இலக்கணச் சுருக்கம்

277.
உடன்பாட்டுக் குறிப்பு வினையெச்சங்கள், பண்படியாகத் தோன்றி அகரவிகுதியைப் பெற்று
வருவனவாம்.
உதாரணம்.
மெல்லப் பேசினான் சாலப்பல
பைய நடந்தான் உறக்கரிது
வலியப் புகுந்தான் மாணப் பெரிது
மெல்ல என்பது, ல, ளவொற்றுமைபற்றி, மௌ;ளவெனவும் வழங்கும்.
278. எதிர்மறை குறிப்புவினையெச்சங்கள், அல், இல் என்னும் எதிர்மைபண்படியாகத் தோன்றி, றி டு மல் மே மை ஆல் கால் கடை வழி இடத்து என்னும் விகுதிகளைப் பெற்று வருவனவாம்.
உதாரணம்.
றி
து
மல்
மே
மை
ஆல்
கால்
கடை
வழி
இடத்து அறமன்றிச்செய்யான்
அறமல்லாதில்லை
அறமல்லதில்லை
அறமல்லாமலில்லை
அறமல்லாமேயில்லை
அறமல்லாமையில்லை
நீயல்லாலில்லை
அவனல்லாக்கானீயார்
அவனலடலாக்கடைநீயார்
அவனல்லாவழிநீயார்
அவனல்லாவிடத்து நீயார்
அருளின்றிச் செய்தான்
அருளில்லாது செய்தான்
---
யானில்லாமல் வந்தான்
யானில்லாமே வந்தான்
யானில்லாமை வந்தான்
--
யானில்லாக்கால் வருவான்
யானில்லாக்கடைவருவான் யானில்லாவழி வருவான்
யானில்லாவிடத்து வருவான்
இவ்வினையெச்சக் குறிப்புக்களில் வரும் ஆகாரமும் அகரமுஞ் சாரியை.
279. வினையெச்சங்கள், இருதிணையைம்பான் மூவிடங்கட்கும் பொதுவாக வரும்.
உதாரணம்.
நடந்து வந்தான், வந்தேம்
வந்தாய், வந்தீர்
வந்தான், வந்தாள், வந்தார், வந்தது, வந்தன
280. தன் கருத்தாவின் வினையே கொள்ளுதற்குரிய வினையெச்சங்கள் சினை வினையாயின், அவை அச்சினைவினையைக் கொண்டு முடிதலுமன்றி, ஒற்றுமைபற்றி முதல் வினையையும் கொண்டு முடியும்.
உதாரணம்.
சாத்தன் காலொடிந்து வீழ்ந்தான். இங்கே ஒடிதல் சினைவினை; வீழ்தல் முதல் வினை ஆதலின் ஒடிந்து என்னுஞ் சினைவினையெச்சம் வீழ்ந்தான் என்னும் முதல் வினைகொண்டு முடிந்தது.
காலொடிந்து வீழ்ந்தது. இங்கே ஒடிதலுஞ் சினை வினை; வீழ்தலுஞ் சினைவினை. ஆதலின் ஒடிந்து என்னுஞ் சினைவினையெச்சம் வீழ்ந்தது என்னும் சினைவினை கொண்டு முடிந்தது.
மாடு காலொடிந்து வீழ்ந்தது. இங்கே வீழ்தல் மாட்டின் வினையாதலிற் சினைவினையெச்சம் முதல் வினைகொண்டு முடிந்தது.
281. பிற கருத்தாவின் வினையைக் கொள்ளும் வினையெச்சங்கள்; தன்கருத்தாவின் வினையைக்கொள்ளும் வினையெச்சங்களாக திரிந்தும் வரும். திரிபினும், அவற்றின் பொருள்கள் வேறுபடாவாம்.
உதாரணம்.
ஞாயிறு பட்டு வந்தான். இங்கே பட வென்னுஞ் செயவென் வாய்ப்பாட்டுவினையெச்சம் பட்டு என திரிந்து நின்றது.
