முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.007.திருநள்ளாறும் - திருஆலவாயும்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.007.திருநள்ளாறும் - திருஆலவாயும்

1.007.திருநள்ளாறும் - திருஆலவாயும்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
திருநள்ளாறு சோழநாட்டிலுள்ளது, திருஆலவாய் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை.
திருநள்ளாறுவில் சுவாமிபெயர்
சுவாமிபெயர் - தெர்ப்பாரணியேசுவரர்.
தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.
திருஆலவாயில் சுவாமிபெயர்
சுவாமிபெயர் - சொக்கநாதசுவாமி.
தேவியார் - மீனாட்சியம்மை.
65 |
பாடக மெல்லடிப் பாவையோடும் நாடக மாடும்நள் ளாறுடைய சூடக முன்கை மடந்தைமார்கள் ஆடகமாடம் நெருங்குகூடல் |
1.007.1 |
பாடகம் என்னும் அணிகலன் அணிந்த மென்மையான அடிகளை உடைய உமையம்மையோடு, பிணக்காடாகிய இடுகாட்டைப் பற்றி நின்று நாடகம் ஆடும் நள்ளாற்று நம் பெருமானே! நீகையில் வளையல் அணிந்த மகளிர் தம் துணைவர்களோடும் கூடி வந்து வழிபடுவதும், பொன் மாளிகைகள் நிறைந்ததுமான கூடல் ஆலவாயின்கண் விரும்பி உறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.
66 |
திங்களம் போதுஞ் செழும்புனலும் நங்கண் மகிழும்நள் ளாறுடைய பொங்கிள மென்முலை யார்களோடும் அங்கழ கச்சுதை மாடக்கூடல் |
1.007.2 |
பிறைமதி, அழகிய மலர்கள், வளமான கங்கை நதி ஆகியவற்றைத் தன் செஞ்சடையின் மேல் அருகருகே வைத்து மகிழ்ந்து நம் கண்கள் களிக்குமாறு நள்ளாற்றின்கண் எழுந்தருளிய நம் பெருமானே! நீ, பூரித்து எழும் மென்மையான இளைய தனங்களை உடைய மடந்தையரோடு கானகத்தில் வாழும் ஆண் மயில்கள் களித்தாட, பெருமை மிக்க தமிழ்ச் சங்கத்தினையும், நிலவொளி வெளிப்படுமாறு வெண்மையான சுண்ணாம்பினால் கட்டப்பட்ட மாடங்களையும் உடைய கூடல் ஆலவாயின்கண் விரும்பி உறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.
67 |
தண்ணறு மத்தமும் கூவிளமும் நண்ணல ரியநள் ளாறுடைய புண்ணிய வாணரும் மாதவரும் அண்ணலின் பாட லெடுக்குங்கூடல் |
1.007.3 |
குளிர்ந்த மணம் வீசும் ஊமத்தை மலர் வில்வம் ஆகியவற்றையும் வெண்மையான தலை மாலையையும் அணிந்து, திருவருள் இருந்தாலன்றி யாராலும் சென்று வழிபடற்கரிய நள்ளாற்றின்கண் எழுந்தருளிய நம் பெருமானே! நீ, புண்ணிய வாணரும் மாதவர்களும் வந்து ஏத்துவதும் அணிகலன்கள் புனைந்த மகளிர் இறைவனது புகழ் சேர்ந்த பாடல்களைப் பாடுவதுமான கூடல் ஆலவாயின்கண் விரும்பி உறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.
68 |
பூவினில் வாசம் புனலிற்பொற்புப் நாவினிற் பாடல்நள் ளாறுடைய தேவர்கள் தானவர் சித்தர்விச்சா ஆவினில் ஐந்துகந் தாட்டுங்கூடல் |
1.007.4 |
பூக்களில் வாசனையாய், நீரில் தண்மையாய், புதிய சந்தனத்தில் மணமாய், நாவில் பாடலாய்க் கலந்து விளங்கும் நள்ளாற்று நம் பெருமானே! நீ, தேவர்களும், அசுரர்களும், சித்தர்களும், வித்யாதரர்களும் ஆகிய கூட்டத்தினரோடு சிறந்து விளங்குபவராய்ப் பசுவினிடம் தோன்றும் பஞ்சகவ்யங்களால் ஆட்டி வழிபடக் கூடல் ஆலவாயின்கண் விரும்பி உறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.
