முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.054.திருப்புள்ளிருக்குவேளூர்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.054.திருப்புள்ளிருக்குவேளூர்

6.054.திருப்புள்ளிருக்குவேளூர்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் - வைத்தியநாதர்.
தேவியார் - தையல்நாயகியம்மை.
2626 | ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு நீண்டானை நெடுங்களமா நகரான் தன்னை கீண்டானைக் கேதாரம் மேவி னானைக் பூண்டானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் |
6.054.1 |
அடியேனை அடிமையாகக்கொண்டு ஆண்டவனாய், திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும் அறியா வண்ணம் அனற்பிழம்பாய் நீண்டவனாய், நெடுங்களக் கோயிலில் உறைவானாய், சக்கரப்படையால் பேராற்றலுடைய சலந்தரனுடைய மார்பினைப் பிளந்தவனாய், கேதாரத்தில் உறைவோனாய், ஒரு காலத்தும் அழிதல் இல்லாதவனாய், ஒளி வீசும் புள்ளிகளை உடைய பாம்போடு எலும்பினை அணிகலனாகப் பூண்டவனாகிய புள்ளிருக்கு வேளூர்ப் பெருமானைத் துதிக்காமல் பலநாள்களை வீணாகக் கழித்து விட்டேனே.
2627 | சீர்த்தானைச் சிறந்தடியேன் சிந்தை யுள்ளே கூர்த்தானைக் கொடுநெடுவேற் கூற்றந் தன்னைக் பேர்த்தானைப் பிறப்பிலியை இறப்பொன் றில்லாப் போர்த்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் |
6.054.2 |
அடியேனுடைய உள்ளத்தில் சிறப்பாகக் கிட்டினவனாய் விளங்குகின்ற சிவனாகிய தேவதேவனாய், மிக நுண்ணியனாய், கொடிய நீண்ட வேலை ஏந்தி வந்த கூற்றுவனைத் திருவடியால் உதைத்து, முனிவனாகிய மார்க்கண்டேயன் கொண்ட யம பயத்தைப் போக்கியவனாய், பிறப்பு இறப்பு இல்லாத தலைவனாய், யானைத் தோலை விரும்பிப் போர்த்தவனாய் உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.
2628 | பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாள் எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை புத்தேளைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் |
6.054.3 |
அடியேன் பக்தியோடு வணங்கித் தன்னைப் பலநாளும் பாமாலைகளால் போற்றுமாறு பழக்கியவனாய், எல்லாத்தெய்வங்களும் துதிக்கும் தெய்வமாய், என் தலைவனாய், என் உள்ளத்து ஊறும் தேன் அமுதம் பசுப்பால், இனிய கரும்பு என்பன போன்று இனியனாய்ப் பகைவரை அழிப்பவனாய், ஆதிக் கடவுளாய் உள்ளபுள்ளிருக்கு வேளூரானைப் போற்றாமல் ஆற்ற நாள் போக்கினேனே.
2629 | இருளாய வுள்ளத்தி னிருளை நீக்கி தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போற் அருளானை ஆதிமா தவத்து ளானை பொருளானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் |
6.054.4 |
என் இருண்ட உள்ளத்திலுள்ள அஞ்ஞானத்தைப் போக்க அறிவற்ற என் துயரங்களையும் தீவினைகளையும் போக்கி, நான் கடைத்தேறுமாறு என் தௌவற்ற மனத்தில் தௌவு பிறப்பித்து, தன்னைப் போலச் சிவலோகத்தின் வழியை அறியும் உள்ளத்தை வழங்கிய அருளாளனாய், தொடக்கத்திலிருந்தே பெரிய தவத்தில் நிலைபெற்றிருப்பவனாய், நான்கு வேதங்கள் ஆறு அங்கங்கள் இவற்றிற்கு அப்பாற்பட்ட பொருளாய் உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாமல் ஆற்ற நாள் போக்கினேனே.
2630 | மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு தன்னுருவின் மூன்றாய்த்தாழ் புனலின் நான்காய்த் மன்னுருவை வான்பவளக் கொழுந்தை முத்தை பொன்னுருவைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் |
6.054.5 |
மின்னல் போன்று பிரகாசிக்கும் உருவினனாய், வானத்தில் ஒலி என்றஒரே பண்பாய், வீசும் காற்றில் ஒலி ஊறு என்ற இருபண்புகளாய், சிவந்த நெருப்பில் ஒளி, ஊறு, ஒலி என்ற முப்பண்புகளாய், பள்ளம் நோக்கிச் செல்லும் நீரில் சுவை, ஒளி, ஊறு, ஒலி என்ற நான்கு பண்புகளாய், நிலத்தில் நாற்றம், சுவை, ஒளி, ஊறு, ஒலி என்ற ஐந்து பண்புகளாய்க் குறையாத புகலிடமாக நிலைபெற்ற பொருளாய், பவளக் கொழுந்தாய், முத்தாய், வளர் ஒளியாய், வயிரமாய், பொன்போலும் நிறமுடைய புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.