மழைபெய்து நெல் விளைந்தது. இங்கே பெய்ய என்னுங் காரணப் பொருட்டாகிய செயவென் வாய்ப்பாட்டிறந்தகால வினையெச்சம் பெய்து என திரிந்து நின்றது.
-----
- தேர்வு வினாக்கள்
270. வினையெச்சமாவது யாது? வினையெச்சங் கொள்ளும் வினைச் சொற்களாவன எவை?
271. வினையெச்ச விகுதிகளுள், எவ்விகுதிகள் காலங்காட்டும் இடைநிலையோடு கூடிவரும்? எவ்விகுதிகள் இடைநிலையின்றி தாமே காலங்காட்டும்?
272. தெரிநிலை வினையெச்சங்கள் எத்தனை வகைப்படும்?
273. செய்து என்னும் வாய்ப்பாட்டு இறந்தகால விiயெச்சங்கள் எவை? இங்கே இறந்தகாலம் என்பது எவை? இச் செய்தென் வாய்ப்பாட்டு இறந்தகால வினையெச்சங்கள் வேறு விகுதிகளைப் பெற்று வருமோ?
274. செயவென்னும் வாய்ப்பாட்டு முக்காலத்திற்குமுரிய வினையெச்சம் யாது?
செயவென் வாய்ப்பாட்டு வினையெச்சம், இறந்தகாலத்திலே எப்பொருளில் வந்து, எவ்வினையைக் கொண்டு முடியும்? காரணப்பொருளில் வருதலாவது என்னை?
இச் செயவென் வாய்ப்பாட்டிறந்தகால வினையெச்சம் வேறு விகுதியைப் பெற்று வருமோ?
செயவென் வாய்ப்பாட்டு வினையெச்சம், எதிர்காலத்திலே எப்பொருளில் வந்து, எவ் விகையைக் கொண்டு முடியும்? காரியப் பொருளில் வருதலாவது என்னை?
இச்செயவென் வாய்ப்பாட்டெதிர்கால வினையெச்சம் - வேறு விகுதியைப் பெற்றும் வருமோ?
வேறெவைகள் உணற்கென்னும் வரும்?
செய்யுளிலே செயவென் வாய்ப்பாட்டெதிர் கால வினையெச்சம் வேறு விகுதிகளைப் பெற்றும் வருமோ? இவற்றுள், எவ்வௌ; விகுதி பெற்றவை எவ்வௌ; வினையைக் கொண்டு முடியும்?
இங்கே நிகழ்காலம் என்றது எதை?
275. செயினென்னும் வாய்ப்பாட்டு எதிர்கால வினையெச்சங்கள் எவை? இவ் வினையெச்சம் எக்காலச் சொல்லை முடிக்கும் சொல்லாகக் கொள்ளும்? செயினென்னும் வாய்ப்பாட்டு வினையெச்சங்களாய் வருவன பிறவும் உளவோ?
276. எதிர்மறை தெரிநிலை வினையெச்சங்கள் எவை? செய்யாது என்பது எவைகளுக்கு எதிர்மை?
செய்யாது என்பது இன்னும் எப்படி வரும்? செய்யாது என்பது எதற்கு எதிர்மறை?
செய்யாமல், செய்யாமே, செய்யாமை, செய்யாமைக்கு என்னும் நான்கும் எவைகளுக்கு எதிர்மறை?
செய்யாக்கால், செய்யாக்கடை, செய்யாவழி, செய்யாவிடத்து என்னும் நன்கும் எவைகளுக் எதிர்மறை?
277. உடன்பாட்டு குறிப்பு வினையெச்சங்கள் எவை?
278. எதிhமறைக் குறிப்பு வினையெச்சங்கள் எவை?
279. விiயெச்சங்கள் எவ்வாறு பொதுப்பட வரும்?
280. தன் கருத்தாவின் வினையையே கொள்ளுதற்குரிய வினையெச்சங்கள் பிறகருத்தாவின் வினையைக் கொண்டு முடிதல் இல்லையோ?
281. பிறகருத்தாவின் வினையைக் கொள்ளும் வினை யெச்சங்கள் தன் கருத்தாவின் வினையெச்சங்களாக திரிந்து வருதல் இல்லையோ?
