இலக்கணச் சுருக்கம்

213. ஏழாம் வேற்றுமையினுடைய உருகள்,
கண், இல், உள், இடம் முதலியனவாம்.
இவை வினையையும், வினையோடு பொருந்நும் பெயரையுங் கொள்ளும்.
இவ்வுருபுகள், தம்மையேற்ற பொருள். இடம், காலம். சினை, குணம், தொழில் என்னும் ஆறு வகைப் பெயர்பொருளையும், வருமொழிப் பொருளாகிய தற்கிழமைப் பொருளுக்காயினும், பிறிதின்கிழமைப் பொருளுக்காயினும் இடப்பொருளாக, வேறுபடுத்தும். அப்படி வேறுப்பட்ட இடப்பொருளே இவ்வுருபுகளின் பொருளாம்.
(உதாரணம்)
மணியின் கணிருகின்ற தொளி
பனையின்கண் வாழ்கின்றதன்றில் தற் பிறி பொருளிடமாயிற்று
ஊரின் கணிருக்குமில்லம்
ஆகாயத்தின்கட் பறக்கின்றது பருந்து தற் பிறி இடமிடமாயிற்று
நாளின் கணாழிகையுள்ளது
வேனிற்கட்பாதிரி ப10க்கும் தற் பிறி காலமிடமாயிற்று
கையின் கணுள்ளது விரல்
கையின்கண் விளங்குகின்றது கடகம் தற் பிறி சினையிடமாயிற்று
கறுப்பின்கண் மிக்குள்ளதழகு
இளமையின்கண் வாய்த்தது செல்வம் தற் பிறி குணமிடமாயிற்று
ஆடற்கணுள்ளது சதி
ஆடற்கட்பாடப்பட்டது பாட்டு தற் பிறி தொழிவிடமாயிற்று
மற்றவைகளும் இப்படியே
214. எட்டாம் வேற்றுமையினுடைய உருபுகள், படர்க்கைப் பெயாPற்றில் ஏ ஓ மிகுதலும், அவ்வீறு திரிதலும், கெடுதலும், இயல்பாதலும், ஈற்றயலெழுத்துத் திரிதலுமாம்.
இவை ஏவல் வினையைக் கொள்ளும்.
இவ்வுருபுகள், தம்மையேற்ற பெயர்ப் பொருளை முன்னிலையின் விளிக்கப்படுபொருளாக, வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட விளிக்கப்பட்ட பொருளே இவ்வுருபுகளின் பொருளாம். விளித்தல் - அழைத்தல்.
(உதாரணம்)
சாத்தனே ஏ மிகுந்து
அப்பனோ வுண்ணாய் ஓ மிகுந்து
வேனிலாய் கூறாய் ஈறு திரிந்தது
தோழ சொல்லாய் ஈறு கெட்டது
பிதா வாராய் ஈறியல்பாயிற்று
மக்கள் கூறிர் ஈற்றயலெழுத்துத் திரிந்தது.
215. நுமன், நுமள், நுமர் என்னுங் கிளைப் பெயாகளும். எவன் முதலிய வினைப் பெயர்களும், அவன் முதலிய சுட்டுப் பெயர்களும், தான், தாம், என்னும் பொதுப் பெயர்களும், மற்றையான், பிறன் முதலிய மற்றுப் பிற என்பன அடியாக வரும் பெயர்களும் விளி கொள்ளாப் பெயர்களாம்.
216. சிறுபான்மை ஒரு வேற்றுமையுருபு நிற்றற் குரிய விடத்தே, மற்றதொரு வேற்றுமையுருபு மயங்கி வரும்; வரின் அவ்வுருபைப் பொருக்கியைந்த உருபாகத் திரித்துக் கொள்ள வேண்டும்.
உதாரணம்.
ஆலத்தினாலமிர்தமாக்கிய கோன்; இங்கே ஐயுருபு நிற்றற்குரிய விடத்தில் ஆலுருபு மயங்கிற்று.
காலத்தினாற் செய்த நன்றி; இங்கே கண்ணுருபு நிற்றற்குரிய விடத்தில் ஆனுருபு மயங்கிற்று.
நாகுவேயொடு நக்கு வீங்கு தோள்; இங்கே ஐயுருபு நிற்றற் குரிய விடத்தில் ஓடுருபு மயங்கிற்று.
ஈசற்கியான் வைத்தவன்பு; இங்கே கண்ணுருபு நிற்றற்குரிய விடத்தில் குவ்வுருபு மயங்கிற்று.
217. ஒரு வேற்றுமைப் பொருள் மற்றொரு வேற்றுமை யுருபோடுந் தகுதியாக வருதலும் உண்டு.
உதாரணம்.
சாத்தனோடு சேர்ந்தான்; இங்கே செயப்படு பொருள் மூன்றனுருபோடு வந்தது.
மதுரையை நீங்கினான்; இங்கே நீங்கப் பொருள் இரண்டனுருபோடு வந்தது.
சீர்காழிக்கு வடக்குச் சிதம்பரம்; இங்கே எல்லைப் பொருள் நான்கனுருபோடு வந்தது.
வழியைசல் சென்றான்; இங்கே இடப் பொருள் இரண்டனுருபோடு வந்தது.
இன்னும் இப்படி வருவனவற்றையெல்லாம் ஆராய்ந்தறிந்து கொள்க.
