முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் » 12.03. நேச நாயனார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 12.03. நேச நாயனார் புராணம்

12.03. நேச நாயனார் புராணம்
4192 |
சீர் வளர் சிறப்பின் மிக்க செயல் முறை ஒழுக்கம் குன்றா நார் வளர் சிந்தை வாய்மை நன்மையார் மன்னி வாழும் பார் வளர் புகழின் மிக்க பழம்பதி மதி தோய் நெற்றிக் கார்வளர் சிகர மாடக் காம்பீலி என்பதாகும் | 12.3.1 |
4193 | அந்நகர் அதனில் வாழ்வார் அறுவையர் குலத்து வந்தார் மன்னிய தொழிலில் தங்கள் மரபில் மேம்பாடு பெற்றார் பல்நாக ஆபரணர்க்கு அன்பர் பணி தலைக்கொண்டு பாதம் சென்னியில் கொண்டு போற்றும் தேசினார் நேசர் என்பார் | 12.3.2 |
4194 | ஆங்கு அவர் மனத்தின் செய்கை அரன் அடிப்போதுக்கு ஆக்கி ஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்சு எழுத்துக்கு ஆக்கி தாங்கு கைத்தொழிலின் செய்கை தம்பிரான் அடியார்க்கு ஆகப் பாங்குடை உடையும் கீளும் பழுதில் கோவணமும் நெய்வார் | 12.3.3 |
4195 | உடையொடு நல்ல கீளும் ஒப்பில் கோவணமும் நெய்து விடையவர் அடியார் வந்து வேண்டுமாறு ஈயும் ஆற்றால் இடையறாது அளித்து நாளும் அவர் கழல் இறைஞ்சி ஏத்தி அடைவுறு நலத்தர் ஆகி அரனடி நீழல் சேர்ந்தார் | 12.3.4 |
4196 | கற்றை வேணி முடியார் தம் கழல் சேர்வதற்குக் கலந்த வினை செற்ற நேசர் கழல் வணங்கிச் சிறப்பால் முன்னைப் பிறப்பு உணர்ந்து பெற்றம் உயர்த்தார்க்கு ஆலயங்கள் பெருக அமைத்து மண் ஆண்ட கொற்ற வேந்தர் கோச்செங்கண் சோழர் பெருமை கூறுவாம் | 12.3.5 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
12.03. நேச நாயனார் புராணம் - பன்னிரண்டாம் திருமுறை - திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - செய்கை