முற்றுவினை எச்சப்பொருளைத் தருதல்
282. தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினை முற்றுங் குறிப்பு வினைமுற்றும், தமக்குரிய பயனிலை கொள்ளுமிடத்து வினையெச்சத்திற்குரிய பயனிலை கொள்ளுமிடத்து வினையெச்சப் பொருளையும், பெயரெச்சத்திற்குரிய பயனிலை கொள்ளுமிடத்து வினையெச்சப் பொருளையும், பெயரெச்சத்திற்குரிய பணனிலை கொள்ளுமிடத்துப் பெயரெச்சப் பொருளையுந் தரும்.
உதாரணம்.
கண்டனன் வணங்கினன்; இங்கே கண்டனன், என்னுந் தெரிநிலை வினைமுற்று, கண்டு என வினையெச்சப் பொருளைத் தந்நது.
உண்டான்சாத்தனூர்க்குப் போயினான்; இங்கே உண்டான் என்னுந் தெரிநிலை வினைமுற்று உண்டடெனப் பெயரெச்ச பொருளைத் தந்தது.
உச்சிக்கூப்பிய கையினர் தற்புகழ்ந்து இங்கே கையினார் என்னுங் குறிப்பு வினைமுற்று, கையையுடையனவராகி என வினையெச்சப் பொருளைத் தந்தது.
வெந்திறலினான் விரல் வழுதியோடு; இங்கே திரலினால் என்னும் குறிப்பு வினைமுற்று திறலினனாகிய எனப்பெயரெச்சப் பொருளைத் தந்தது.
----
- தேர்வு வினா
282. வினைமுற்றுக்கள் எச்சப் பொருளை தருதல் இல்லையோ?
இருவகைவினைக் குறிப்பு
283. வினாக்குறிப்புச் சொற்கள், ஆக்கவினைக் குறிப்பும் இயற்கை வினைக்குறிப்பும் என இரு வகைப்படும்.
அவற்றுள், ஆக்கவினைக் குறிப்பாவது காரணம்பற்றி வரும் வினைக்குறிப்பாம் அதற்கு ஆக்கச்சொல் விருந்தாயினும் தொக்காயினும் வரும்.
உதாரணம்.
கல்வியாற் பெரியனாயினான் கல்வியாற் பெரியன்
கற்றுவல்லராயினார் கற்றுவல்லர்
இயற்கை வினைக்குறிப்பாவது காரணப்பற்றாது இயற்கையை உணர்த்தி வரும் வினைக்குறிப்பாம், அது ஆக்கச்சொல் வேண்டாதே வரும்.
உதாரணம்.
நீர் தண்ணிது
தீ வெய்து
----
- தேர்வு வினாக்கள்
283. வினைக்குறிப்புச் சொற்கள் இன்னும் எத்தனை வகைப்படும்? ஆக்கவினைக்குறிப்பாவது யாது? இயற்கை வினைக்குறிப்பாவது யாது?
தெரிநிலை வினைப்பகுப்பு
284. தெரிநிலை வினைச் சொற்கள், செயப்பாடு பொருள் குன்றிய வினை, செயப்பாடு பொருள், குன்றாத வினை, எ-ம். தன்வினை, பிறவினை, எ-ம். செய்வினை, செயப்பாட்டு வினை, எ-ம். வௌ;வேறே வகையிற் பிரிவுபட்டு வழங்கும்.
285. செயப்படுபொருள் குன்றிய வினையாவது, செயப்பாடு பொருளை வேண்டாது. வரும்முதனிலை அடியாகத் தோன்றிய வினையாம்.
உதாரணம்.
நடந்தான், வந்தான், இருந்தான், உறங்கினான்.
இவை, இதை நடந்தான், இதை வந்தான் எனச் செயப்படு பொருளேற்று வாராமை காண்க.
286. செயப்படு பொருள் குன்றாத வினையாவது செயப்படுபொருளை வேண்டி நிற்கும் முதனிலை அடியாகத் தோன்றிய வினையாம்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 29 | 30 | 31 | 32 | 33 | ... | 45 | 46 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலக்கணச் சுருக்கம், Ilakkana Surukkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

