முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.070.திரு ஈங்கோய்மலை
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.070.திரு ஈங்கோய்மலை

1.070.திரு ஈங்கோய்மலை
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
754 |
வானத்துயர்தண் மதிதோய்சடைமேன் தேனொத்தனமென் மொழிமான்விழியாள் கானத்திரவி லெரிகொண்டாடுங் ஏனத்திரள்வந் திழியுஞ்சாரல் |
1.070.1 |
வானத்தில் உயர்ந்து விளங்கும் குளிர்ந்த சந்திரன் தோயும் சடைமுடிமேல் ஊமத்தம் மலர்களைச் சூடித் தேன் போன்ற இனிய மொழிகளையும் மான் விழிபோலும் கண்களையுமுடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டு சுடுகாட்டில் இரவில் எரியேந்தி ஆடும் இறைவர் உலக மக்கள் உணர்ந்து போற்றுமாறு பன்றிகள் பலகூடி இறங்கிவரும் சாரலையுடைய திருவீங்கோய்மலையில் எழுந்தருளியுள்ளார்.
755 |
சூலப்படையொன் றேந்தியிரவிற் கோலச்சடைக டாழக்குழல்யாழ் பாலொத்தனைய மொழியாள்காண ஏலத்தொடுநல் லிலவங்கமழும் |
1.070.2 |
முத்தலைச் சூலம் ஒன்றைத்தமது படைக்கலனாக ஏந்தி இரவில் சுடுகாட்டை இடமாகக் கொண்டு அழகிய சடைகள் தாழ்ந்து தொங்கவும், குழல் யாழ்மொந்தை ஆகிய இசைக் கருவிகள் முழங்கவும், பால் போன்று இனிய மொழியினை உடைய பார்வதி தேவி காண ஆடும் பரமர் ஏலம் நல்ல இலவங்கம் முதலியன கமழும் திருவீங்கோய்மலையின்கண் எழுந்தருளியுள்ளார்.
756 |
கண்கொணுதலார் கறைகொண்மிடற்றார் விண்கொண்மதிசேர் சடையார்விடையார் பெண்கொள்திருமார் பதனிற்பூசும் எண்குமரியுந் திரியுஞ்சாரல் |
1.070.3 |
கண் ஒன்றைக்கொண்ட நுதலினரும், விடக்கறை பொருந்திய கண்டத்தினரும், யானையின் தோலை உரித்துப் போர்த்த வரும், வானில் விளங்கும் மதியைச் சூடிய சடையினரும், விடைக்கொடியினரும், ஒருபாகமாக உமையம்மையைக் கொண்டுள்ளவரும் திருவெண்ணீற்றைத் திருமேனியின் மார்பகத்தே பூசுபவரும் ஆகிய எமை ஆள்பவராகிய பெருமான் கரடிகளும், சிங்கங்களும் திரியும் சாரலை உடைய திருவீங்கோய் மலையில் எழுந்தருளியுள்ளார்.
757 |
மறையின்னிசையார் நெறிமென்கூந்தன் குறைவெண்பிறையும் புனலுந்நிலவுங் பறையுங்குழலுங் கழலுமார்ப்பப் இறைவர்சிறைவண் டறைபூஞ்சாரல் |
1.070.4 |
சிறகுகளையுடைய வண்டுகள் ஒலிக்கும் அழகிய சாரலை உடைய திருவீங்கோய் மலை இறைவர் வேதங்களை இனிய இசையோடு பாடுபவர். வளைவுகளோடு கூடிய மென்மையான கூந்தலையுடைய மலையரையன் மகளாகிய பார்வதி தேவியோடு, கலைகள் குறைந்த வெண்மையான பிறையும் கங்கையும் விளங்கும் குளிர்ந்த மென்மையான சடைகள் தாழ, பறை குழல் இவற்றோடு காலிற் கட்டிய கழலும் ஆரவாரிக்கப் பிணங்களை எரிக்கும் சுடுகாட்டுள் எரியேந்தி ஆடுபவராவார்.
758 |
நொந்தசுடலைப் பொடிநீறணிவார் கந்தமலர்கள் பலவுந்நிலவு பந்தண்விரலாள் பாகமாகப் எந்தம்மடிகள் கடிகொள்சாரல் |
1.070.5 |
நறுமணங்களைக் கொண்டுள்ள சாரலையுடைய திருவீங்கோய்மலை இறைவர், இறந்தார் உடலை எரிக்கும் சுடலையில் விளைந்த சாம்பற் பொடியைத் திருநீறாக அணிந்தவர். நெற்றியைச் சார்ந்துள்ள விழியையுடையவர். மணம் பொருந்திய மலர்கள் பலவும் விளங்கும் மணங்கமழ் செஞ்சடைகள் தாழ்ந்து தொங்கப் பந்து சேரும் கைவிரல்களையுடைய உமையம்மை ஒரு பாகமாக விளங்கச் சுடுகாட்டில் எரியாடுபவர்.
759 |
நீறாரகல முடையார்நிரையார் ஆறார்சடையா ரயில்வெங்கணையா சீறாவெரிசெய் தேவர்பெருமான் ஏறார்கொடியா ருமையாளோடும் |
1.070.6 |
உமையம்மையோடு திருவீங்கோய்மலையில் எழுந்தருளியுள்ள இறைவர் திருநீறு அணிந்த மார்பினையுடையவர். சரஞ்சரமாக வரிசையாய் மலரும் கொன்றை மாலை பாம்பு கங்கை ஆகியவற்றை அணிந்த சடைமுடியை உடையவர். கூரிய கொடிய கணையால் அசுரர்களின் முப்புரங்களையும் சினந்து எரித்த தேவர் தலைவர். சிவந்த கண்களையும் வலிமையையும் உடைய வெண்மையான விடையேற்றுக் கொடியினை உடையவர்.
