இலக்கணச் சுருக்கம்

உதாரணம்.
நடந்தானை, குழையானை, குழையினனை, எ-ம். நடந்தோன், குழையோன், நடந்தவன், குழையவன், எ-ம். நடந்தன, குழையன, எ-ம். நடந்தவை, குழையவை. எ-ம். வரும்.
தேர்வு வினா - 294. விணையாலணையும் பெயர்கள் எங்ஙனம் வரும்.
வினையியல் முற்றிற்று
3. இடையியல்
295. இடைச்சொல்லாவது, பெயரும் வினையும் போலத் தனித்து நடக்கும் ஆற்றல் இல்லாததாய், அப்பெயரையும் வினையையுஞ் சார்ந்து வருஞ் சொல்லாம்.
தேர்வு வினா - 295. இடைச் வொல்லாவது யாது?
இடைச்சொற்களின் வகை
296. இடைச் சொல்: 1. வேற்றுமையுருபுகள், 2. விகுதியுருபுகள், 3. இடைநிலையுருபுகளும், 4. சாரியையுருபுகளும், 5. உவமவுருபுகளும், 6. பிறவாறு தத்தமக்கரிய பொருள்களை உணர்த்தி வருபவைகளும், 7. ஒலி, அச்சம், விரைவு இவற்றைக் குறிப்பால் உணர்த்தி வருபவைகளும், 8. இசை நிறையே பொருளாக நிற்பவைகளும் என, ஒன்பது வகைப்படும்.
இவைகளுள், வேற்றுமையுருபுகள் பெயரியலிலும், விகுதியுருபுகளும் இடைநிலையுருபுகளுஞ் சாரியையுருபுகளும் பதவியலிலுஞ் சொல்லப்பட்டன.
இசைநிறை என்பது, வேறுபொருள் உணர்த்தாது செய்யுளில் ஓசையை நிறைத்து நிற்பது.
அசை நிலை என்பது, வேறு பொருள் உணர்த்தாது பெயர்ச்சொல்லோடும் வினைச்வொல்லோடுஞ் சார்த்திச் சொல்லப்பட்டு நிற்பது. அசைத்தல் - சார்த்துதல்.
-----
- தேர்வு வினாக்கள்
296. இடைச் சொல் எத்தனை வகைப்படும்? இசை நிறையென்பது யாது? அசைநிலையென்பது யாது?
உவமைவுருபிடைச் சொற்கள்
297. உவமைவுருபிடைச் சொற்களாவன, போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏயப்ப, நேர, நிகர, பொருவ, அன்ன, அனைய முதலியனவாம்.
இவைகளுள்ளே, போல எனபது முதலிய பதினொன்றும், இடைச் சொல்லடியாகப் பிறந்த வினையெச்ச வினைகள. அவைகளிலே, போல், புரை, ஒ, உறழ, மான், கடு, இயை, ஏய், நேர், நிகர், பொரு என்னு முதனிலைகளே இடைச் வொற்கள்.
அன்ன, அனைய என்பவைகள், இடைச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினைக் குறிப்புக்கள் அவைகளிலே, அ என்னு முதனிலையே இடைச்சொல் அன்ன என்பதில் னகரமெய் சாரியை: அனைய என்பதில் னகரமெய்யும் ஐகாரமும் சாரியை.
-----
- தேர்வு வினாக்கள்
297. உவமவுருபிடைச் சொற்களாவன எவை?
இவைகளுள்ளே, இடைச் சொல் அடியாகப் பிறந்த வினையெச்ச வினைகள் எவை?
அவைகளிலே இடைச் சொற்கள் எவை? இடைச் சொல் அடியாகப் பிறந்த பெயரெச்ச வினைக்குறிப்பக்கள் எவை? அவைகளிலே எது இடைச் சொல்?
தத்தம் பொருளை உணர்த்தும் இடைச்சொற்கள்
298. பிறவாறு தத்தமக்குரிய பொருள்களை உணர்த்தி வருமென்ற இடைச்சொற்கள், ஏ, ஒ, உம் முதலியவைகளாம்.
