால், அதன் கண் நீங்காது தங்குகின்றவனும், தலை ஓடாகிய உண்கலத்தை உடையவனும், சிவந்த கண்களை யுடைய பெரிய இடப வாகனத்தை உடையவனும், தன்னை வழிபடுவார் விரும்பும் வரத்தை விரைந்து அருளுபவனும், மேலானவனும் ஆகிய, திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் இறைவனைத் துதியாதவரது துதிதான் என்னே!
877 |
எயிலார்பொக் கம்மெரித்த வெயிலாய்க்காற் றெனவீசி மயிலார்சோ லைகள்சூழ்ந்த பயில்வானுக் கடிமைக்கட் |
7.086.6 |
பொலிவு நிறைந்த சில மதில்களை எரித்தவனும், எட்டுத் தோள்களையும், மூன்று கண்களையும் உடைய கடவுளும், வெயிலாய்க் காய்ந்து, காற்றாய் வீசி, மின்னாய் மின்னி, தீயாய் எரிந்து நிற்பவனும் ஆகிய, மயில்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவன்பார்த்தான் பனங்காட்டூரில் நீங்காதிருக்கும் பெருமானுக்குச் செய்யும் தொண்டிற் பயிலாதவரது பயிற்சிதான் என்னே!
878 |
மெய்யன்வெண் பொடிபூசும் கையின்மான் மழுவேந்திக் பைகொள்பாம் பரையார்த்த ஐயன்எங் கள்பிரானை |
7.086.7 |
மெய்ப்பொருளாய் உள்ளவனும், வெள்ளிய நீற்றைப் பூசுகின்ற, வேறுபட்ட இயல்கினனும், வேதத்திற்குத் தலைவனும், கையில் மான் மழுக்களை ஏந்துபவனும், காலனது காலத்தை இடைமுரிவித்தவனும், படத்தைக் கொண்ட பாம்பினை அரையின் கண் கட்டியுள்ள கள்வனும், யாவர்க்கும் தலைவனும் ஆகிய தனது திருவன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் பெருமானை அறியாதவரது அறிவுதான் என்னே!
879 |
வஞ்சமற்ற மனத்தாரை பஞ்சிச்சீ றடியாளைப் மஞ்சுற்ற மணிமாட நெஞ்சத்தெங் கள்பிரானை |
7.086.8 |
வஞ்சனையற்ற தூய மனம் உடையவரை என்றும் மறவாதவனும், பிறப்பில்லாதவனும், செம்பஞ்சு ஊட்டிய சிறிய அடிகளை யுடையாளாகிய உமாதேவியை ஒரு பாகத்தில் விரும்பி வைத்துள்ளவனும் ஆகிய, மேகங்கள் பொருந்திய, மணிகள் இழைத்த மாடங்களையுடைய திரு வன்பார்த்தான் பனங்காட்டூரிலும், எங்கள் நெஞ்சத்திலும் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை நினையாதவரது நினைவுதான் என்னே!
880 |
மழையானுந் திகழ்கின்ற உழையாநின் றவருள்க பழையானைப் பனங்காட்டூர் குழைகாதற் கடிமைக்கட் |
7.086.9 |
மேகம்போலும் நிறத்தினனாகிய திருமாலும், மலரில் இருப்பவனாகிய பிரமனும் என்ற இருவரும் பணி செய்கின்றவராய் நினைந்து நிற்க, உயர்ந்த வானத்தினும் உயர்ந்து நிற்பவனும், எல்லாரினும் பழையவனும் ஆகிய, திரு வன்பார்த்தான் பனங்காட்டூரைத் தனது ஊராகக் கொண்டு விளங்குகின்ற, குழையணிந்த காதினையுடைய பெருமானுக்குத் தொண்டுபடுதலில் மனம் நெகிழாத வரது மனநெகிழ்ச்சிதான் என்னே!
881 |
பாரூரும் பனங்காட்டூர்ப் சீரூருந் திருவாரூர்ச் ஆரூரன் னடித்தொண்டன் ஊரூரன் உரைசெய்வார் |
7.086.10 |
தனது பெயா நிலம் முழுதும் பரவிய திருவன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற பவளம் போலும் உருவத்தையுடைய பெருமானை, புகழ்மிக்க திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானது பெயரைத் தலையில் வைத்துள்ள, அப்பெருமானுக்கு அடித்தொண்டு செய்யும் அடியவனாகிய, அவன் அடிக்கீழ்க் கிடக்கும் நாய் போலும் நம்பியாரூரன் பாடிய இப்பாடல்கள், அவரவர் ஊரின்கண் உரைசெய்வாரும் சிவலோகத்தில் உயர்வு பெற்று விளங்குவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 84 | 85 | 86 | 87 | 88 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவன்பார்த்தான்பனங்காட்டூர் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - எழுந்தருளியிருக்கின்ற, பனங்காட்டூரில், வன்பார்த்தான், திருவன்பார்த்தான், பனங்காட்டூர், பெருமானை, படிறன்றன், உள்ளவனும், பொருந்திய, எங்கள், கள்பிரானை, உடையவனும், பனங்காட்டூர்ப், யுடையவனும், சொல்தான், பரையார்த்த, கள்வனும், நிறைந்த, திகழ்கின்ற, உயர்வானத், போலும், தலைவனும், செய்யும், சொல்லாதவரது, நிற்பவனும், கடிமைக்கட், கள்வனாய், யாவர்க்கும், பொருளாய், பொருளானை, வேதத்தின், திருமுறை, திருச்சிற்றம்பலம், யாவராலும், கையில், திருமேனிக், பேசாதார், திருவன்பார்த்தான்பனங்காட்டூர், கொண்டு, தலையில், பேச்சென்னே