முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.059.திருத்தூங்கானைமாடம்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.059.திருத்தூங்கானைமாடம்

1.059.திருத்தூங்கானைமாடம்
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுடர்க்கொழுந்தீசர்.
தேவியார் - கடந்தைநாயகியம்மை.
634 |
ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை அடங்கும் மிடங்கருதி நின்றீரெல்லாம் கிடங்கும் மதிலுஞ் சுலாவியெங்குங் தொடங்குங் கடந்தைத் தடங்கோயில்சேர் |
1.059.1 |
வெளிப்படுதற்குரிய காலம் வருந்துணையும் ஒடுங்கியிருக்கும் நோய் இனிவரும் பிறப்புகள், துன்பங்கள் ஆகியனவாய இவைகளை உடைய இவ்வாழ்க்கை நீங்கத்தவம் புரிதற்குரிய இடத்தை விரும்பி நிற்கும் நீவிர் எல்லீரும் அகழும் மதிலும் சூழ்ந்து எல்லா இடங்களிலும் உள்ள வீடுகள் தோறும் வேதங்களின் ஒலிகள் ஒலிக்கும் கடந்தை என்னும் ஊரில் உறையும் அடிகளாகிய சிவபெருமானின் அடிநிழலின்கீழ் அவருக்கு ஆளாகுமாறு அவர் கோயிலாகிய திருத்தூங்கானைமாடம் செல்வீராக.
635 |
பிணிநீர சாதல் பிறத்தலிவை டணிநீர மேலுலக மெய்தலுறில் மணிநீல கண்ட முடையபிரான் துணிநீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் |
1.059.2 |
பிணிகளின் தன்மையினை உடைய சாதல் பிறத்தல் ஆகியன நீங்க, எக்காலத்தும் நீங்காத பேரின்பத்தோடு கூடிய அழகிய தன்மை வாய்ந்த, மேலுலகங்களை நீவிர் அடைய விரும்பினால், விடையேற்றை ஊர்தியாகவும், கொடியாகவும் உடையவனும், நீலமணி போன்ற கண்டத்தினைக் கொண்டவனும் ஆகிய சிவபிரான் மலைமகளும் தானுமாய் மகிழ்ந்து வாழும், தௌந்த நீரை உடைய கடந்தையில் ஒளியோடு கூடிய திருத்தூங்கானைமாடக் கோயிலை அறிந்து தொழுவீராக. உங்கட்கு யாதும் குறைவில்லை.
636 |
சாநாளும் வாழ்நாளுந் தோற்றமிவை ஆமா றறியா தலமந்துநீர் பூமா ணலங்க லிலங்குகொன்றை தூமாண் கடந்தைத் தடங்கோயில்சேர் |
1.059.3 |
இறக்கும் நாளும், வாழும் நாளும், பிறக்கும் நாளும் ஆகிய இவற்றோடு கூடிய சலிப்பான வாழ்க்கை நீங்கச் செய்யும் தவம் யாதென அறியாது நீவிர் மறந்ததனாலும் யாதும்குறைவில்லை. விடையேற்றை ஊர்தியாகக்கொண்டு மலர்களில் மாட்சிமையுற்று விளங்கும் கொன்றை மாலையும், கங்கையும் தங்கிய சிவந்த சடையினை உடைய சிவபிரான் உறையும் தூய்மையான, மாண்புடைய கடம்பைநகரில் விளங்கும் பெரிய கோயிலாக அமைந்த திருத்தூங்கானை மாடத்தைத் தொழுவீராக. அது ஒன்றே தவத்தின் பயனைத் தரப்போதுமானதாகும்.
637 |
ஊன்றும் பிணிபிறவி கேடென்றிவை மான்று மனங்கருதி நின்றீரெல்லாம் மூன்று மதிலெய்த மூவாச்சிலை தோன்றுங் கடந்தைத் தடங்கோயில்சேர் |
1.059.4 |
நிலையானநோய், பிறப்பு, இறப்பு, துன்பம் இவற்றை உடைய வாழ்க்கை நீங்கவும், நிலையான வீடு பேற்றைப் பெறவும், தவம் செய்ய விரும்பி மயங்கி நிற்கும் நீவிர் எல்லீரும் மனம் வேறுபட்டு உலகில் மயங்காது, திரிபுரங்களை எய்த அழியாத வில்லை ஏந்தியவரும், உலகின் தலைவருமாகிய சிவபிரானது இடமாக விளங்குவதாய், வானளாவிய கொடிகள் தோன்றும் கடந்தை நகரில் உள்ள பெரிய கோயிலாக அமைந்த திருத்தூங்கானை மாடத்தைத் தொழுவீர்களாக.
