இலக்கணச் சுருக்கம்

208. இரண்டாம் வேற்றுமையினது உருபு ஐயொன்றேயாம்.
இது வினையையும், வினைக்குறிப்பையுங் கொள்ளும்.
இவ்வையுருபு தன்னையேற்ற பெயர்ப்பொருளைச் செயற்படு பொருளாக வேறுபடுத்தும், அப்படி வேறுபட்ட செயற்பட பொருளே இவ்வுருபின் பொருளாம்.
செயப்படுபொருள், கருமம், காரியம், என்பன ஒரு பொருட் சொற்கள்.
அச்செயற்படு பொருளானது, ஆக்கப்படுபொருள், அழிக்கப்படு பொருள், அடையப்பட பொருள், ஒக்கப்படபொருள், உடமைப்பொருள், முதலியனவாகப் பல திறக்கப்படும்.
(உதாரணம்)
குடத்தை வனைந்தான் - ஆக்கப்படு பொருள்
கோட்டையைப் பிடித்தான் - அழிக்கப்படு பொருள்
ஊரையடைந்தான் - அடையப்படுபொருள்
மனைவியைத் துறந்தான் - துறக்கப்படு பொருள்
புலியையொத்தான் - ஒக்கப்படுபொருள்
பொன்னையுடையான் - உடைமைப் பொருள்
209. மூன்றாம் வேற்றுமையினுடை உருபுகள் ஆல், ஆன், ஒடு, ஓடு என்பனவைகளாம்.
இவை வினையைக் கொள்ளும்.
இவ்வுருபுகளுள், ஆன், ஆன் என்னும் இரண்டுருபுகளும, தம்மையேற்ற பெயர்ப் பொருளைக், கருவிய பொருளாகவும், கருதாப்பொருளாகவும், வேறுபடுத்தும் அப்படி வேறு பட்ட கருவிப் பொருளுங் கருதாப்பொருளும் இவ்வுருபுகளின் பொருளாம். கருவி, காரணம் என்பன ஒரு பொரட் சொற்கள்.
கருவி, முதற்கருவி, துணைக்கருவி, என இருவகைப்படும். கருத்தாவும், இயற்றுதற்கரத்தா, ஏவுதற் கருத்தா என இரு வகைப்படும்.
ஒடு, ஓடு என்னும் இரண்டுருபுகளும், தம்மையேற்ற பெயர்ப்பொருளை உடனிகழ்ச்சிப் பொருளாக வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட உடனிகழ்ச்சிப் பொருளே இவ்வுருபு களின் பெர்ருளாம்.
(உதாரணம்)
மண்ணாலாகிய குடம்
மண்ணனாகிய குடம் முதற்கருவி
திரிகையாலாகிய குடம்
திரிகையானாகிய குடம் துணைக்கருவி
தச்சனாலாகிய கோயில்
தச்சனானாகிய கோயில் இயற்றுதற்கருத்தா
அரசனாலாகிய கோயில்
அரசனானாகிய கோயில் ஏவுதற்கருத்தா
மகனோடு தந்தை வந்தான்
மகனொடு தந்தை வந்தான் உடனிகழ்ச்சிப் பொருள்
இவ்வுருபுகளுள், ஆல், ஆன் உருபுகள் நிற்றற்குரிய விடத்துக் கொண்டென்பதும், ஓடு, ஒடு உருபுகள் நிற்றற்குரிய விடத்து உடனென்பதுஞ் சொல்லுருபுகளாக வரும்.
உதாரணம்.
வாள் கொணடு வெட்டினான்
தந்தையுடன் மைந்தன் வந்தான்
210. நான்காம் வெற்றுமையினது உருபு குவ்வொன்றேயாம்.
இது வினையையும் வினையோடு பொருந்தும் பெயரையுங் கொள்ளும்.
இக்குவ்வுருபு, தன்னையேற்ற பெயர்ப் பொருளைக் கோடற்பொருளாகவும், பகைதொடர் பொருளாகவும், நட்புத் தொடர் பொருளாகவும், தகுதியுடை பொருளாகவும், முதற்காரண காரியப்பொருளாகவும், நிமித்த காரண காரியப்பொருளாகவும், முறைக்கியை பொருளாகவும். வேறுபடுத்தும். அப்படி வேறு பட்ட கொடற் பொருண் முதலியன இவ்வுருபின் பொருள்களாம்.
(உதாரணம்)
இரப்பவர்க்குப் பொன்னைக் கொடுத்தாள் - கோடற்பொருள்
பாம்புக்குப் பகை கருடன் - பகைத்தொடர்ப் பொருள்
சாத்தனுக்குத் தோழன் கொற்றன் - நட்புத் தொடர் பொருள்
அரர்க்குரித் தருங்கலம் - தகுதியுடைபொருள்
குண்டலத்திற்கு வைத்த பொன் - தகுதியுடைப் பொருள்
கூலிக்கு வேலை செய்தான் - நிமித்தகாரணகாரியப் பொருள்
சாத்தனுக்கு மகனிவன் - முறைக்கியை பொருள்
குவ்வுருபு நிற்றற் குரிய சில விடயங்களிலே, பொருட்டு நிமித்தம் என்பனவும், குவ்வுருபின்மேல் ஆகவென்பதுஞ் சொல்லுருபுகளாக வரும்.
உதாரணம்.
கூழின் பொருட்டு வேலை செய்தான்
கூலியினிமித்தம் வேலை செய்தான்
கூலிக்காக வேலை செய்தான்
211. ஐந்தாம் வேற்றுமையினுடைய உருபுகள் இன், இல் என்பனவாகும்.