69 |
செம்பொன்செய் மாலையும் வாசிகையும் நம்பும் பெருமைநள் ளாறுடைய உம்பரும் நாகரு லகந்தானும் அம்புத நால்களால் நீடுங்கூடல் |
1.007.5 |
செம்பொன்னால் செய்த மாலைகள், திருவாசி ஆகியவற்றுடன் மணப்புகை நிவேதனம் தோத்திரம் ஆகியவற்றை விரும்பி ஏற்கும் பெருமை உடைய, நள்ளாற்றில் விளங்கும் நம்பெருமானே! நீ, விண்ணவரும், நாகர் உலகத்தவரும், ஒலிக்கும் கடலால் சூழப்பட்ட மண்ணுலக மக்களும் ஏத்த, நான்கு மேகங்களால் சூழப்பட்ட கூடல் ஆலவாயின்கண் விரும்பி உறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.
70 |
பாகமுந் தேவியை வைத்துக்கொண்டு நாகமும் பூண்டநள் ளாறுடைய போகமும் நின்னை மனத்துவைத்துப் ஆகமு டையவர் சேருங்கூடல் |
1.007.6 |
இடப்பாகமாக உமையம்மையை வைத்துக் கொண்டு, படமும் புள்ளிகளும் பெரிதாகப் பிளந்த வாயும் உடைய நாகத்தைப் பூண்டுள்ள நள்ளாறுடைய நம் பெருமானே! நீ, உன்னை மனத்தில் கொண்டு சிவபோகமும், புண்ணியர்களாம் அடியவர்கள் கூட்டுறவும் கொண்ட மேனியராகிய சான்றோர்கள் சேர்ந்துறையும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்து உறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.
71 |
கோவண வாடையும் நீறுப்பூச்சுங் நாவணப் பாட்டும்நள் ளாறுடைய பூவண மேனி யிளையமாதர் ஆவண வீதியி லாடுங்கூடல் |
1.007.7 |
வேதமாகிய கோவண ஆடையும் திருநீற்றுப் பூச்சும் கொடிய மழுவாயுதத்தை ஏந்தலும் சிவந்த சடையும் நாவில் பல்வேறு சந்தங்களில் பாடும் வேதப் பாட்டும் உடையவனாய் இலங்கும் நள்ளாற்றுள் எழுந்தருளிய நம் பெருமானே! நீ பூப்போலும்மெல்லிய மேனியை உடைய இளம் பெண்கள் பொன்மணி முதலியவற்றைக் கொழித்து எடுத்துக் கடைவீதியில் விளையாடும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்து விளங்கக் காரணம் யாதோ? சொல்வாயாக.
72 |
இலங்கை யிராவணன் வெற்பெடுக்க நலங்கொளச் சேர்ந்தநள் ளாறுடைய புலன்களைச் செற்றுப் பொறியைநீக்கிப் அலங்க னல்லார்க ளமருங்கூடல் |
1.007.8 |
இலங்கை மன்னன் இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தபோது, தனது அழகிய கால் விரலை ஊன்றி அடர்த்துப் பின் அவனது இசையை விரும்பிக்கேட்டு அவனுக்கு நன்மைகள் பலவும் பொருந்துமாறு உளங் கொண்ட நள்ளாறுடைய நம் பெருமானே! நீ, ஐம்புல இன்பங்களை வெறுத்து அவற்றைத் தரும் ஐம்பொறிகளை மடை மாற்றிப் புந்தியில் உன்னையே சிந்தனை செய்யும் தூய வாழ்க்கையையுடைய சிவஞானிகள் வாழும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்துறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.
