முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 4.046.திருவொற்றியூர்
நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 4.046.திருவொற்றியூர்

4.046.திருவொற்றியூர்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாணிக்கத்தியாகர்.
தேவியார் - வடிவுடையம்மை.
454 | ஓம்பினேன் கூட்டை வாளா காம்பிலா மூழை போலக் பாம்பின்வாய்த் தேரை போலப் ஓம்பிநீ யுய்யக் கொள்ளா |
4.046.1 |
உள்ளத்துள்ளே நேர்மைக்குப் புறம்பான வளைவான செய்திகளைத் தேக்கி வைத்துக் கொண்டு இவ்வுடம்பினைப் பயனற்ற வகையில் பாதுகாத்துக்கொண்டு, காம்பு இல்லாத அகப்பை முகக்கக் கருதியதனை முகக்க இயலாதவாறுபோல, உன் திருவருள் துணை இல்லாததனால் நினைத்த பேறுகளைப் பெற இயலாதேனாய்ப் பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை விரைவில் தான் அழியப் போவதனை நினையாது வேறு என்னென்னவோ எல்லாம் நினைப்பதுபோல எண்ணாத பல எண்ணங்களையும் எண்ணி நெஞ்சம் புண்ணாகின்ற அடியேனை ஓம்பி அடியேன் உய்யும் வண்ணம் ஒற்றியூர்ப் பெருமானாகிய நீ அருளவேண்டும்.
455 | மனமெனுந் தோணி பற்றி சினமெனுஞ் சரக்கை யேற்றிச் மனனெனும் பாறை தாக்கி துனையுனு முணர்வை நல்கா |
4.046.2 |
ஒற்றியூர் உடைய கோவே! மனம் என்னும் தோணியைப் பொருந்தி, அறிவு என்று சொல்லப்படும் சவள் தண்டை ஊன்றிச் சினம் எனும் சரக்கை அத்தோணியில் ஏற்றிப் பாசக்கடலாகிய பரப்பில் அத்தோணியைச் செலுத்தும்போது மன்மதன் என்ற பாறை தாக்க அத்தோணி கீழ்மேலாகக் கவிழும்போது உன்னை அறிய இயலாதேனாய் வருந்துவேன். அப்போது அடியேன் என்னை மறந்து உன்னையே தியானிக்கும் அறிவை அடியேனுக்கு விரும்பி அளிப்பாயாக.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 44 | 45 | 46 | 47 | 48 | ... | 113 | 114 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவொற்றியூர் - நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - அடியேன், சரக்கை, முகக்க, திருச்சிற்றம்பலம், திருமுறை, திருவொற்றியூர்