முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.077.திருவையாறு
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.077.திருவையாறு

7.077.திருவையாறு
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொற்சோதியீசுவரர்.
தேவியார் - அறம் வளர்த்த நாயகியம்மை.
781 |
பரவும் பரிசொன் றறியேன்நான் இரவும் பகலும் நினைந்தாலும் கரவில் அருவி கமுகுண்ணத் அரவந் திரைக்கா விரிக்கோட்டத் |
7.077.1 |
கரவின்றி வருகின்ற நீர்ப்பெருக்குக் கமுகங் குலையை விழுங்க, தென்னை மரங்களின் குலைக்கீழ் உள்ள கரும்பாலைகளின் ஓசையோடே கூடி ஒலிக்கின்ற அலைகளையுடைய, காவிரியாற்றங் கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள், யான் உம்மைத் துதிக்கும் முறையை இயற்கையில் சிறிதும் அறியாதேன் ஆகலின், முன்னமே உம்பால் வந்து வழிபடாதொழிந்தேன்; இரவும் பகலும் உம்மையே நினைவேன்; என்றாலும், அழுந்த நினையமாட்டேன்; ஓலம்!
782 |
எங்கே போவே னாயிடினும் சங்கை யொன்று மின்றியே கங்கை சடைமேற் கரந்தானே தங்குந் திரைக்கா விரிக்கோட்டத் |
7.077.2 |
அடியேன் எங்கே செல்வேனாயினும், முதல் நாளும் இறுதி நாளும் ஒரு பெற்றியவாக, சிறிதும் ஐயம் இன்றி, அங்கே வந்து என் மனத்தில் இருப்பீராய், சடைமேற் கங்கையும், கையில் மானின் ஆண் கன்றும், சுடுகின்ற மழுவுமாய்த் தங்குகின்ற, அலைகளையுடைய, காவிரியாற்றங்கரைக் கண் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள் ஓலம்!
783 |
மருவிப் பிரிய மாட்டேன் நான் பருவி விச்சி மலைச்சாரற் குருவி யோப்பிக் கிளிகடிவார் தரவந் திரைக்கா விரிக்கோட்டத் |
7.077.3 |
நீர், பரந்து பெருகி தினை விதைக்கப்பட்ட மலைச்சாரலில் பல பிரிவுகளாய்க் காணப்பட்டு, யானைகளைப் புரட்டி, புனங்களில் குருவிகளையும் கிளிகளையும் ஓட்டித் தினையைக் காக்கும் மகளிரது கூந்தல்மேல் அணிந்த மாலைகளை ஈர்த்துக் கொண்டு ஓடுதலைச் செய்தலால் அழகிய அலைகளை உடைத்தாய் நிற்கும், காவிரிக் கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள், யான், சிலர்போல, உறுவது சீர் தூக்கி, உற்ற வழிக்கூடி, உறாதவழிப் பிரியமாட்டேன் ; என்றும் உம் வழியிலே நின்று விட்டேன் ; இனி ஒருகாலும் இந்நிலையினின்றும் நீங்கேன் ; ஓலம் !
784 |
பழகா நின்று பணிசெய்வார் இகழா துமக்காட் பட்டோர்க்கு குழகா வாழைக் குலைதெங்கு அழகார் திரைக்கா விரிக்கோட்டத் |
7.077.4 |
வாழைக் குலைகளையும், தென்னங் குலைகளையும் அழகாகக் கொணர்ந்து கரைமேல் எறிதலால் அழகு நிறைந்துள்ள அலைகளையுடைய, காவிரி யாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள், உமக்கு அடிமைப்பட்டவர் முன்னே, நீர் ஒற்றை ஆடையையே அரையில் பொருந்த உடுத்து நிற்றலால், உம்மை அணுகி நின்று உமக்குப் பணி செய்பவர், அதனால்பெற்ற பயன் ஒன்றையும் யான் அறிகின்றிலேன் ; ஓலம்!