2631 | அறையார்பொற் கழலார்ப்ப அணியார் தில்லை கறையார்மூ விலைநெடுவேற் கடவுள் தன்னைக் இறையானை என்னுள்ளத் துள்ளே விள்ளா பொறையானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் |
6.054.6 |
பொன்னாலாகியகழல் ஒலிக்கத் தில்லை அம்பலத்துள் கூத்தாடும் அழகனாய், விடக்கறை பொருந்திய முத்தலைச் சூலப்படையனாய்க் கடலை அடுத்த நாகைக் காரோணத்தை உறைவிடமாக விரும்பியவனாய், என் உள்ளத்துள்ளே தங்கி நீங்காது இருந்தவனாய், ஏழுலகப் பாரத்தையும் தாங்குபவனாய், உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நான் போக்கினேனே.
2632 | நெருப்பனைய திருமேனி வெண்ணீற் றானை விருப்பவனை வேதியனை வேத வித்தை இருப்பவனை யிடைமருதோ டீங்கோய் நீங்கா பொருப்பவனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் |
6.054.7 |
நெருப்பினை ஒத்த சிவந்த திருமேனியில் வெண்ணீறு அணிந்தவனாய், என் உள்ளத்தினுள்ளே நீங்காது விரும்பி இருப்பவனாய், வேதம் ஓதுபவனாய், வேதத்தை நன்கு உணர்ந்தவனாய், வெண்காடு, துருத்தி, இடைமருது, ஈங்கோய்மலை இவற்றை நீங்காத இறையவனாய், என்னை ஆட்கொண்ட, கயிலாய மலையை உறைவிடமாகக் கொண்ட புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.
2633 | பேரா யிரம்பரவி வானோ ரேத்தும் வாராத செல்வம் வருவிப் பானை தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத் போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் |
6.054.8 |
ஆயிரம் திருநாமங்களை முன்னின்று உச்சரித்துத் தேவர்கள் துதிக்கும் பெருமானாய்த் தன்னை விடுத்து நீங்காத அடியவர்களுக்கும் என்றும் பிறப்பெடுக்கவாராத வீடுபேற்றுச் செல்வத்தை வழங்குபவனாய், மந்திரமும் அவற்றைச் செயற்படுத்தும்முறைகளும் மருந்துமாகித் தீராத நோய்களைப் போக்கியருள வல்லானாய், திரிபுரங்கள் தீப்பற்றிச் சாம்பலாகுமாறு திண்ணிய வில்லைக் கைக்கொண்டு போரிடுதலில் ஈடுபட்டவனான புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.
2634 | பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் தன்னைப் நண்ணியனை யென்னாக்கித் தன்னா னானை கண்ணியனைக் கடியநடை விடையொன் றேறுங் புண்ணியனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் |
6.054.9 |
எல்லாப் பொருள்களையும் ஆக்கியவனாய்ப் பார்வதிபாகனாய், பரவிய சடையிலே கங்கையை மறைத்தவஞ்சகனாய், எனக்குத் துணையாய் உடன் நின்று என்னைத் திருத்தித் தன்னிடத்தினின்றும் நீங்காது அணைத்துக்கொண்டவனாய், நான் மறையின் சிறந்த பொருளாய், குளிர்ந்த வெண்பிறையை முடிமாலையாகச் சூடியவனாய், விரைந்து செல்லும் காளையை இவர்ந்த உலக காரணனாய், நாரணனாய், தாமரையில் தங்கும் பிரமனாய் உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.
2635 | இறுத்தானை இலங்கையர்கோன் சிரங்கள் பத்தும் அறுத்தானை அடியார்தம் அருநோய் பாவம் கறுத்தானைக் கண்ணழலாற் காமன் ஆகங் பொறுத்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் |
6.054.10 |
இராவணனுடைய பத்துத் தலைகளையும் நசுக்கியவனாய், பின் அவன் எழுப்பிய நரம்பின் இசை கேட்டு மகிழ்ந்தவனாய், அடியார்களுடைய கொடிய நோய்களையும் தீவினைகளையும் போக்கியவனாய், அலைவீசும் கடலின் விடமுண்ட நீல விடமுண்ட நீல கண்டனாய், நெற்றிக்கண் தீயினால் மன்மதனுடைய உடலை எரித்தவ னாய், தீப்பொறி கக்கும் மழுப்படையையும் மானையும் அழகிய கைகளில் கொண்டவனாய், உள்ளபுள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 52 | 53 | 54 | 55 | 56 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்புள்ளிருக்குவேளூர் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - புள்ளிருக்கு, ஆற்றநாள், போக்கி, ரானைப்போற்றாதே, வேளூரானைப், போக்கினேனே, போற்றாதே, பொருளாய், நீங்காது, உள்ளபுள்ளிருக்கு, நான்கு, தீவினைகளையும், போற்றாமல், சிவந்த, விடமுண்ட, நீங்காத, செல்லும், போன்று, தன்னைப், போக்கியவனாய், சிந்தை, வீசும், திருச்சிற்றம்பலம், தலைவனாய், திருமுறை, அடியேனை, துள்ளே, என்னுள்ளத், திருப்புள்ளிருக்குவேளூர், துதிக்கும்