முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.050.திருவலிவலம்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.050.திருவலிவலம்

1.050.திருவலிவலம்
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மனத்துணைநாதர்.
தேவியார் - வாளையங்கண்ணியம்மை.
537 |
ஒல்லையாறி யுள்ளமொன்றிக் சொல்லையாறித் தூய்மைசெய்து நல்லவாறே யுன்றனாமம் வல்லவாறே வந்துநல்காய் |
1.050.1 |
திருவலிவலம் மேவிய இறைவனே! பரபரப்பு அடங்கி, மனம் ஒன்றி, வஞ்சம் வெஞ்சொல் தவிர்ந்து தூய்மையோடு, காமம் முதலிய குற்றங்களைக் கடிந்து, நல்ல முறையில் உன் நாமமாகிய திருவைந்தெழுத்தை என் வல்லமைக்குத் தக்கவாறு நான் ஓதி வழிபடுகின்றேன், வந்து அருள்புரிவாயாக.
538 |
இயங்குகின்ற விரவிதிங்கண் பயங்களாலே பற்றிநின்பாற் தயங்குசோதீ சாமவேதா மயங்குகின்றேன் வந்துநல்காய் |
1.050.2 |
வானவெளியில் இயங்குகின்ற ஞாயிறு, திங்கள் மற்றும் நல்ல தேவர்கள் எல்லோரும் அச்ச மேலீட்டினால் உன்னைப் பரம் பொருள் என்று தம் சித்தம் தௌயாதவராயுள்ளனர். விளங்கும் சோதி வடிவினனே, சாம வேதம் பாடி மகிழ்பவனே, காமனைக் காய்ந்தவனே, எவ்வாறு உன்னைத் தௌவது என்று யானும் மயங்குகின்றேன். வந்து அருள்புரிவாயாக.
539 |
பெண்டிர்மக்கள் சுற்றமென்னும் விண்டுபண்டே வாழமாட்டேன் கண்டுகண்டே யுன்றனாமங் வண்டுகிண்டிப் பாடுஞ்சோலை |
1.050.3 |
வண்டுகள் தேனுண்ணற் பொருட்டு மலர்களைக் கிண்டி இசை பாடும் சோலைகள் சூழ்ந்த திருவலிவலத்துள் மேவிய இறைவனே, மனைவி மக்கள் சுற்றம் முதலான பாசப் பெருங்கடலை இளைய காலத்திலேயே கடந்து வாழ்ந்தேன் அல்லேன். வேதனை. நோய் ஆகியன நலிய உலகியற் பாசங்கள் துன்பம் தருவன என்பதைக் கண்டு உன் திருநாமம் சொல்வதொன்றே இன்பமாவது என்பதைக் கண்டு அதனை ஓத உள்ளம் விரும்புகிறது. அருள் புரிவாயாக.
540 |
மெய்யராகிப் பொய்யைநீக்கி செய்யரானார் சிந்தையானே நைவனாயே னுன்றனாமம் வையமுன்னே வந்துநல்காய் |
1.050.4 |
பொய்மையை விலக்கி, உண்மையை மேற்கொண்டு பந்த பாசங்களாகிய வேதனைகளைத் துறந்து செம்மையான மனமுடையோராய் வாழும் அன்பர்களின் சிந்தையுள் இருப்பவனே, தேவர்களின் குலக்கொழுந்தே! நான் வருந்தி நிற்கிறேன். உன்றன் திருநாமத்தை நாள்தோறும் ஓதி வருகிறேன். வலிவலம் மேவிய இறைவனே. வையகத்தே பலரும் காண வந்து அருள்புரிவாயாக.
541 |
துஞ்சும்போதுந் துற்றும்போதுஞ் தஞ்சமில்லாத் தேவர்வந்துன் நஞ்சையுண்டாய்க் கென்செய்கேனோ வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன் |
1.050.5 |
திருவலிவலம் மேவிய இறைவனே, உறங்கும்போதும் உண்ணும்போதும் உன்றன் புகழையே சொல்லுவேன். தேவர்கள் வேறு புகலிடம் இல்லாது உன்பால் வந்து உன் தாளிணைகளின் கீழ்ப் பணிய அவர்களைக் காத்தற்பொருட்டு நஞ்சை உண்ட உன் கருணையை நாளும் நினைதலையன்றி வேறு என் செய வல்லேன்? உன் அருள் பெறுதற்குத் தடையாக என்பால் வஞ்சம் உண்டென்று அஞ்சுகின்றேன். அதனைப் போக்கி எனக்கு அருள்.
542 |
புரிசடையாய் புண்ணியனே எரியவெய்தா யெம்பெருமா கரியுரியாய் காலகாலா வரியரவா வந்துநல்காய் |
1.050.6 |
திருவலிவலம் மேவிய இறைவனே, முறுகிய சடையை உடையவனே, புண்ணிய வடிவினனே! பகைவர் தம் முப்புரங்களும் எரியுமாறு அம்பெய்தவனே என்று தேவர்கள்பரவும், யானையின் தோலை அணிந்தவனே, காலனுக்குக் காலனே! நீலமணி போலும் கண்டத்தையும் வரிந்து கட்டப் பெற்ற பாம்பினையும் உடையவனே! என்பால் வந்து அருள்புரிவாயாக.