785 |
பிழைத்த பிழையொன் றறியேன்நான் மழைக்கண் நல்லார் குடைந்தாட கழைக்கொள் பிரசங் கலந்தெங்குங் அழைக்குந் திரைக்கா விரிக்கோட்டத் |
7.077.5 |
மழைபோலும் கண்களையுடைய அழகியராகிய மகளிர் நீரில் மூழ்கி விளையாட, மலையும் நிலமும் இடம் கொள்ளாதபடி பெருகி, மூங்கிலிடத்துப் பொருந்திய தேன் பொருந்தப்பெற்று, வயல்களில் எல்லாம் நிறைந்து, வரம்புகளின் மேல் ஏறி ஒலிக்கின்ற அலைகளையுடைய, காவிரி யாற்றங் கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாகிய உடைய அடிகேள், அடியேன் உமக்குச் செய்த குற்றம் ஒன்று உளதாக அறிந்திலேன்; யான் அறியாதவாறு நிகழ்ந்த பிழை உளதாயின், அது நீங்க அருள்செய்; ஓலம்!
786 |
கார்க்கொள் கொன்றை சடைமேலொன் மூர்க்கர் புரமூன் றெரிசெய்தாய் வார்கொள் அருவி பலவாரி டார்க்குந் திரைக்கா விரிக்கோட்டத் |
7.077.6 |
கார்காலத்தைக் கொண்ட கொன்றைமலரின் மாலை யொன்றைச் சடைமேல் உடையவனே, விடையை ஏறுபவனே, அறிவில்லாதவரது ஊர்கள் மூன்றைச் சிரிப்பினால் எரித்தவனே, ஒழுகுதலைக்கொண்ட பல அருவிகள் வாரிக் கொண்டு வந்த மாணிக்கங்களையும் முத்துக்களையும் கைக்கொண்டு ஆரவாரிக்கின்ற அலைகளையுடைய, காவிரி யாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை நினதாக உடைய அடிகேள், எல்லாவற்றுக்கும் முன்னுள்ளவனும் நீயே; பின்னுள்ளவனும் நீயே; எப்பொருட்கும் முதல்வனும் நீயே; ஓலம்!
787 |
மலைக்கண் மடவாள் ஒருபாலாய்ப் சிலைக்கொள் கணையால் எயில்எய்த மலைக்கொள் அருவி பலவாரி டலைக்குந் திரைக்கா விரிக்கோட்டத் |
7.077.7 |
மலையிடத்துத் தோன்றிய மங்கையை ஒரு பாகத்திற் கொண்டு, உலக முழுவதும் பிச்சைக்குத் திரிபவனே, வில்லிடத்துக் கொண்ட அம்பினால் முப்புரத்தை அழித்த, சிவந்த கண்களையுடைய இடபத்தை யுடையவனே, மலையிடத்துப் பெருகிய பல அருவிகள் வாரிக்கொண்டு வந்த மாணிக்கங்களையும் முத்துக்களையும் கைக்கொண்டு இருபக்கங்களையும் அரிக்கின்ற அலைகளை உடைய, காவிரியாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை நினதாக உடைய அடிகேள், இறைவனாவான் நீயே; ஓலம்!
788 |
போழும் மதியும் புனக்கொன்றை சூழும் அரவச் சுடர்ச்சோதீ வாழும் அவர்கள் அங்கங்கே ஆழுந் திரைக்கா விரிக்கோட்டத் |
7.077.8 |
பகுக்கப்பட்ட சந்திரனும், புனங்களில் உள்ள கொன்றை மலரும், நீரும் பொருந்திய முடியையுடைய புண்ணிய வடிவினனே, சுற்றி ஊர்கின்ற பாம்பை அணிந்த, சுடர்களையுடைய ஒளி வடிவினனே, உன்னை வணங்குகின்றவர்களது துன்பம் நீங்குமாறும், ஆங்காங்கு வாழ்கின்றவர்கள் விருப்பத்தினால் வைத்த உள்ளங்கள் அவர்களைச் செலுத்தி மூழ்குவிக்குமாறும், மறித்து வீசுகின்ற அலைகளையுடைய, காவிரியாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை நினதாக உடைய அடிகேள், ஓலம்!