638 |
மயறீர்மை யில்லாத தோற்றம்மிவை வியறீர மேலுலக மெய்தலுறின் உயர்தீர வோங்கிய நாமங்களா துயர்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர் |
1.059.5 |
மயக்கம் நீங்காத பிறப்பிறப்புக்கள் அழியும் வழிகள் ஆதலால் அவற்றின் நீங்கி மேலுலகம் எய்த நீவிர் விரும்பினால் பெரிதாய முயற்சி எதுவும் வேண்டா. எளிய வழியாகச் சிவபிரானது இடமாக விளங்குவதும் நம் துயர்களைத் தீர்ப்பதும் ஆகிய கடந்தை நகரில் உள்ள பெரிய கோயிலாகிய திருத்தூங்கானைமாடத்தை அடைந்து அப்பெருமானுடைய மிக உயர்ந்த திருப்பெயர்களைக் கூறி இடைவிடாது அவன் திருவடிகளைத் தொழுவீர்களாக.
639 |
பன்னீர்மை குன்றிச்
செவிகேட்பிலா நன்னீர்மை குன்றித் திரைதோலொடு பொன்னீர்மை துன்றப் புறந்தோன்றுநற் தொன்னீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் |
1.059.6 |
புலன் நுகர்ச்சிக்குரிய பலதன்மைகளும் குறைந்து காதுகள் கேளாமல் கண்களில், சென்று பற்றும் பார்வைகுன்றிப் பவளம் போன்ற உடல்நிறம் குன்றிச் சுருங்கிய தோலோடு நரை தோன்றும் மூப்புக் காலம் நம்மை வந்து அணுகுமுன் பொன் போன்ற நிறம் பொருந்திய கங்கை தங்கிய செஞ்சடையினையுடைய சிவபிரான் உறையும், பழமையான புகழையுடைய கடம்பை நகர்த் தடங்கோயிலாகிய திருத்தூங்கானை மாடத்தைத் தொழுவீர்களாக.
640 |
இறையூண் டுகளோ டிடுக்கணெய்தி நிறையூண் நெறிகருதி நின்றீரெல்லா பிறைசூ ழலங்க லிலங்குகொன்றை துறைசூழ் கடந்தைத் தடங்கோயில்சேர் |
1.059.7 |
குறைந்த உணவோடு பல்வகைத் துன்பங்களையும் எய்தி வருந்தும் இழிந்த வாழ்க்கை நீங்க, தவமாகிய நிறைந்த உணவைப் பெரும் வழியாதென மயங்கி நிற்கும் நீவிர் அனைவீரும்.முடியில் பிறை சூடியவரும், கொன்றை மாலை அணிந்தவரும் ஆகிய பெருமான் பிரியாது உறைவதாய், நீர்த்துறைகள் சூழ்ந்த கடந்தை நகரிலுள்ள தடங்கோயிலாகிய தூங்கானைமாடத்தை நாளும் நினைந்து தொழுவீர்களாக.
641 |
பல்வீழ்ந்து நாத்தளர்ந்து
மெய்யில்வாடிப் இல்சூ ழிடங்கருதி நின்றீரெல்லா கல்சூ ழரக்கன் கதறச்செய்தான் தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் |
1.059.8 |
பல்வீழ்ந்து பேச்சுத் தளர்ந்து, உடல் வாடிப் பலராலும் பழிக்கப்படும் இவ்வுலக வாழ்க்கை நீங்கத் தவம் புரியும் இடம் யாதெனக் கருதி நிற்கும் நீவிர் அனைவீரும் சிறிதும் காலம் தாழ்த்தாது எழுந்துவருவீர்களாக. கயிலைமலையைப் பெயர்த்த இராவணனைக் கதறுமாறு அடர்த்த சிவபிரான் மலைமகளும் தானுமாய்க் கருதி வாழும் பழமையான புகழையுடைய கடம்பை நகரில் உள்ள பெருங்கோயிலாகிய தூங்கானைமாடத்தைத் தொழுவீர்களாக.