299. ஏகாரவிடைச் சொல், தேற்றமும், வினாவும், எண்ணும் பிரிநிலையும், எதிர்மறையும் இசைநிறையும், ஈற்றசையுமாகிய ஏழுபொருளையுந் தரும்.
தேற்றம் உண்டேகடவுள், இங்கே உண்டென்பதற்கு
ஐயமில்லை என்னுந் தெளிவுப்பொருளைத்
தருதலாற் றேற்றம்.
வினா நீயே கொண்டாய். இங்கே நீயா கொண்டாய்
என்னும் பொருளைத் தருமிடத்து வினா
எண் நிலமே நீரே தீயே வளியே. இங்கே நிலமும் நீருந்
தீயும் வளியும் எனப் பொருள்பட எண்ணி நிற்றல் எண்.
பிரிநிலை அவருளிவனே கள்வன், இங்கே ஒரு கூட்டத்தி
னின்றும் ஒருவனைப் பிரித்து நிற்றலாற் பிரிநிலை.
எதிர்மறை நானே கொண்டேன். இங்கே நான் கொள்கிலேன்
என்னும் பொருளைத் தருமிடத்து எதிர்மறை.
இசைநிறை ’’ஏயே யிவலொருத்தி பேடியோ வென்றார்.’’ இங்கே வேறு பொருளின்றிச் செய்யுளில் இசை நிறைத்து நிற்றலால் இசை நிறை.
ஈற்றசை ’’ என்றுமேத்தித் தொழுவோ மியாமே.’’ இங்கே
வேறு பொருளின்றி இறுதியிலே சார்த்தப்பட்டு
நிற்றலால் ஈற்றசை.
300. ஒகாரவிடைச் சொல், ஒழியிசையும், வினாவும், சிறப்பும், எதிhடமறையும், தெரிநிலையும், கழிவும், பிரிநிலையும், அசைநிலையுமாகிய எட்டுப் பொருளையந் தரும்.
சிறப்பு உயர்வுசிறப்பும் இழிவுசிறப்பும் என இரு வகைப்படும். உயர்வுசிறப்ப ஒரு பொருளினது இழிவைச் சிறப்பித்தல. இங்கே சிறப்பித்தல் என்றது, உயர்வேயாயினும் இழிவேயாயினும் இழிவேயாயினும் அதனது மிகுதியை விளக்குதல்.
(உதாரணம்)
ஒழியிசை படிக்கவோ வந்தாய். இங்கே படித்தற்கன்று
விளையாடுதற்கு வந்தாய் என ஒழிந்த சொற்களைத்
தருவதால் ஒழியிசை
வினா குற்றியோ மகனோ. இங்கே குற்றியா மகனா என
வினாப் பொருளைத் தருதலால் வினா.
உயர்வு சிறப்பு ஒஓ பெரியன். இங்கே ஒருவனது பெருமையாகிய
உயர்வின் மிகுதியை விளக்குதலால் உயர்வுசிறப்பு
இழிவு சிறப்பு ஒஓ கொடியன். இங்கே ஒருவனது
கொடுமையாகிய இழிவின் மிகுதியை
விளக்குதலால் இழிவு சிறப்பு
எதிர்மறை அவனோ கொண்டான். இங்கே கொண்டிலன்
என்னும் பொருளைத் தருமிடத்து எதிர்மறை
தெரிநிலை ஆணோ அதுவுமன்று. பெண்ணோ அதுவுமன்று
இங்கே அத்தன்மையில்லாமையைத் தெரிவித்து நிற்றலாத் தெரிநிலை.
கழிவு உறுதியுணராது கெட்டாரை ஒஓ தமக்கோருறுதி யுணராரோ எனன்னுமிடத்துக் கழிவிரக்கப்பொருளைத் தருதலாற் கழிவு. கழிவிரக்கம் - கழிந்ததற்கிரங்குதல்
பிரிநிலை இவனோ கொண்டான். இங்கே பலருணின்றும் ஒருவணைப்பிரித்து நிற்குமிடத்துப் பிரிநிலை
அசை நிலை காணிய வம்மினோ இங்கே வேறு பொருளின்றிச் சார்த்தப்பட்டு நிற்றலால் அசை நிலை.