73 |
பணியுடை மாலும் மலரினோனும் நணுகல ரியநள் ளாறுடைய மணியொலி சங்கொலி யோடுமற்றை தணிகிளர் வேந்தர் புகுதுங்கூடல் |
1.007.8 |
பாம்பணையானாகிய திருமாலும் தாமரை மலரில் எழுந்தருளிய நான்முகனும் முறையே பன்றியாயும் பறவை இனங்களில் மேம்பட்ட அன்னமாயும், அடிமுடிகளை மாறித் தேடியும் நணுக முடியாத நள்ளாறுடைய நம் பெருமானே! நீ மணி ஒலியும், சங்கொலியும், சிறந்த முரசின் ஒலியும் என்றும் இடையறவின்றிக் கேட்கும் சிறப்பினதும் மேம்பட்ட வேந்தர்கள் புகுந்து வழிபடும் பெருமையதும் ஆகிய கூடல் ஆலவாயின்கண் எழுந்தருளி விளங்கக் காரணம் யாதோ? சொல்வாயாக.
74 |
தடுக்குடைக் கையருஞ் சாக்கியருஞ் நடுக்குற நின்றநள் ளாறுடைய எடுக்கும் விழவும் நன்னாள்விழவும் அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல் |
1.007.10 |
ஓலைத் தடுக்கைக் கையில் ஏந்தித் திரியும் சமணர்களும் சாக்கியர்களும் மரபு நீங்கிய வீண் தவத்தராவர். அவர்கள் மெய்ந் நெறியாகிய சைவசமயத்தைக் கண்டு அச்சமயிகளின் வழிபடு கடவுளைக் கண்டு நடுக்கம் உறுமாறு திரு நள்ளாற்றுள் விளங்கும் நம் பெருமானே! நீ, நாள் விழாவும், சிறப்பு விழாவும் நன்கு நடைபெற, அவ்விழாவில் வழங்கும் பெருவிருந்தால் விளையும் மகிழ்வு எத்திசையும் பொருந்திப் பெருமை சேர்க்கும் மாடக் கூடல் ஆலவாயின் கண் மகிழ்ந்துறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.
75 |
அன்புடை யானை யரனைக்கூடல் நன்பொனை நாதனை நள்ளாற்றானை பொன்புடை சூழ்தரு மாடக்காழிப் இன்புடைப் பாடல்கள் பத்தும்வல்லார் |
1.007.11 |
எல்லா உயிர்களிடத்தும் அன்புடையவனாம், அரனைக் கூடல் ஆலவாயில் மேவியதற்குக் காரணம் யாதெனக் கேட்டுத் தூய பொன் போன்றவனாகவும், தலைவனாகவும் விளங்கும் திருநள்ளாற்று இறைவனை நயமாகப் போற்றி, நலம் பயக்கும் செம்பொன் நிறைந்த மாட வீடுகளால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றிய பூசுரனாகிய ஞானசம்பந்தன் பாடிய இனிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர், இமையவர் ஏத்தத் தேவருலகில் விளங்குவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநள்ளாறும் - திருஆலவாயும் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - காரணம், ணமர்ந்தவாறே, ளாறுடைய, வென்கொல்சொல்லாய், சொல்வாயாக, ஆலவாயின்கண், மானிது, பெருமானே, நம்பெரு, விரும்பி, உறைதற்குக், விளங்கும், சுவாமிபெயர், எழுந்தருளிய, நள்ளாறுடைய, பெருமை, சூழப்பட்ட, நாவில், அமர்ந்து, கொண்டு, போற்றி, வாணரும், விளங்கக், இலங்கை, நள்ளாற்றுள், விழாவும், மேம்பட்ட, ஒலியும், பாடல்கள், நள்ளாற்றின்கண், அணிந்த, மென்மையான, தேவியார், திருச்சிற்றம்பலம், திருஆலவாயும், திருமுறை, நள்ளாற்று, மகளிர், மாலையும், ரியநள், வெண்மையான, வாழும், மாடக்கூடல், திருநள்ளாறும், புண்ணிய