-
தேர்வு வினாக்கள்
206. பெயர்களனைத்தும் எத்தனை வேற்றுமைகளை ஏயற்கும்?
முதல் வேற்றுமை எப்படிப் பெயர் பெறும்?
எட்டாம் வேற்றுமை எப்படிப் பெயர் பெறும்?
207. முதல் வேற்றுமையினது உருபு யாது?
வேற்றமையுருபினாலே கொள்ளப்படுஞ் சொல் எப்படிப் பெயர் பெறும்?
எழுவாய் வேற்றுமையுருபு செ; சொற்களை பயனிலையாகக் கொள்ளும்?
எழுவாய்யுருபுக்குப் பொருள் என்ன?
வினைமுதற்குப் பரியாய நாமங்கள் எவை?
எழுவாய்க்கு எவை சொல்லுருபாக வரும்?
208. இரண்டாம் வேற்றுமையினது உருபு யாது?
இவ்வையுருபு எவைகளைப் பயனிலையாகக் கொள்ளும்?
ஐயுருபுக்கு பொருள் என்ன? செயப்படுபொருட்குப் பரியாய நாமங்கள் எவை?
செயப்படு பொருள் எத்தனை வகைப்படம்?
209. மூன்றாம் வேற்றுமையினுடைய உருபுகள் எவை?
இம் மூன்றாம் வேற்றமையுருபுகள் எதனை பயனிலையாகக் கொள்ளும்?
இவைகளுள் ஆல், ஆன் என்னும் இரண்டுருபுகளுக்கும் பொருள் என்ன?
கருவியென்பதற்குப் பாரியாய நாம் என்ன?
கருவி எத்தனை வகைப்படும்? கருத்தா எத்தனை வகைப்படும்?
ஓடு, ஒடு என்னும் இரண்டுருபுகளுக்கும் பொருள் என்ன?
ஆல், ஆன் உருபுகள் நிற்றற்குரிய விடத்து எது சொல்லுருபாக வரும்?
ஓடு, ஒடு உருபுகள் நிற்றற்குரிய விடத்து எது சொல்லுருபாக வரும்?
210. நான்காம் வேற்றுமையினது உருபு யாது?
இக் குவ்வுருபு எவைகளைப் பயனிலையாகக் கொள்ளும்?
குவ்வுருபுக்கு பொருள் என்ன?
குவ்வுருபு நிற்றற்குரிய விடத்தே எவை சொல்லுருபாக வரும்?
211. ஐந்தாம் வேற்றுமையினுடைய உருபுகள் யாவை?
இவ்வைந்தாம் வேற்றுமையுருபுகள் எவைகளைப் பயனிலையாகக் கொள்ளும்?
ஐந்தாம் வேற்றுமையுருபுகளுக்கு பொருள் என்ன?
நீக்கப் பொருளினும், எல்லைப் பொருளினதும் எவை சொல்லுருபுகளாக வரும்?
எல்லைப் பொருளிலே வேறு சொல்லுருபுகள் வாராமோ?
212. ஆறாம் வேற்றுமையினுடைய உருபுகள் யாவை?
இவ்வாறாம் வேற்றுமைகளுள், எவ்வெவை எவ்வெச் சொல்லைப் பயனிலையாகக் கொள்ளம்?
ஆறாம் வேற்றுமையுருபுகளுக்கு பொருள் என்ன?
தற்கிழமைப் பொருளாவது யாது? அத் தற்கிழமைப் பொருள் எத்தனை வகைப்படும்?
பிறிதின்கிழமைப் பொருளாவது யாது?
அப்பிறிதின்கிழமைப் பொருள் எத்தனை வகைப்படும்?
ஆறாம் வேற்றுமையுருபுகள் நிற்றற்குரிய இடங்களில் எது சொல்லுருபாக வரும்?
அது வுருபு உயர்திணை யொருமை பன்மைப் பெயர்களைக் கொள்ளுதலில்லையோ?
இவ் வீடெனது, அத்தோட்டமவனது, என வருவனவற்றில் அது என்பது ஆறாம் வேற்றுமை உருபு தானோ?
213. ஏழாம் வேற்றுமையினுடைய உருபுகள் யாவை?
ஏழாம் வேற்றுமையுருபுகள் எவைகளைப் பயனிலைகளாகக் கொள்ளும்?
ஏழாம் வேற்றுமையுருபுகளுக்கு பொருள் என்ன?
214. எட்டாம் வேற்றுமையுருபுகள் யாவை?
எட்டாம் வேற்றுமையுருபுகள் எதனைப் பயனிலையாகக் கொள்ளும்?
எட்டாம் வேற்றுமையுருபுகளுக்குப் பொருள் என்ன?
215. இவ்விளியுருபுகளை ஏலாப் பொருள்களும் உளவோ?
216. ஒரு வேற்றுமையுருபு நிற்றற்குரிய விடத்தே மற்றொரு வேற்றுமையுருபு மயங்கி வருதல் உண்டோ?
217. ஒரு வேற்றுமைப் பொருள் மற்றொரு வேற்றுமையுருபோடுந் தகுதியாகவருதலும் உண்டோ?
-----
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 20 | 21 | 22 | 23 | 24 | ... | 45 | 46 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலக்கணச் சுருக்கம், Ilakkana Surukkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