789 |
கதிர்க்கொள் பசியே யொத்தேநான் எதிர்த்து நீந்த மாட்டேன்நான் அதிர்க்குந் திரைக்கா விரிக்கோட்டத் |
7.077.9 |
என் தந்தை தந்தைக்கும் பெருமானே, மேகங்கள் துளிகளைச்சிதறி மழையைப் பொழிதலால் வெள்ளம் நுரையைச் சிதறிப் பரந்து வருகையினாலே முழங்குகின்ற அலைகளையுடைய, காவிரியாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை நுமதாக உடைய அடிகேள், நான் உம்மை, பசியுடையவன் நெற்கதிரைக் கண்டாற் போலக் கண்டேன்; அவன் உணவைக் கண்டாற்போலக் காணேனாயினேன்; நீரின் வேகத்தை எதிர்த்து நீந்தி அக்கரையை அடைய நான் வல்லேனல்லேன்; ஓலம்!
790 |
கூசி அடியார் இருந்தாலுங் தேச வேந்தன் திருமாலும் தேசம் எங்கும் தௌந்தாடத் வாசந் திரைக்கா விரிக்கோட்டத் |
7.077.10 |
நாடெங்கும் உள்ளவர்கள் ஐயமின்றி வந்து மூழ்குமாறு, தௌந்த நீராகிய அருவியைக் கொணர்ந்து எங்கும் தங்குகின்ற அலைகளையுடைய காவிரியாற்றங் கரைக்கண் உள்ள திருவையாற்றை நுமதாக உடைய அடிகேள், அடியார் தாம் தம் குறையைச் சொல்ல வெள்கியிருந்தாலும், நீரும் அவர்தம் குறையை அறிந்து தீர்க்கும் குணம் சிறிதும் இல்லீர்; அவ்வாறு தீர்த்தல் வேண்டும் என்னும் எண்ணமும் இல்லீர்; உம்மை, உலகிற்குத் தலைவனாகிய திருமாலும், தாமரை மலர்மேல் உள்ள பிரமனும் என்னும் இவர்தாமும் காண்கிலர்; பிறர் எங்ஙனங் காண்பார்! ஓலம்!
791 |
கூடி அடியார் இருந்தாலும் ஊடி இருந்தும் உணர்கிலேன் தேடி எங்குங் காண்கிலேன் ஆடுந் திரைக்கா விரிக்கோட்டத் |
7.077.11 |
அசைகின்ற அலைகளையுடைய, காவிரியாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள், அடியார் உம்மைவிட்டு நீங்காது கூடியே இருந்தாலும் நீர், அவர்க்கு அருள்பண்ணும் குணம் சிறிதும் இல்லீர், 'அருள் பண்ணுதல் வேண்டும் என்னும் எண்ணமும் இல்லீர்; அது நிற்க, நீர் என்பால் பிணக்குக் கொண்டிருந்தும், யான் அதனை உணர்ந்திலேன்; உம் அடியேனும், 'நம்பியாரூரன்' என்னும் பெயரினேனும் ஆகிய யான் உம்மை இங்குப் பலவிடத்துந் தேடியும் காண்கின்றிலேன்; அதனால், உம்மை யான் நேர்படக்கண்ட திருவாரூரையே நினைப்பேனாயினேன்; ஓலம்!
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 75 | 76 | 77 | 78 | 79 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவையாறு - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - அடிகேளோ, திருவையாற்றை, அடிகேள், விரிக்கோட்டத், திரைக்கா, அலைகளையுடைய, காவிரியாற்றங்கரைக்கண், கரைக்கண், இல்லீர், என்னும், அடியார், சிறிதும், கொண்டு, நினதாக, கொணர்ந்து, நின்று, காவிரி, முத்தும், மணியும், பலவாரி, கைக்கொண்டு, பொன்னுங்கொண், முத்துக்களையும், அருவிகள், மாணிக்கங்களையும், குணமொன், எங்கும், மலர்மேல், வேண்டும், எண்ணமும், இருந்தாலும், திருமாலும், குறிப்பில்லீர், எதிர்த்து, வடிவினனே, நுமதாக, விடையாய், றில்லீர், நீரும், குலைகளையும், உம்மைத், காவிரியாற்றங், சடைமேற், அடியேன், நாளும், ஒலிக்கின்ற, மாட்டேன்நான், திருச்சிற்றம்பலம், திருமுறை, றறியேன்நான், இரவும், பகலும், தங்குகின்ற, பரந்து, யாற்றங்கரைக்கண், திருவையாறு, மலையும், கண்களையுடைய, பொருந்திய, கரைமேல், வாழைக், பெருகி, புனங்களில், அணிந்த, அலைகளை, கொன்றை