760 |
வினையாயினதீர்த் தருளேபுரியும் நனையார்முடிமேன் மதியஞ்சூடு தனையார்கமல மலர்மேலுறைவான் எனையாளுடையா னுமையாளோடும் |
1.070.7 |
உமையம்மையோடு திருவீங்கோய்மலையில் எழுந்தருளி விளங்கும் இறைவர், வினைகளானவற்றைத் தீர்த்து அருளையே வழங்கும் விகிர்தர். விரிந்து தழைத்த கொன்றை அரும்புகள் சூடிய முடிமீது பிறைமதியையும் சூடும் நம்பர். அழகு நிறைந்ததும் தலைமை உடையதுமான தாமரை மலர்மேல் உறையும் பிரமனின் தலையோட்டுடன் அனலையும் ஏந்தி என்னை அடிமையாகக் கொண்டருளுபவர்.
761 |
பரக்கும்பெருமை யிலங்கையென்னும் அரக்கர்க்கிறைவன் முடியுந்தோளு நெருக்கியடர்த்து நிமலாபோற்றி இரக்கம்புரிந்தா ருமையாளோடும் |
1.070.8 |
உமையம்மையாரோடு எழுந்தருளியுள்ள ஈங்கோய்மலை இறைவர், எங்கும் பரவிய பெருமையை உடைய இலங்கை என்னும் நகரில் புகழோடு விளங்கிய அரக்கர்களுக்குத் தலைவனாகிய இராவணன் தலைகளையும் தோள்களையும் தமது அழகு பொருந்திய கால் விரலால் நெருக்கி அடர்த்து, பின் அவன் நிமலா போற்றி என்று ஏத்த இரக்கம் காட்டி அருள்புரிந்தவராவார்.
762 |
வரியார்புலியி னுரிதோலுடையான் பிரியாதுடனா யாடல்பேணும் அரியோடயனு மறியாவண்ண டெரியாய்நிமிர்ந்த வெங்கள்பெருமான் |
1.070.9 |
ஈங்கோய்மலை இறைவர் வரிகளோடு கூடிய புலித்தோலை உடையாகக் கட்டியவர். மலையரையன் மகளாகிய பார்வதி தேவியோடு பிரியாது அவளுடனாக இருந்து ஆடுதலை விரும்பும் தலைமை சான்றவர். தம் திருமேனியின் அடிமுடிகளைத் திருமாலும் நான்முகனும் அறியாதபடி அளவற்ற பெருமை உடையவராய் எரி உருவத்தோடு ஓங்கிநின்ற எங்கள் பெருமான் ஆவார்.
763 |
பிண்டியேன்று பெயராநிற்கும் மண்டைகலனாக் கொண்டுதிரியு உண்டிவயிறா ருரைகள்கொள்ளா இண்டைச்சடையா னிமையோர்பெருமான் |
1.070.10 |
அருகதேவன் வீற்றிருக்கும் அசோகமரம் என அம்மரத்தின் பெருமை கூறிப்பெயர்ந்து செல்லும் மாறுபட்ட சமயநெறியில் நிற்கும் சமணர்களும், பிச்சை ஏற்கும் மண்டை என்னும் பாத்திரத்தைக்கையில் ஏந்தித் திரியும் அறிவற்ற புத்தரும் உண்டு பருத்த வயிற்றினராய்க் கூறும் உரைகளைக் கொள்ளாது, உமையம்மையாரோடு உடனாய், இண்டை சூடிய சடைமுடியினனாய், இமையோர் தலைவனாய், ஈங்கோய் மலையில் எழுந்தருளியுள்ள எம்பெருமானைச் சென்று வழிபடுவீராக.
764 |
விழவாரொலியு முழவுமோவா அழலார்வண்ணத் தடிகளருள்சே எழிலார்சுனையும் பொழிலும்புடைசூழ் கழல்சேர்பாடல் பத்தும்வல்லார் |
1.070.11 |
திருவிழாக்களின் ஓசையும் முழவின் ஓசையும் நீங்காத வேணுபுரம் என்னும் சீகாழிப் பதியில் அழல் வண்ணனாகிய சிவபிரானின் அருள்சேரப் பெற்ற அழகிய ஞானசம்பந்தன் எழிலார்ந்த சுனையும் பொழிலும் புடைசூழ்ந்து விளங்கும் திருவீங்கோய்மலை ஈசனின் திருவடிகளைப் பரவிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கள் கவலைகள் நீங்கப் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 68 | 69 | 70 | 71 | 72 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திரு ஈங்கோய்மலை - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - ஈங்கோய், மலையாரே, இறைவர், விளங்கும், ஈங்கோய்மலை, எழுந்தருளியுள்ளார், கொன்றை, பார்வதி, பொருந்திய, எழுந்தருளியுள்ள, திருவீங்கோய்மலையில், என்னும், ஓசையும், வெண்மையான, தேவியோடு, மகளாகிய, மென்மையான, மலையரையன், எரிக்கும், பெருமை, டெரியாடும், உமையம்மையோடு, உடையவர், ருமையாளோடும், அணிந்த, உமையம்மையாரோடு, திருவீங்கோய்மலை, திருவீங்கோய், இரவில், எரியேந்தி, சாரலையுடைய, சுடுகாட்டில், கொண்டு, திருமுறை, திருச்சிற்றம்பலம், குளிர்ந்த, சடைகள், தாழ்ந்து, மலையான், மகளோடும், சடைதாழப், மலையில், திரியும், திருமேனியின், பெருமான், படுகாட்