543 |
தாயும்நீயே தந்தைநரயே ஆயும்நின்பா லன்புசெய்வா ஆயமாய காயந்தன்னு மாயமேயென் றஞ்சுகின்றேன் |
1.050.7 |
திருவலிவலம் மேவிய இறைவனே! சங்கரனே எனக்குத் தாயும் தந்தையும் நீயேயாவாய். அடியேன் உள்ளம் சிவஞானிகளால் ஆய்ந்துணரப்படும் நின்பால் அன்பு செய்ய விரும்புகின்றது. எனக்குப் படைத்தளிக்கப்பட்ட இவ்வுடலிடைப் பொருந்திய ஐம்பொறிகள் உன்னைப் பொருந்தவொட்டாமல் தடுக்கின்றன. இம்மாயத்தைக் கண்டு யான் அஞ்சுகின்றேன். அருள்புரிவாயாக.
544 |
நீரொடுங்குஞ் செஞ்சடையாய் வேரொடும்பீழ்ந் தேந்தலுற்ற தேரொடும்போய் வீழ்ந்தலறத் வாரொடுங்குங் கொங்கைபங்கா |
1.050.8 |
திருவலிவலம் மேவிய இறைவனே தருக்கி வந்த கங்கை செயல் இழந்து ஒடுங்கிய செஞ்சடையை உடையவனே, உன்னுடைய பொன்மயமான கயிலை மலையை வேரோடும் பிடுங்கி ஏந்தத்தொடங்கிய இலங்கை வேந்தன் இராவணனைத் தேரோடும் வீழ்ந்து அலறுமாறு உன் கால் திருவிரலால் அடர்த்தவனே, கச்சு அணிந்த பெருத்த தனங்களை உடைய உமைபங்கனே! வந்து நல்காய்.
545 |
ஆதியாய நான்முகனும் சோதியானே நீதியில்லேன் ஓதிநாளு முன்னையேத்து வாதியாமே வந்துநல்காய் |
1.050.9 |
திருவலிவலம் மேவிய இறைவனே! உலகங்களைப் படைத்துக் காத்தலில் ஆதியானவர்களாகிய நான்முகனும், திருமாலும் அறிதற்கரிய சோதிப் பிழம்பாய்த் தோன்றியவனே! யான் நீதியில்லாதேன் ஆயினும் உன் புகழையே சொல்லுகின்றேன். நாள்தோறும் உன்புகழையே ஓதி உன்னையே ஏத்தும் என்னை வினைகளும் அவற்றின் பயனாய துன்பங்களும் வந்து தாக்காமல் வந்து அருள் புரிவாயாக.
546 |
பொதியிலானே பூவணத்தாய் பதியிலானே பத்தர்சித்தம் விதியிலாதார் வெஞ்சமணர் மதியிலாதா ரென்செய்வாரோ |
1.050.10 |
திருவலிவலம் மேவிய இறைவனே, பொதிய மலையைத் தனக்கு இடமாகக் கொண்டவனே, திருப்பூவணம் என்னும் தலத்தில் உறைபவனே, தன்பால் பக்தி செய்யும் அன்பர்களின் சித்தங்களில் எழுந்தருளி இருப்பவனே, கொடிய சமணர்களும் சாக்கியர்களும் உன்னை அடையும் புண்ணியம் இல்லாதவர்கள். அறிவற்ற அவர்கள் தங்கள் சமய நெறியில் என்ன பயனைக் காண்பார்களோ?.
547 |
வன்னிகொன்றை மத்தஞ்சூடும் பொன்னிநாடன் புகலிவேந்தன் பன்னுபாடல் பத்தும்வல்லார் மன்னுசோதி யீசனோடே |
1.050.11 |
வன்னி கொன்றை மலர், ஊமத்தை மலர் ஆகியவற்றைச் சூடும் திருவலிவலம் மேவிய இறைவனைக் காவிரி நாட்டிலுள்ள புகலி என்னும் சரகாழிப் பதிக்கு வேந்தனாய ஞானசம்பந்தண் புகழ்ந்து ஓதியனவும் எக்காலத்தும் ஓதத்தக்கனவும் ஆகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர், உண்மைத் தவமுடையோர் விரும்பும் நிலை பெற்ற, சோதி வடிவான ஈசனோடு மன்னியிருப்பர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 48 | 49 | 50 | 51 | 52 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவலிவலம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வலிவலமே, திருவலிவலம், இறைவனே, அருள்புரிவாயாக, வந்துநல்காய், உடையவனே, புகழையே, றஞ்சுகின்றேன், உன்றன், நாள்தோறும், என்பால், சங்கரனே, என்னும், விரும்பும், நான்முகனும், இருப்பவனே, நீலமணி, அஞ்சுகின்றேன், புரிவாயாக, இயங்குகின்ற, மயங்குகின்றேன், வஞ்சம், திருச்சிற்றம்பலம், திருமுறை, தேவர்கள், உன்னைப், துறந்து, உள்ளம், என்பதைக், வடிவினனே, அன்பர்களின்