642 |
நோயும் பிணியு மருந்துயரமு வாயு மனங்கருதி நின்றீரெல்லா தாய வடியளந்தான் காணமாட்டாத் தோயுங் கடந்தைத் தடங்கோயில்சேர் |
1.059.9 |
உடலை வருத்தும் நோய்களும், மனத்தை வருத்தும் கவலைகளும் அவற்றால் விளையும் துன்பங்களும் ஆகியவற்றை நுகர்தற்குரிய இவ்வாழ்க்கை நீங்கத் தவம்புரியும் எண்ணத்துடன் நிற்கும் நீவிர் அனைவீரும் தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும், மண்ணையும், விண்ணையும் அடியால் அளந்த திருமாலும் காண மாட்டாத தலைவனாகிய சிவபிரானுக்குரிய இடமாகிய விண் தோயும் சோலைகளால் சூழப்பட்ட கடந்தை நகரிலுள்ள திருத்தூங்கானை மாடப்பெருங்கோயிலைத் தொழுவீர்களாக.
643 |
பகடூர் பசிநலிய நோய்வருதலாற் முகடூர் மயிர்கடிந்த செய்கையாரும் திகடீர்ந்த பொய்ம் மொழிகள் தேறவேண்டா துகடீர் கடந்தைத் தடங்கோயில்சேர் |
1.059.10 |
பெரும்பசி நலிய, நோய்கள் வருத்துவதால். பழிக்கத்தக்க இவ்வாழ்க்கை நீங்கத் தவம் செய்ய விரும்பும் நீவிர் தலையை முண்டிதமாக்கித் திரிபவரும், உடலைத் துவராடையால் போர்த்தவரும் ஆகிய சமண புத்தர்களின் ஞானம் நீங்கிய பொய்மொழிகளைத் தௌயாது இறைவன் இறைவியோடு பொருந்தி வாழும் குற்றமற்ற கடந்தை நகர்த் தடங் கோயிலாகிய திருத்தூங்கானை மாடத்தைத் தொழுவீர்களாக.
644 |
மண்ணார் முழுவதிரு மாடவீதி பெண்ணா கடத்துப் பெருங்கோயில்சேர் கண்ணார் கழல்பரவு பாடல்பத்துங் விண்ணோ ருலகத்து மேவிவாழும் |
1.059.11 |
மார்ச்சனையோடு கூடிய முழவு ஒலி செய்யும் மாட வீதிகளைக் கொண்டுள்ள வயல்கள் சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தர் பெண்ணாகடத்தில் பெருங்கோயிலாக விளங்கும் வானளாவிய திருத்தூங்கானைமாடத்து இறைவன் திருவடிகளைப் பரவிப் பாடிய பாடல்கள் பத்தையும் கற்றவரும், கேட்டவரும் விண்ணவர் உலகத்தை மேவி வாழ அப்பாடல்களே தவப்பயன்தரும்; வினைகள் மாயும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 57 | 58 | 59 | 60 | 61 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருத்தூங்கானைமாடம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - தூங்கானை, வாழ்க்கை, தடங்கோயில்சேர், தொழுமின்களே, கடந்தைத், நீவிர், தொழுவீர்களாக, யொழியத்தவம், கடந்தை, நிற்கும், திருத்தூங்கானை, நாளும், உறையும், மாடத்தைத், சிவபிரான், வாழும், திருத்தூங்கானைமாடம், விளங்கும், குறைவில்லை, நின்றீரெல்லா, நகரில், இவ்வாழ்க்கை, நீங்கத், அனைவீரும், கோயிலாகிய, வேண்டா, சிவபிரானது, தோன்றும், குன்றிச், வானளாவிய, பெருமான், பல்வீழ்ந்து, நகரிலுள்ள, பழிப்பாய, வருத்தும், இறைவன், சூழ்ந்த, மயங்கி, புகழையுடைய, கடம்பை, நகர்த், தடங்கோயிலாகிய, பழமையான, னானுறையும், விரும்பி, எல்லீரும், மேலுலக, நீங்காத, நின்றீரெல்லாம், யுடைத்தாய, திருமுறை, திருச்சிற்றம்பலம், பிணிபிறவி, கேடென்றிவை, விரும்பினால், விடையேற்றை, கொன்றை, தங்கிய, கோயிலாக, அமைந்த, செய்யும், புன்சடையி, மலைமகளும், தொழுவீராக, லிலங்குகொன்றை, புனல்பொதிந்த, மனங்கருதி