இவை வினையையும், வினையோடு பொருந்தும் பெயரையுங் கொள்ளும்.
இவ்வுருபுகள், தம்மையேற்ப பெயர்ப்பொருளை நீக்கப் பொருளாகவும், ஒப்புப்பொருளாகவும், எல்லைப் பொருளாகவும், ஏதுப்பொருளாகவும், வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட நீக்கப் பொருள் முதலியன இவ்வுருபுகளின் பொருள்கலாம்.
உதாரணம்.
மலையின் வீழருவி
மலையில் வீழருவி நீக்கப் பொருள்
பாலின் வெளிது கொக்கு
பாலில் வெளிது கொக்கு ஒப்புப் பொருள்
சீர்காழியின் வடக்குச் சிதம்பரம்
சீர்காழியில் வடக்குச் சிதம்பரம் எல்லைப் பொருள்
கல்வியினுயர்ந்தவன் கம்பன்
கல்வியிலுயர்ந்தவன் கம்பன் ஏதுப் பொருள்
பாலின் வெளிது கொக்கு என்னுமிடத்து, உயர்வு கருதின் எல்லைப் பொருளாம்.
நீக்கப்பொருளினும். எல்லைப் பொருளினும், இன், இல், உருபுகளின் மேல், நின்று, இருந்து என்பவை, உம் பெற்றும், பெறாதுஞ் சொல்லுருபுகளாக வரும்.
உதாரணம்.
நீக்கப்பொருள்
ஊரினின்றும் போயினான், ஊரினின்று போயினான்
ஊரிலிருந்தும் போயினான், ஊரிலிருந்தும் போயினான்
எல்லைப் பொருள்
காட்டினின்றுமூர் காவதம், காட்டினின்றூர் காவதம்
காட்டிலிருந்துமூர் காவதம், காட்டிலிருந்துமூர் காவதம்
ஒரொவிடத்து எல்லைப் பொருளிலே, காட்டிலும் பார்க்கிலும் என்பவைகள், முன் ஐகாரம் பெற்றுச் சொல்லுருபுகளாக வரும்.
உதாரணம்.
அவனைக் காட்டிலும் பெரியவனிவன்
இவனைக் காட்டிலும் சிறியனவன்
212. ஆறாம் வேற்றுமையினுடை உருபுகள் அது, ஆது, ஏ என்பனவாம்.
இவைகளுள், அது, ஆது உருபுகள் அஃறிணை யொருமைப் பெயரையும், அ உருபு அஃறிணைப் பன்மைப் பெயரையுங் கொள்ளும்.
உதாரணம்.
சாத்தனது கை, தனது கை, தன கைகள்
இவ்வுலுபுகள், தம்மையேற்ற பெயர்ப்பொருளை வருமொழிப் பெயராகி தற்கிழமைப் பொருளோடும் பிறிதின் கிழமைப் பொருளோடுஞ் சம்பந்த முடைய பொருளாக, வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட சம்பந்தப்பொருளே இவ்வுருபுகளின் பொருளாம்.
தற்கிழமைப் பொருளாவது, தன்னோடு ஒற்றுமையுடைய பொருள். அது, உறுப்பும், பண்பும், தொழிலும், ஒன்றன் கூட்டமும், பலவின் கூட்டமும், ஒன்று திரிந்தொன்றாயதும் என, ஆற் வகைப்படும்.
(உதாரணம்)
சாத்தானது கை - உறுப்புத்தற்கிழமை
சாத்தனது கருமை - பண்புதற்கிழமை
சாத்தனது வரவு - தொழிற்றற்கிழமை
நெல்லது குப்பை - ஒன்றன்கூட்டற்தற்கிழமை
சேனையது தொகுதி - பலவின்கூட்டத்தற்கிழமை
மஞ்சளது பொடி - ஒன்று திரிந்தொன்றாயதன் தற்கிழமை
பிறிதின்கிழமைப் பொருளாவது, தன்னின் வேறாய் பொருள். அது, பொருள், இடம், காலம், என மூவகைப்படும்.
(உதாரணம்)
முருகனது வேல் - பொருட்பிறிதின் கிழமை
முருகனது மலை - இடப்பிறிதின்கிழமை
மாரனது வேனில் - காலப்பிறிதின் கிழமை
இவ்வுருபுகள் நிற்றற்குரிய இடங்களில், உடைய என்பது சொல்லுருபாக வந்து, இரு திணையொருமை பன்மைப் பெயரையுங் கொள்ளும்.
உதாரணம்.
சாத்தனுடைய புதல்வன், சாத்தனுடைய புதல்வர்
சாத்தனுடைய வீடு, சாத்தனுடைய வீடுகள்
சிறு பான்மை அதுவுருபு, அரனது தோழன், நினதடியாரொடல்லால் என உயர்திணையொருமை பன்மைப் பெயர்களையுங் கொள்ளுமென வறிக.
இவ்வீடானது, அத்தோட்டமவனது என வவுருவன வற்றில், எனது, அவனது, என்பன துவ்விகுதியும் அகராச்சாரியையும் பெற்று நின்ற குறிப்பு வினை முற்று. எனது போயிற்று, அவனதை வாங்கினேன், என வருவனவற்றில், எனது, அவனது என்பன, மேற்கூறியபடி வந்த குறிப்பு விணையாலணையும் பெயர். இங்ஙணமன்றி, இவ்விடங்களில் வரும் அது என்பது ஆறாம் வேற்றுமையுருபன்று.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 45 | 46 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலக்கணச் சுருக்கம், Ilakkana Surukkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