301. உம் என்னுமிடைச் சொல், எதிர்மறையும், சிறப்பும், ஐயமும், எச்சமும், முற்றும், எண்ணும், தெரிநிலையும் ஆக்கமுமாகிய எட்டுப் பொருளையுந் தரும்.
எச்சம், இறந்தது தழீஇய எச்சமும், எதிரது தழீஇய எச்சமும் என இரு வகைப்படும்.
உதாரணம்.
எதிர்மறை களவு செய்யினும் பொய்கூறலை யொழிக.
இங்கே களவு செய்யலாகாது என்னும் பொருளைத்
தருதலால் எதிர்மறை
உணர்வு சிறப்பு குறவருமருளுங்குன்றம். இங்கே குன்றியுனுயர்வைச் சிறப்பித்தலால் உயர்வுச் சிறப்பு.
இழிவு சிறப்பு புலையனும் விரும்பாப் புன்புலால் யாக்கை. இங்கே உடம்பினிழிவைச் சிறப்பித்தலால் ஐயம்.
ஐயம் அவன் வெல்லினும் வெல்லும். இங்கே துணியாமையை உணர்தலால் ஐயம்.
எச்சம் சாத்தனும் வந்தான். இங்கே கொற்றன் வந்ததன்றி என்னும் பொருளைத்தந்தால் இறந்தது தழீஇயவெச்சம். இனிக் கொற்றனும் வருவான் என்னும் பொருளைத்தந்தால் எதிரது தழீஇயவெச்சம்.
முற்று எல்லாரும் வந்தார். இங்கே எஞ்சாப்பொருளைத் தருதலால் முற்று.
எண் இராவும் பகலும். இங்கே எண்ணுதற்கண் வருதலால் எண்;.
தெரிநிலை ஆணுமன்று, பெண்ணுமன்று. இங்கே இன்னதெனத் தெரிவித்து நிற்றலால் றெரிநிலை
ஆக்கம் பாலுமாயிற்று. இங்கெ அதுவே மருதுமாயிற்று என்னும் பொருளைத்தருவதால் ஆக்கம்.
302.எதிர்மறை வினை அடுத்து வருமிடத்து முற்றும்மை எச்சவும்மையுமாம்.
உதாரணம்.
எல்லாரும் வந்திலர். அவர் பத்துங் கொடார்.
இங்கே, சிலர் வந்தார், சில கொடுப்பார் எனவும் பொருள் படதலால், எச்சவும்மையுமாயிற்று.
303. எச்சவும்மையாற் றழுவப்படம் பொரட் சொல்லில் உம்மையில்லையாயின், அச் சொல் எச்ச வும்மையோடு கூடிய சொற்கு முதலிலே சொல்லப்படும்.
உதாரணம்.
சாத்தன் வந்தான்; கொற்றனும் வந்தான்.
இங்கே சாத்தன் எச்சவும்மையாற் றழுவப்படு பொருள்
304. என, என்று என்னும் இரண்டிடைச் சொற்களும் வினையும், பெயரும், எண்ணும், பண்பும், குறிப்பும், இசையும், உவமையும் ஆகிய ஏழபொருளிலும் வரும்.
உதாரணம்.
வினை மைந்தன் பிறந்தானெனத் தந்தையுவந்தான் இங்கே வினையோடியைந்தத.
பெயர் அழுக்கா றெனவொரு பாவி. இங்கே பெயரோடியைந்நது.
எண் நிலமென நீரெனத் தீயென வளியென வானெனப் பூதங்களைந்து, இங்கே என்ணோ டியைந்தது.
பண்பு வெள்ளென விளர்த்தது. இங்கே பண்போ டியைந்தது.
குறிப்பு பொள்ளென வாங்கே புறம் வேரார். இங்கே குறிப்போ டியைந்தது.
இசை பொம்மென வண்டலம்பும் புரிகுழலை. இங்கே இசையோ டியைந்தது.
உவமை புலி பாய்தெனப் பாய்ந்தான். இங்கே உவமையோ டியைந்தது.
என்று என்பதையும் இப்படியே இவைகளோடும் ஒட்டிக்கொள்க
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 31 | 32 | 33 | 34 | 35 | ... | 45 | 46 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலக்கணச் சுருக்கம், Ilakkana Surukkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

